- 4
- 20250122
- by KIRUBAN JOSHUA
- 6 months ago
- 0
Aug 3, 2024, 8:02 PM
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 38). இவரது கணவர் ரமேஷ். கருத்து வேறுபாடு காரணமாக ரமேசும், ஈஸ்வரியும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரி தனது மகனோடு தனியாக வசித்து வந்த அப்பகுதியில் பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் ஈஸ்வரி கடந்த 1ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் ஆள்நடமாட்டம் இருக்கும் போதே ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஈஸ்வரியை சராமாறியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஈஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனி படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட உத்தரவிட்டார். இதனையடுத்து எஸ்பி ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் பொரவாச்சேரியை சேர்ந்த ராஜா என்பவரையும், வெளிப்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்கின்ற கருப்பசாமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த ஈஸ்வரியின் அக்கா கணவர் தான் ராஜா என்பதும் தெரியவந்தது.
ராஜா ஈஸ்வரியை திருமணம் செய்வதற்காக பெண் பார்க்க சென்று கடைசியில் ஈஸ்வரியின் அக்காவை திருமணம் முடித்ததாகவும் கூறப்படுகிறது. அதில் இருந்து ஈஸ்வரிக்கும், ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த ஈஸ்வரியின் கணவர் ராஜா பிரிந்து சென்றுவிட்ட நிலையில் ராஜா, ஈஸ்வரி இடையேயான உறவு தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் ஈஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக ராஜா உடனான உறவை விட்டுவிட்டு மற்றொருவரோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா மற்றொருவருடான உறவை விட்டு விடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் ஈஸ்வரி அதை கேட்காமல் தொடர்ந்து வேறரொருவருடன் பழகி வந்ததாகவும், ராஜாவை வீட்டிற்கு வர கூடாது எனவும் கூறி உள்ளாதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா தனது நண்பர் வினோத் என்கின்ற கருப்பசாமியோடு சேர்ந்து ஈஸ்வரியை வெட்டிக் கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாவையும், வினோத்தையும் போலிசார் கைது செய்ய முற்பட்ட போது தப்பி ஓடிய ராஜா தடுக்கி விழுந்ததில் கை, கால்களில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து மாவு கட்டுப்போட்டு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.