ஆராதனை எப்படி செய்ய வேண்டும்
1) பரிசுத்த அலங்காரத்துடன் – சங் 29:2
2) மகிழ்ச்சியுடன் – சங் 100:2
3) பயத்துடன் – சங் 2:11
4) பக்தியோடு – எபி 12:28
5) தேவனுக்கு பிரியமாய் – எபி 12:28
6) உத்தம இருதயத்தோடு – 1 நாள 28:9
7) உற்சாக மனதோடு – 1 நாள 28:9
8) முழு இருதயத்தோடு – உபா 10:12
9) முழு ஆத்துமாவோடு- யோசுவா 22:5
10) உண்மையாய் – யோசுவா 24:14
11) உத்தமுமாய் – யோசுவா 24:14
12) களிப்போடு – உபா 28:47
13) இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து – சங் 116:13
14) ஆவியில் நிறைந்து – பிலி 3:3
15) ஆனந்த சத்தத்துடன் – சங் 100:2
16) ஸ்தோத்திர பலி செலுத்தி – சங் 116:17
17) அனுதினமும் – எபி 10:11
18) இடைவிடாமல் – தானி 6:20
19) இரவும் பகலும் – லூக் 2:37
ஆராதனை என்பது பாடல்கள் பாடுவதோ அல்லது சபைக்குச் செல்வதோ மட்டுமல்ல. அது பரிசுத்தம், பயபக்தி, மகிழ்ச்சி, உண்மை, முழு இருதயம், முழு ஆத்துமா, ஆவியின் நிறைவு ஆகியவற்றோடு தேவனை அணுகும் வாழ்க்கை முறையாகும். தேவன் விரும்பும் ஆராதனை வெளிப்புற சடங்குகளில் அல்ல; முழுமையாக அவருக்கே ஒப்புக்கொடுக்கப்பட்ட இருதயத்தில் இருக்கிறது.