1) நோவா: தேவன் நோவாவைக் காப்பாற்றியபோது அவருக்கு 600 வயது. நீதிமானாக இருந்த நோவாவை நீரில் மூழ்காத பேழை கட்டும், கப்பல் பொறியாளனாய் பயன்படுத்தினார்
தேவன். (ஆதியாகமம் 6:14, 7:6)
2) ஆபிரகாம்: ஆபிரகாமை கானான் தேசம் செல்ல அழைத்தபோது அவருக்கு 75 வயது. விக்கிரக ஊரில் மிகுந்த செல்வாக்கு நிறைந்தவரை காணாத கானான் தேசத்திற்கு அழைத்துச்சென்றார். விசுவாசத்தின் தகப்பனாக்கினார். (ஆதியாகமம் 12:1,15:6)
3) மோசே: தேவன் மோசையைக் கொண்டு இஸ்ரவேலை விடுதலையாக்க அழைத்த போது 80 வயது. ஆடுகள் மேய்த்தவனை 20 லட்சம் மனிதரை மேய்க்கும் தலைவன் ஆக்கினார். (யாத்திராகமம் 7:7)
4) காலேப் தேவன் காலேப்பை நிலத்தினால் ஆசீர்வதித்த போது அவருக்கு 85 வயது, 40 வருஷம் கால்நடையாய் நடந்தவனுக்கு மலை தேசம் கொடுத்து கானான் குடிமகன் ஆக்கினார். (யோசுவா 14:10)
5) அன்னாள்: புதிய ஏற்பாட்டில் அன்னாள் என்ற 84 வயதான விதவையைத் தீர்க்கதரிசியாகத் தேவன் பயன்படுத்தினார். (லூக்கா 2:36-38)
6)சகரியா எலிசபெத்து சகரியா, எலிசபெத்து பிள்ளை இல்லாத வயது சென்ற தம்பதிகளாய் இருந்தார்கள் மலடியாயிருந்தவளை மகனைப் பெற்ற தாயாக மாற்றினார். (லூக்கா 1:57)
நாம் கற்றுக்கொள்ளும் பாடம்: முதியவர்களை மறவாமல் முக்கியமாய் பயன்படுத்தினவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஒருவேளை நீங்கள் எனக்கு முதிர்வயதாகிவிட்டதே என்று நினைக்கலாம் ஆண்டவருக்கென்று சேவைசெய்ய ஆசை உங்கள் உள்ளத்தில் இருந்தால் உங்களையும் தேவன் பயன்படுத்துவார். ஆமென்!