பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் (வெளி 22:11)
தேவ பிள்ளைகளே பரிசுத்தத்தில் வளருகிறிர்களா ? பரிசுத்தத்தை காத்துக் கொள்ளுங்கள். எந்த பிரச்சனை வந்தாலும் நமது பரிசுத்தம் கெடக்கூடாது.
பேசுவது, நடப்பது, பார்ப்பது எல்லாவற்றிலேயும் பரிசுத்தம் காணப்பட வேண்டும். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பேதுரு 1:15)
“தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்” (1 தெச 4:7) பரிசுத்தத்திற்கு அழைக்கபட்ட நீ பரிசுத்தத்தில்தான் இருக்கிறாயா ? பரிசுத்தமாக ஜீவிக்க பல தடைகள் வரும். பரிசுத்தத்தை உங்கள் வாழ்க்கையில் நிலை நாட்ட முடிகிறதா ?
ஜெப நேரத்தில் உங்கள் பரிசுத்தத்தை அளந்து பாருங்கள்.”உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் (யோசுவா 3:5). பரிசுத்தம் இருதயத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் (மத் 5:8). “இருதயத்தில் இருந்து புறப்படுகிறதே மனுஷனை தீட்டுப்படுத்தும்” (மாற்கு 7:20,21) பரிசுத்தத்தை குறித்த ஜாக்கிரதை வேண்டும். இன்னும் பரிசுத்தம், இன்னும் பரிசுத்தம் என்ற எண்ணம் வேண்டும். நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள் உங்களை பரிசுத்தத்திற்கு நேராக நடத்துகிறதா ?
அநேக சபைகளில் பரிசுத்தத்தை குறித்து பேசுவது குறைந்து விட்டது. பாவத்தைக் குறித்து கண்டிப்பு பிரசங்கம் கிடையாது, பரிசுத்தத்தின் மேன்மையைக் குறித்த செய்தி இல்லை, சரீர ஒடுக்கத்தைப் பற்றிய செய்தி இல்லை. ஜென்ம சுபாவத்தோடு ஆராதனைக்குச் சென்றவர்கள், ஜென்ம சுபாவத்தோடு வீடு திரும்புகிறார்கள். பேதுருவின் பிரசங்கத்தை கேட்ட ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டார்கள் (அப்போ 2:37). பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் (பரிசுத்தமடையும்) இடம் சபை (எபேசு 4:12,13)
பேசும் வார்த்தை, நினைவு, நடக்கை, உபயோகிக்கும் பொருட்களில் பரிசுத்தம் காணப்பட வேண்டும். Phone ல் பேசுவது உங்கள் பரிசுத்தத்திற்கு, மற்றவர்கள் பரிசுத்தத்நிற்கு எவ்வாறு உள்ளது ? தேவ பிள்ளையே நீ உபயோகிக்கும் Phone யை குறித்து எச்சரிக்கையாக இரு. உலக பொருட்களை அனுபவிப்பதில் கவனம் வேண்டும். “நீதிமானே இரட்சிக்கபடுவது அரிது” (1 பேதுரு 4:18) என்று வேதம் கூறுகிறது.
பரிசுத்தத்தை குடும்பத்தில் நிலை நாட்ட வேண்டும். 2 பேரும் சேர்ந்து பரிசுத்தபட வேண்டும். மரணம் வரை பரிசுத்தம் இருக்க வேண்டும். “அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்” (சங்கீதம் 37:28) “பரிசுத்தவான்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறார்கள்” (உபா 33:3)
“பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங் 116:15).
“பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்” (சங்கீதம் 50:5) பரிசுத்தவான்கள் இயேசுவின் வருகையில் அவரிடம் சேர்க்கபடுவார்கள்