Skip to content
August 14, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • பாடல் பிறந்த கதை
  • அலை அலையாய் அலையினூடே – ஆசிரியர் இராபர்ட் சாம்ராஜ் | பாடல் பிறந்த கதை
  • பாடல் பிறந்த கதை

அலை அலையாய் அலையினூடே – ஆசிரியர் இராபர்ட் சாம்ராஜ் | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026 1 minute read
peter_fishing

பாடல்: அலை அலையாய் அலையினூடே
ஆசிரியர்: இராபர்ட் சாம்ராஜ்

பாடல்

அலை அலையாய் அலையினூடே
அல்லேலூயா பாடிட வா

சரணங்கள்

1. அலைகடலில் மீன் பிடிப்போனே – நீ
வலை கிழிய மீன் பிடிக்க வா
கலைகளெல்லாம் கை விட்டதோ? – உன்
வலையை வலப்புறமே வீச வா.
– அலை அலையாய்

2. பல வழிகள் பார்த்து நிற்கும் நீ
பார் வழிகளிலே மாளும் மாந்தரை!
அலை அலையாய் மாந்தர் செல்கின்றார் – உன்
வலையுடனே வேகமாக வா.
– அலை அலையாய்

3. அலைகடலைக் கடந்து சென்றோனே – நீ
வலைகளிலே சிக்கிக் கொண்டாயோ?
மலைதனிலே சிலுவையண்டை பார்!
விலைமதியா விடுதலை உண்டே!
– அலை அலையாய்

பாடல் பிறந்த கதை

1983-ம் ஆண்டு. “ராபர்ட் சார்” என்று தன் மாணவர்களால் அன்பாய் அழைக்கப்படும் பேராசிரியர் கே.எம். இராபர்ட் சாம்ராஜ், நாசரேத்திலிருந்து டோனாவூருக்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

மிஷனரி வாஞ்சை மிகுந்த இராபர்ட், இந்திய அருட்பணி இயக்கத்தின் முன்னேற்றப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அன்றும், மிஷனரிப் பிள்ளைகளின் கல்வித் தேவையைச் சந்திக்க டோனாவூரில் அமைக்கப்பட்ட சந்தோஷ வித்யாலயாவிற்குச் சென்று ஊழியம் செய்யவே, இப்பயணத்தை மேற்கொண்டார்.

பேருந்து அலைகடலின் ஓடம்போல் அசைந்தசைந்து சென்றது. பேருந்தின் சீரான ஓட்ட அசைவு தந்த தாளத்துடன், சாம்ராஜின் உள்ளம் இணைந்தது. “அலை அலையாய், அலையினூடே” என்ற வார்த்தைகள் அவர் உள்ளத்தில் துள்ளி எழுந்தன. மீன் பிடிக்கச் சென்ற சீடரின் நிலையும், வலை கிழியத்தக்க மீன்களும் அழகிய காட்சியாய், மிஷனரி தாகம் நிறைந்த சாம்ராஜின் உள்ளத்தில் தோன்றியது.

இந்த ஆத்தும ஆதாயத்தின் அருமையான காட்சி மனத்திரையில் நிற்க, உற்சாகம் பொங்கும் உள்ளம் வார்த்தைகளைச் சொல்ல, சாம்ராஜின் கையிலிருந்த குறிப்பேட்டில் இப்பாடல் உருவெடுத்தது. பயணம் முடிந்தபோது பாடலும் முடிவுற்றது.

ஊழியத்தை முடித்து வீடு வந்த சாம்ராஜ், அன்றிரவே பாடலின் ராகத்தையும் அமைத்தார். பின்னர், மதுரையில் நடைபெற்ற “இன்னிசையில் நற்செய்தி” விழாவில், தன் மனைவியுடன் சேர்ந்து பாடி, இப்பாடலை அரங்கேற்றம் செய்தபோது, அலைகடலின் ஆரவாரமும், அற்புதரின் ஆசியும் ஒருங்கே அசைவாடின.

நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள சகோதரர் இராபர்ட் சாம்ராஜ், 29.01.1953 அன்று மார்த்தாண்டத்தில் பிறந்தார். காலஞ்சென்ற கிராம அதிகாரி K. மனோஸ் இவரது தந்தை. இவரது தாயார் செல்லம்மாள் ஒரு பள்ளி ஆசிரியை.

ஐந்து பிள்ளைகளடங்கிய பெரிய குடும்பத்தில் வளர்ந்த சாம்ராஜ், சிறு வயது முதல் இசையில் நாட்டமுள்ளவராக இருந்தார். ஆலயப் பாடகர் குழுவில் உற்சாகமாகப் பாடுவார். ஹவாய் கிட்டார் மற்றும் ஸ்பானிஷ் கிட்டார் வாசிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்.

இசைத்துறையில் தாலந்துகள் படைத்த வாலிபன் சாம்ராஜுக்கு, இசை மீட்டும் குழுவில் சேர்ந்து துரிதமாகப் பெரும் செல்வம் திரட்டும் வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஆண்டவரின் பணிக்கெனத் தன்னையும் தன் தாலந்துகளையும் அர்ப்பணித்த இராபர்ட், அவற்றை நிராகரித்தார்.

தமது பிள்ளைகளின் அர்ப்பணத்தைக் கனப்படுத்தும் ஆண்டவர், பாடல் வரம் பெற்ற வசந்த குமாரி (பாஹினி) யை 24.08.1977 அன்று மணம் செய்யக் கிருபை செய்தார். அது முதல் அவர்கள் இசைத் தம்பதியராக, இசை வழி இறைப்பணியைத் தொடர்ந்தனர்.

தேவன் அவர்களுக்கு பினிமைலின் என்ற மகளையும், ஜெப்லின் சாம்னோஜ் என்ற மகனையும் தந்து அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதித்திருக்கிறார்.

இன்றும் ஆண்டவரின் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படும் இக்குடும்பம், மார்த்தாண்டம் CSI திருச்சபையின் அங்கமாக, திருச்சபையின் ஊழியங்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

பல ஒலி நாடாக்களைக் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு அளித்த இவர்கள், FEBA வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் இன்னிசை வழி நற்செய்திப் பணியைச் செய்து வருகிறார்கள். இவர்களது “இன்னிசையில் இயேசு” என்ற ஒலிநாடாவில் இடம் பெற்றுள்ள இப்பாடல், இன்றும் அநேகரை ஆத்தும ஆதாயப்பணிக்கென அழைக்கின்றது.

TCN Media கருத்து

“அலை அலையாய் அலையினுடே” என்ற இந்தப் பாடல், ஒரு இனிமையான கிறிஸ்தவப் பாடல் மட்டுமல்ல; ஆத்தும ஆதாயத்திற்காக விசுவாசிகளை எழுப்பும் ஒரு மிஷனரி அழைப்பாகும். அலைகளைப் போல உலக மக்கள் பல திசைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஆண்டவர் கொடுத்த வலையை எடுத்துக்கொண்டு மனிதர்களைப் பிடிக்கும் மீனவர்களாக எழும்பும்படி இந்தப் பாடல் சவால் விடுக்கிறது. ஒரு சாதாரண பேருந்துப் பயணத்தில் ஆண்டவர் கொடுத்த சிந்தனை, இன்று ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஊழியத்தின் அவசரத்தையும், சுவிசேஷப் பணியின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. நாம் பெற்றிருக்கும் தாலந்துகளையும் வாய்ப்புகளையும் ஆண்டவருக்காக பயன்படுத்தி, ஆத்துமங்களை அவருடைய ராஜ்யத்திற்குள் வழிநடத்துவதே இந்தப் பாடலின் மையச் செய்தியாகும்.

Post navigation

Previous: அழகாய் நிற்கும் யார் இவர்கள்? – ஆசிரியர் எமில் ஜெபசிங் | பாடல் பிறந்த கதை
Next: அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – ஆசிரியர் J.S. அற்புதராஜ் மர்காஷிஷ் | பாடல் பிறந்த கதை

இதையும் படிக்கலாம்

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

Editorial Team July 2, 2026
tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

Editorial Team July 2, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tcn_MT_Calcutta
  • சாட்சிகள்

வாழ்க்கையின் கடினமான காலத்திற்கும்… ஒரு நோக்கம் இருக்கலாம்

Editorial Team August 13, 2026
NLNL-OfficialTrailer
  • உலகம்

‘No Limbs, No Limits: The NickV Story’ – அடுத்த மாதம் திரையரங்குகளில்

Editorial Team August 13, 2026
cathedral
  • உலகம்

கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

Editorial Team August 11, 2026
andrew
  • சாட்சிகள்

சகோதரர் ஆண்ட்ரூ – “தேவனின் வேதாகமக் கடத்தல்காரர்” (God’s Smuggler)

Editorial Team August 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.