Skip to content
September 13, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • கிறிஸ்தவ செய்திகள்
  • தமிழ்நாடு
  • 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்
  • தமிழ்நாடு

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

Editorial Team September 2, 2026 1 minute read
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயம்

திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பூண்டிமாதா பேராலயம் பழமை வாய்ந்த கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பசிலிக்கா அந்தஸ்து பெற்றுள்ள இந்த பேராலயத்தில், ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேராலயம் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழா

பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இதையொட்டி, மாதாவின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பேராலயம் முன்பு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தின் முன்பாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் கொடியை புனிதம் செய்து, பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்தார்.

“மரியே வாழ்க… அன்னையே வாழ்க…”

கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பி மாதாவை வழிபட்டனர்.

11 நாட்கள் நடைபெறும் திருவிழா

பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 8-ம் தேதி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மல்லிகைப்பூ அலங்காரத்துடன் கூடிய ஆடம்பர தேர்பவனி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கொடியேற்ற நிகழ்ச்சியில் பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர், உதவித்தந்தைகள், ஆன்மீகத்தந்தைகள், சுற்றுவட்டார பங்குத்தந்தையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஏராளமான பங்குமக்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

பூண்டிமாதா பேராலயத்தில் தொடங்கியுள்ள அன்னையின் பிறப்பு பெருவிழா, அடுத்த 11 நாட்களும் சிறப்பு திருப்பலிகள் மற்றும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளுடன் நடைபெற உள்ளது.

Post navigation

Previous: கிறிஸ்தவ மத பிளவிற்கு மொழிப் பிரச்னையே காரணம் – பழ.நெடுமாறன்
Next: மத போதகர் பிரேம் குமார் சாலை விபத்தில் உயிரிழந்தார்

இதையும் படிக்கலாம்

MohanC planting
  • தமிழ்நாடு

தூத்துக்குடி செட்டிகுளத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம் – 1000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

Editorial Team September 11, 2026
church theft
  • தமிழ்நாடு

நெல்லை கதீட்ரல் தேவாலயத்தில் உண்டியல் திருட்டு – கண்ணாடிகளை உடைத்து துணிகரம்

Editorial Team September 11, 2026
Paul dinakaran family
  • தமிழ்நாடு

டாக்டர் பால் தினகரனின் 64-வது பிறந்தநாள் – ஜெப ஊழியத்தில் தொடரும் பயணம்

Editorial Team September 9, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Charlie Kirk
  • சாட்சிகள்

சார்லி கிர்க்கின் கொலைக்குப் பிறகு வாழ்க்கையை எதிர்கொள்ள விசுவாசமே உதவியது: எரிகா கிர்க்

Editorial Team September 11, 2026
MohanC planting
  • தமிழ்நாடு

தூத்துக்குடி செட்டிகுளத்தில் சீரமைப்பு பணிகள் தொடக்கம் – 1000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

Editorial Team September 11, 2026
church theft
  • தமிழ்நாடு

நெல்லை கதீட்ரல் தேவாலயத்தில் உண்டியல் திருட்டு – கண்ணாடிகளை உடைத்து துணிகரம்

Editorial Team September 11, 2026
china
  • உலகம்

ஷாங்காயில் ஞாயிறு ஆராதனையில் போலீஸ் சோதனை: இல்லத் திருச்சபை தலைவர் 7 நாட்கள் காவலில்

Editorial Team September 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.