Skip to content
- எரிகோ கோட்டை விழுந்தது
(யோசுவா 6:20)
- தேவாலயம் தேவ மகிமையின் மேகத்தினால் நிறைந்தது
(2 நாளாகமம் 5:13-14)
- யோசபாத் துதித்தபோது சத்துருக்கள் ஒருவருக்கொருவர் விரோதமாக எழும்பி அழிந்தார்கள்
(2 நாளாகமம் 20:22-24)
- பவுலும் சிலாவும் துதித்தபோது சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்பட்டு கட்டுகள் அவிழ்ந்தன
(அப்போஸ்தலர் 16:25-26)
- இயேசு ஸ்தோத்திரம் செலுத்தியபோது மரித்த லாசரு உயிரோடு எழுந்தான்
(யோவான் 11:41-44)
- இயேசு ஸ்தோத்திரம் செலுத்தியபோது ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் ஆயிரங்களுக்கு போதுமானதாகின
(யோவான் 6:11)
- இயேசு தேவனை ஆராதித்தபோது சோதனைகாரனாகிய சாத்தான் விலகிப்போனான்; தேவதூதர்கள் வந்து ஊழியம் செய்தார்கள்
(மத்தேயு 4:10-11)
- தானியேல் தேவனைத் துதித்தபோது சிங்கங்களின் வாய் கட்டப்பட்டது
(தானியேல் 6:10, 22)
- யோபு தேவனைத் துதித்து நிலைத்திருந்ததால் இரட்டிப்பான ஆசீர்வாதத்தைப் பெற்றான்
(யோபு 1:21; 42:10)
- சாலொமோன் தேவனை மகிமைப்படுத்தியபோது கர்த்தர் அவனை மிகவும் உயர்த்தினார்
(2 நாளாகமம் 6:4; 1 நாளாகமம் 29:25)
- எசேக்கியா தேவனைத் துதித்தபோது செல்வமும் மகிமையும் ஆசீர்வாதங்களும் பெருகின
(2 நாளாகமம் 31:8; 32:27-30)
- தாவீது எப்போதும் கர்த்தரைத் துதித்ததால் நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்
(சங்கீதம் 34:1; 1 நாளாகமம் 11:9)
- இயேசு ஸ்தோத்திரப் பாடலைப் பாடியபின் கல்வாரி பாடுகளைச் சகிக்கும் பெலனை வெளிப்படுத்தினார்
(மத்தேயு 26:27, 30)
- துதியின் மத்தியில் கர்த்தர் வாசம்பண்ணுகிறார்
(சங்கீதம் 22:3)
- துதியினால் வல்லமையின் ஆடை தரிக்கப்படுகிறோம்
(ஏசாயா 61:3)
- துதியினால் கனத்த இருதயம் நீங்கி ஆனந்தம் உண்டாகிறது
(ஏசாயா 61:3)
- துதியினால் கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் நம்மேல் இறங்குகின்றன
(சங்கீதம் 67:5-7)
- துதியினால் தேவனுடைய பிரசன்னம் வெளிப்படுகிறது
(சங்கீதம் 100:4)
- துதியினால் வெற்றியின் கதவுகள் திறக்கப்படுகின்றன
(சங்கீதம் 149:6-9)
- துதியினால் தேவன் மகிமைப்படுகிறார்
(சங்கீதம் 50:23)