Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • தியாகத்தின் உயர்வு
  • தியான செய்திகள்

தியாகத்தின் உயர்வு

Editorial Team July 8, 2026 1 minute read
tn_5

ஒரு பட்டதாரி வாலிபன், தன் வாழ்க்கைக்கு ஏற்ற நல்ல வேலை ஒன்றைப் பெறும் நோக்கில் தினமும் செய்தித்தாள்களை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதிர்காலத்தை அமைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்த காலம் அது.

ஒருநாள், செய்தித்தாளில் வெளிவந்த ஒரு சிறிய விளம்பரம் அவனது கவனத்தை ஆழமாகக் கவர்ந்தது. “உடனடி தேவை” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த அந்த அறிவிப்பில், டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் உயிர் போராட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந் தது. அவளது சிறுநீரகங்கள் செயலிழந்ததால் அவசரமாக சிறுநீரக தானம் தேவைப்படுவதாகவும், மனமுள்ளவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் அதில் கேட்டுக்கொள் ளப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை வாசித்தவுடன், அந்த வாலிபனின் மனம் அமைதியிழந்தது. “நான் ஏதேனும் செய்ய முடியுமா?” என்ற எண்ணம் அவனை விட்டு நீங்கவில்லை. தன்னுடைய வாழ்க்கை, எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனை களை எல்லாம் ஓரங்கட்டி வைத்து, பிறரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் அவனுள் மேலோங்கியது.

தாமதிக்காமல் அவன் ரெயில் டிக்கெட் எடுத்துக் கொண்டு மறுநாளே டெல்லிக்குப் புறப்பட்டான். அங்கு மருத்துவமனையைச் தொடர்பு கொண்டு, தன் சிறுநீரகத்தை தானமாக வழங்கத் தயார் என்று தெரிவித்தான்.
அந்த வாலிபனின் தியாக மனப்பாங்கைக் கண்டு மருத்துவர்கள் வியந்தனர். அதே நேரத்தில், அவரிடம் இந்த முடிவின் தீவிரத்தையும் விளக்கினர். “ஒரு சிறுநீரகத்தை இழப்பதால் உன் உடல்நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன? அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலி, பின்னர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?” என்பதனை அவர்கள் தெளிவாக கூறினர்.

அனைத்தையும் கவனமாகக் கேட்ட பிறகும், அந்த வாலிபன் தன் முடிவில் அசைக்கப்படவில்லை. “இதற்காகவே நான் வந்தேன்,” என்று உறுதியுடன் கூறி, தேவையான ஒப்புதல்களை அளித்தான்.

இறுதியில், அவனுடைய ஒரு சிறுநீரகம், அவன் ஒருபோதும் முன்பு சந்திக்காத, சுமார் நாற்பது வயதுடைய ஒரு ஏழைப்பெண்ணின் உடலில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து, அந்தத் தாய் உயிர் பிழைத்தாள்.

அந்த ஏழைத்தாயின் கணவர், தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய வாலிபனிடம் அளவற்ற நன்றியுணர்வு டன் அணுகி, தன்னால் இயன்ற அளவில் பணமோ பரிசோ வழங்க முயன்றார். ஆனால் அந்த வாலிபன் புன்னகையுடன் அதை மறுத்துவிட்டு, எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் ஊருக்குத் திரும்பிப் போனான்.

இறைமக்களே, இந்த நிகழ்வு தியாகத்தின் உண்மை யான அர்த்தத்தை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அந்த வாலிபன், தன் சொந்த உடலின் ஒரு பகுதியை தியாகம் செய்ததன் மூலம், ஒரு குடும்பத்தையே காப்பாற்றினான். அவன் இந்தச் செயலைச் செய்யவில்லை என்றால், அந்த ஏழைத் தாய் பரிதாபமாக உயிரிழந்திருப்பாள்.

இவ்வாறே, மனிதகுலத்தின் மீட்பிற்காக மிகப்பெரிய தியாகத்தைச் செய்தவர் இயேசு கிறிஸ்து. நாம் எவ்வித நற்கிரியைகளும் இல்லாதபோதிலும், நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் தன் மீது ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அவர் அர்ப்பணித்த தியாகம், மனிதனின் பாவக் கடனைத் தீர்த்தது. “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை வெளிப்படுத்துகிறார்” (ரோமர் 5:8).

நாம் நீதிமான்களாக, அவர் பாவங்களைச் சுமந்தார்.
நாம் ஆரோக்கியம் பெற, அவர் காயங்களை ஏற்றார்.
நாம் வளமுடன் வாழ, அவர் தரித்திரத்தைத் தாங்கினார்.
நாம் சுதந்திரம் அடைய, அவர் சாபத்தைச் சுமந்தார்.

ஆகையால், நாம் தியாகத்தின் மதிப்பை உணர்வோம். பிறருக்காக வாழும் மனப்பாங்கை வளர்ப்போம். எதிர்பார்ப்பில் -லாத அன்பை செயலால் காட்டுவோம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: “நான்” என்னும் அகங்காரம்
Next: இயலாமையை வென்ற வீரன்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.