Skip to content
August 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • அஞ்சமின்றி அடியெடுத்து வையுங்கள்
  • தியான செய்திகள்

அஞ்சமின்றி அடியெடுத்து வையுங்கள்

Editorial Team July 14, 2026 1 minute read
tn_43

“நிலவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தவர் யார்?” என்று கேட்டால், பெரும்பாலானோர் உடனே “நீல் ஆம்ஸ்ட்ராங்” என்று பதிலளிப்பார்கள். அது சரியான பதில் தான். ஆனால் அந்த முதல் அடியை வைக்கும் வாய்ப்பு முதலில் யாருக்குக் கிடைத்தது என்று கேட்டால், பலருக்கும் தெரியாது. அந்த வாய்ப்பு கிடைத்தவர் எட்வின் சி. ஆல்ட்ரின். அவர் அனுபவமிக்க விமானப்படை அதிகாரி. மனிதனை நிலவுக்குக் கொண்டு சென்ற அந்த வரலாற்று பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

அப்போலோ விண்கலம் நிலவை அடைந்தது. மனித வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு அற்புதமான தருணம் அது. பூமியிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில், அறியப்படாத ஒரு மேற்பரப்பில் மனிதன் காலடி வைக்கப் போகிறான். அந்த நிமிடம் உலகம் முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தது. நாசாவிலிருந்து கட்டளை வந்தது: “பைலட் முதலில் இறங்குங்க.” அந்த கட்டளை ஆல்ட்ரினுக்காகத்தான்.

அந்த தருணத்தில், ஆல்ட்ரினின் மனதில் பல கேள்விகள் எழுந்தன. “நிலத்தின் தன்மை எப்படி இருக்கும்? அது உறுதியானதா? புதைமணலாக இருந்தால் என்ன செய்வேன்? காலடி வைத்தவுடன் உள்ளே இழுத்துக் கொண்டால்?” என்ற எண்ணங்கள் அவரை ஆட்கொண்டன. அந்த ஒரு நொடியில், அவர் தயங்கினார். அது ஒரு சிறிய தயக்கம்தான். ஆனால், அந்த தயக்கம் வரலாற்றை மாற்றியது.

அடுத்த கட்டளை உடனே வந்தது: “கோ-பைலட் இறங்குங்க.” அந்த கட்டளையை கேட்ட உடனே, நீல் ஆம்ஸ்ட்ராங் எந்த தயக்கமும் இல்லாமல் முன்னேறினார். அவர் தனது காலடியை நிலவில் பதித்தார். அந்த ஒரு அடி, மனித வரலாற்றின் பொற்குறிப்பாக மாறியது. உலகம் முழுவதும் அவரது பெயர் நிலைத்தது. பின்னர் ஆல்ட்ரினும் இறங்கினார். ஆனால் “முதல்” என்ற அந்த இடம் ஒருவருக்கே சொந்தமானது.

இந்த சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையில் வாய்ப்புகள் எல்லோரு க்கும் கிடைக்கும். ஆனால் அந்த வாய்ப்புகளை பயன்படு த்துவது சிலரே. பல நேரங்களில் நாம் தோல்வியால் அல்ல, தயக்கத்தால் பின்னுக்கு தள்ளப்படுகிறோம். ஒரு நொடிப் பயம், ஒரு வாழ்க்கை முழுவதும் கிடைக்க வேண்டிய வாய்ப்பை மாற்றிவிடும். நாம் வாழ்க்கையில் பலமுறை இதே நிலையை சந்திக்கிறோம். ஒரு புதிய முயற்சி செய்ய வேண்டிய நேரத்தில், “என்ன ஆகுமோ?”, “நான் முடியுமா?”, “தவறி விட்டால் என்ன செய்வேன்?” என்ற எண்ணங்கள் நம்மை தடுக்கின்றன. இந்த எண்ணங்கள் வெளியில் தெரியாது. ஆனால் அவை நம்முடைய முன்னேற்றத்தை தடுக்கின்றன. பயம், வெட்கம், தயக்கம் இவை மூன்றும் நம்முடைய மறைமுக எதிரிகள்.
பல நேரங்களில், நாம் தோல்வியைப் பற்றி பயப்படுகி றோம். ஆனால் உண்மையில் தோல்வி நம்மை தடுக்காது. அது நம்மை கற்றுக்கொடுக்கும். ஆனால் பயம் நம்மை ஆரம்பிக்கவே விடாது. அது தான் மிகப்பெரிய தடையாக மாறுகிறது. முயற்சி செய்யாமல் இருப்பதே உண்மையான தோல்வி. இந்த நிலையில்தான் நம்பிக்கை மற்றும் விசுவாசம் முக்கியமாகிறது. நம்மை இதுவரை நடத்தி வந்த தேவன், இனியும் நம்மை நடத்த வல்லவர் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். நாம் நம்முடைய பலத்தையே மட்டும் நம்பாமல், தேவனின் வழிகாட்டுதலையும் நம்ப வேண்டும். அப்போது நம்முடைய பயம் குறையும். தைரியம் அதிகரிக்கும்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால், முதல் அடியை எடுக்க வேண்டும். அது சிறியதாக இருக்கலாம். ஆனால் அது மிகவும் முக்கியமானது. ஒரு அடியை எடுக்காமல் நின்றால், நாம் எங்கேயும் செல்ல முடியாது. ஆனால் ஒரு தைரியமான அடி, புதிய பாதையைத் திறக்கும். அது ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும். நாம் நினைவில் கொள்ள வேண்டியது இது: வாய்ப்புகள் நம்மைத் தேடி வராது. அவை வந்தபோது நாம் தயங்காமல் பயன்படுத்த வேண்டும். அந்த ஒரு தருணத்தை நாம் இழந்துவிட்டால், அது மீண்டும் வராமல் போகலாம். அதனால், பயத்தை விட வேண்டும். தயக்கத்தை தாண்ட வேண்டும். நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.

முடிவாக, ஒரு நொடிப் பயம் ஒரு வாழ்க்கையை மாற்றிவிடும். ஆனால் ஒரு நொடித் தைரியம் ஒரு வரலாற்றை உருவாக்கும். ஆகையால், பயத்தை விடுங்கள். விசுவாசத் தைப் பிடியுங்கள். உங்கள் வாழ்க்கையின் முதல் அடியை தைரியமாக எடுக்குங்கள். அந்த ஒரு அடி, உங்களை நீங்கள் நினைத்ததை விட உயரத்திற்கு கொண்டு செல்லும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தீர விசாரிப்பதே மெய்
Next: தேவையானது ஒரு தீர்மானம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

Editorial Team August 21, 2026
தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள் Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

Editorial Team August 21, 2026
train_acc_testimony
  • சாட்சிகள்

ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட சுவிசேஷகர் – மரணத்தின் விளிம்பிலிருந்து தேவனை மகிமைப்படுத்தும் சாட்சி

Editorial Team August 21, 2026
sudan
  • உலகம்

சூடானில் சிதைக்கப்படும் தேவாலயங்கள்; இடம்பெயரும் கிறிஸ்தவர்கள் – தொடரும் விசுவாசத்தின் சாட்சி

Editorial Team August 20, 2026
Felix Jebasingh
  • தமிழ்நாடு

மதுவிலக்கு மற்றும் போதையில்லா தமிழ்நாடு வேண்டும்: டாஸ்மாக் கடை முன்பு தேசியக் கொடியுடன் கிறிஸ்தவ போதகர் போராட்டம்

Editorial Team August 20, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.