Skip to content
September 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உறவுகளின் உண்மை
  • தியான செய்திகள்

உறவுகளின் உண்மை

Editorial Team July 18, 2026
tn_54

சிலருக்கு நாம் அவசியமல்ல; ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கை, பல உறவுகளின் நடுவில் நகர்கிறது. அந்த உறவுகளில் சில உண்மையானவை; சில தோற்றமளிப்பவை; சில காலப்போக்கில் மாறுபடும். வாழ்க் கையின் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் உணர வேண்டிய ஒரு கசப்பான உண்மை இருக்கிறது: சிலருக்கு நாம் அவசியமல்ல; ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது.

இந்த உண்மை ஒரே நாளில் புரியாது. அனுபவங்கள் அதை நமக்கு கற்றுக்கொடுக்கும். பசித்த வயிறு, பொய்யான உறவு, நம்பியவர் செய்த துரோகம், கடனுடன் வாழும் வாழ்க்கை இவை அனைத்தும் வாழ்க்கையின் கடினமான ஆசிரியர்கள். எந்தப் புத்தகமும் கற்பிக்க முடியாத பாடங்களை, இந்த அனுபவங்கள் நம்முள் ஆழமாக பதிக்கின்றன.

ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒரு வலி இருக்கிறது. சிலர் அந்த வலியை கண்ணீரால் வெளிப்படுத் துகிறார்கள்; சிலர் அதை புன்னகையால் மறைக்கிறார்கள். நாம் சந்திக்கும் ஒவ்வொருவரின் பின்னாலும் ஒரு கதையுண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வெளியில் காண்பது முழு உண்மை அல்ல; உள்ளத்தில் நடப்பது தான் உண்மை.

வாழ்க்கையில் தொலைந்துபோன உண்மையான உறவுகளை தேடிச் செல்லுவது நல்லது. ஆனால் நம்மை விட்டு விலகிச் சென்ற உறவுகளை பிடித்துக் கொண்டு, நம்மையே இழந்து விடக்கூடாது. எல்லா உறவுகளும் மீண்டும் திரும்பி வருவதில்லை. சிலவற்றை விடுவதே நமக்கு அமைதியைத்தரும்.

மகிழ்ச்சி என்பது பணத்தால் வாங்க முடியாத ஒன்று. நம்மை உண்மையாக நேசிக்கும் ஒருவரின் இருப்பு, நம் தவறுகளை திருத்திச் சொல்லும் ஒருவர், நம் கஷ்ட நேரங்களில் நம்மோடு நிற்கும் ஒருவர் இத்தகைய உறவுகள் இருந்தால், வாழ்க்கை எப்போதும் நிறைவானதாக இருக்கும்.

சில நேரங்களில் நாம் ஒருவரை நம்பிக்கையின் உச்சமாக நினைக்கிறோம். அவர்களை நம் வாழ்க்கையின் முக்கியமான உறவாகக் கருதுகிறோம். ஆனால் காலப் போக்கில், அவர்கள் தங்கள் செயல்களால் வேறொரு உண்மையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் உண்மையா னவர்கள் அல்ல; நல்ல நடிகர்கள் என்பதை வாழ்க்கை நமக்கு காட்டுகிறது. இது வலிக்கிறது; ஆனால் அது நம்மை விழிப்புணர்வுக்கு கொண்டு வருகிறது.

சிலருக்கு நாம் அவசியமில்லை; ஆனால் நம்மால் கிடைக்கும் உதவி மட்டுமே அவசியமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை நாம் வாழ்க்கையில் சந்திப்போம். அவர்களின் உண்மையான முகம் தெரிந்தாலும், அவர்களை வெறுக்க முடியாமல் இருப்பது நமது இதயத்தின் நன்மை. நம்முள் இருக்கும் அந்த நன்மையை இழக்கக் கூடாது; ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவும் கூடாது. இன்று அவர்கள் நமது அன்பை அலட்சியம் செய்யலாம். ஆனால் ஒருநாள் அந்த அன்பு கிடைக்காதா என்று அவர்கள் ஏங்குவார்கள். அன்பின் மதிப்பு, அது இல்லாதபோது தான் உணரப்படுகிறது.

இந்த உலகத்தின் அளவுகோல் விசித்திரமானது. தேடிச் சென்று பேசினால் அது “பொய்” என்று சொல்லப் படும். விட்டுக் கொடுத்து நடந்தால் அது “பலவீனம்” என்று கருதப்படும். வெறுத்து ஒதுக்கும் இடத்தில் அன்பு காட்டினால் அது “நாடகம்” என்று பார்க்கப்படும். ஆனால் இனிமையாக பேசினால் மட்டும் அது “உண்மை” என்று நம்பப்படும். இதுவே உலகத்தின் பார்வை.

உறவுகளின் உண்மை, நெருக்கத்தின் நாட்களில் அல்ல; சோதனையின் நாட்களில் வெளிப்படும். வாழ்க்கையில் எல்லாம் சரியாக இருக்கும் போது, அனைவரும் அன்பாக இருப்பது போல தோன்றும். ஆனால் குறைவு, சிரமம், தாழ்வு, துன்பம் ஆகியவை வந்தபோது தான் உண்மையான அன்பு யாரிடம் இருக்கிறது என்பதை நாம் அறிய முடியும்.

இறைவேதம் எச்சரிக்கிறது: சோதனைகள் அதிகரிக்கும் போது, அநேகருடைய அன்பு தணிந்து போகும். இது இன்று நம் கண்களுக்கு முன்னால் நடைபெறும் உண்மை. மனிதர் களின் அன்பு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடும். ஆனால் இறைமக்களே, தேவனில் நிலைத்திருப்பவர்கள் இவ்வுலக மனிதர்களைப் போல இருக்கக் கூடாது. அவர்கள் அன்பு சூழ்நிலைக்கு ஏற்ப மாறக்கூடாது. அது நிலையானதாக இருக்க வேண்டும். அது நிபந்தனைகளால் கட்டுப்படாததாக இருக்க வேண்டும். நாம் தேவ அன்பில் நாளுக்கு நாள் வளர வேண்டும். அந்த அன்பை மற்றவர்களுடன் பகிர வேண்டும். நம்மை காயப் படுத்தியவர்களுக்குக் கூட நன்மை செய்யும் மனதை வளர்க்க வேண்டும். அதுவே உண்மையான கிறிஸ்துவின் சாயல்.

இக்காலங்களில் மனிதர்கள் நன்றியறியாதவர்களாக வும், பரிசுத்தமில்லாதவர்களாகவும், சுபாவ அன்பில்லாதவர்க ளாகவும் மாறுவார்கள் என்று இறைவேதம் முன்கூட்டியே கூறுகிறது. தேவபக்தியின் வெளிப்புற தோற்றம் இருக்கும்; ஆனால் அதன் சக்தி மறுக்கப்படும்.

எனவே நாம் நம்மையே ஆராய்ந்து கொள்ள வேண்டும்: நம் அன்பு சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகிறதா? நம் உறவுகள் நிபந்தனைகளின் அடிப்படையிலா இருக்கின்றன? அல்லது தேவ அன்பைப் போல நிலைத்திருக்கிறதா?

நாம் இயேசு கிறிஸ்துவின் சாயலில் வளர்கிறவர்களாக இருந்தால், நம் அன்பு நிலையானதாக இருக்கும். நம் மனம் மாறாததாக இருக்கும். நம் உறவுகள் உண்மையானதாக இருக்கும்.

முடிவாக, நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: சூழ்நிலைகள் மாறலாம்; மனிதர்கள் மாறலாம்; உறவுகள் மாறலாம். ஆனால் அன்பு மாறாமல் இருந்தால் தான் அது உண்மையான அன்பு. அந்த அன்பில் நிலைத் திருப்போம்; அதுவே நம் வாழ்க்கையை உயர்த்தும்.

Post navigation

Previous: சர்வ ஞானி
Next: மனதைக் கையாளப் பழகுவோம்!

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.