Skip to content
September 21, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • நன்றி அப்பா
  • தியான செய்திகள்

நன்றி அப்பா

Editorial Team July 31, 2026 1 minute read
tn_92

ஒரு சிறுமி தாயற்றவள். அவளுடைய தகப்பன் அவளை மிகுந்த அன்போடும் பரிவோடும் வளர்த்து வந்தார். அவளுக்கு தேவையான அனைத்தையும் செய்து, தாய் மற்றும் தந்தை இரண்டின் பாசத்தையும் ஒருவராகவே அளித்தார். அந்த சிறுமியும் தன் தகப்பனை மிகவும் நேசித்து, அவருடைய சொல்லைக் கேட்டு வளர்ந்து வந்தாள்.

ஒரு நாள், தகப்பன் அவளிடம், “இன்று வெளியே போய் விளையாடாதே” என்று சொன்னார். தினமும் தோழிகளுடன் விளையாடும் பழக்கம் இருந்தாலும், அவள் “சரி” என்று சொல்லி வீட்டில் தங்கினாள். ஆனால், சிறிது நேரத்தில் வெளியே விளையாடும் தோழிகளின் சத்தம் அவளுடைய மனதை இழுத்தது. அவள் தாங்க முடியாமல், “அப்பா வேலைக்கு போயிருப்பார் நான் விளையாடினால் அவருக்கு தெரியாது” என்று நினைத்து வெளியே சென்று விளையாடினாள்.

விளையாடி விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு திரும்பிய வுடன், அவளுடைய மனதில் ஒரு குற்ற உணர்வு எழுந்தது. “அப்பாவின் சொல்லை நான் கேட்கவில்லை” என்ற எண்ணம் அவளை வருத்தியது. அதே சிந்தனையில் நடந்துகொண்டிருந்த போது, வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தை கவனிக்கா மல் அதில் மோதினாள். படம் கீழே விழுந்து நொறுங்கியது. அவளுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

வலியிலும் மனவருத்தத்திலும் அவள் தன் அறைக்குள் சென்று படுத்து அழத் தொடங்கினாள். அப்போது வீட்டில் வேலை செய்யும் பெண் வந்து, “நீ போய் உன் அப்பாவிடம் நடந்ததை சொல்லு” என்று கூறினாள். ஆனால் அந்தச் சிறுமி, “நான் எப்படி அவரிடம் செல்வேன்? அவருடைய சொல்லைக் கேட்கவில்லையே!” என்று இன்னும் அதிகமாக அழுதாள்.

அதற்கு அந்தப் பெண் மெதுவாக, “உன் அப்பா உன்னை உன் செயல்களுக்காக மட்டும் நேசிக்கிறாரா? நீ அவருடைய மகள் என்பதற்காகத்தானே நேசிக்கிறார்?” என்று கேட்டாள். அந்த வார்த்தைகள் அவளுக்கு தைரியம் தந்தது. அவள் தன் தகப்பனிடம் சென்று, அவரது கைகளைப் பிடித்து, “அப்பா, என்னை மன்னிச்சிடுங்க” என்று அழ ஆரம்பித்தாள்.

அப்போது தகப்பன் அன்புடன் கூறினார்: “மகளே, நீ என் சொல்லை கேட்காமல் வெளியே போனதும் எனக்குத் தெரியும். திரும்பி வரும் வழியில் காயம் பட்டதும் தெரியும். நீ என்னிடம் வருவாய் என்று காத்திருந்தேன். உன் காயத்திற்கு மருந்து போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நீ வரவில்லை.” அதை கேட்ட சிறுமி ஆச்சரியப் பட்டு, “அப்பா, நீங்கள் வேலைக்கு போகவில்லையா?” என்று கேட்டாள். அதற்கு தகப்பன், “இன்று நான் உன்னுடன் நேரம் செலவிடவே விடுமுறை எடுத்தேன். ஆனால் நீ வெளியே போய்விட்டாய்” என்றார். பின்னர் அவர் மெதுவாகச் சொன்னார்: “மகளே, நீ என் மகள். நீ தவறு செய்தாலும், என்னிடம் வந்தால் நான் உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வேன். ஆனால் நீ தான் பயந்து என்னிடம் வராமல் இருந்தாய்.” அந்த வார்த்தைகளை கேட்ட சிறுமி தன் தகப்பனை கட்டிய ணைத்து, “நன்றி அப்பா” என்று அழுதபடி சொன்னாள்.

இறைமக்களே, இந்தக் கதை நமக்கு தேவனுடைய அன்பை அழகாக எடுத்துக்காட்டுகிறது. தேவன் நம்மை நேசிப்பது, நாம் நல்லவர்கள் என்பதற்காக அல்ல; நாம் அவருடைய பிள்ளைகள் என்பதற்காக.

நாம் சில நேரங்களில் தவறுகள் செய்கிறோம். பாவங்களில் விழுகிறோம். அப்போது நாம் தேவனை விட்டு விலகி, “அவர் என்னை ஏற்றுக்கொள்வாரா?” என்று தயங்குகி றோம். ஆனால் உண்மை என்னவென்றால் அவர் நமக்காக காத்திருக்கிறார். நாம் திரும்பி வர வேண்டும் என்பதற்காக.

இறைவேதம் கூறுகிறது: “அவரை ஏற்றுக் கொண்டவ ர்களுக்கு தேவனுடைய பிள்ளைகளாகும் அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12)

அன்பானவர்களே, நாம் தவறு செய்தாலும் தேவனிட மிருந்து ஓடிவிடாதீர்கள். அவரிடமே ஓடிச் செல்லுங்கள். அவர் தண்டிக்க காத்திருக்கவில்லை, அன்புடன் அணைக்கவே காத்திருக்கிறார். அவருடைய அன்பு மாறாதது.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தாழ்மையின் மகிமை
Next: வாழ்க்கை ஒரு முன்மாதிரி

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026
william carey
  • கவிதைகள்

வில்லியம் கேரி – விசுவாசம், ஊழியம் மற்றும் தேவனைப் பற்றிய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.