Skip to content
October 8, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உண்மை உங்களை காக்கும்
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
Depression

மாலை சூரியன் மெதுவாக மறைந்து கொண்டிருந்தது. அந்த நகரத்தின் சத்தம் குறைந்து, வீடுகள் அமைதிக்குள் மூழ்கிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த அமைதிக்குள், அருணின் உள்ளம் மட்டும் ஓயாமல் கலங்கிக் கொண்டிருந்தது. அவன் கையில் இருந்த சிறிய காகிதத்தை பல முறை மடித்தும் திறந்தும் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு சாதாரண காகிதம் இல்லை. அதில் அவன் வாழ்க்கையை மாற்றக்கூடிய உண்மை அதில் மறைந்திருந்தது.

அந்த அறிக்கையில் இருந்த வார்த்தைகள் அவனை விடவில்லை. “தொற்று… பரவும் வாய்ப்பு அதிகம்…” என்ற எழுத்துக்கள் அவன் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தன. அவன் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு ஆழமாக மூச்சை விட்டான். “இது பெரிய விஷயம் இல்லை… கொஞ்ச நாள் கவனமா இருந்தா சரியாகிடும்…” என்று அவன் தன்னைத்தானே சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் உள்ளுக்குள் பயம் பெருகிக் கொண்டே இருந்தது.

வீட்டுக்குள் அவன் நுழைந்தவுடன், அவன் அம்மா சிரித்தபடி அவனை வரவேற்றாள். “இவ்வளவு லேட் ஏன்?” என்ற அவளின் சாமான்யமான கேள்வி கூட அவனுக்கு கனமாகத் தோன்றியது. அவன் முகத்தில் ஒரு போலி சிரிப்பை வரவழைத்து, “வேலை தான் அம்மா…” என்று சொன்னான். அந்த ஒரு பொய், அவன் மனசை இன்னும் சுருங்க வைத்தது.

அடுத்த சில நாட்களில், அருண் தன்னையே தனிமைப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான். குடும்பத்துடன் இருந்தாலும், அவர்களிடமிருந்து தூரம் வைத்துக் கொண்டான். இரவு நேரங்களில் மட்டும் அவன் மருந்துகளை எடுத்து குடித்தான். ஒவ்வொரு முறை மருந்தை எடுக்கும் போதும், “இதை நான் ஏன் மறைக்கிறேன்?” என்ற கேள்வி அவனை துரத்தியது. ஆனால் பதில் சொல்லத் தைரியம் இல்லை.

ஒரு நாள் காலை, அவன் திடீரென்று பலவீனமாக உணர்ந்தான். தலை சுழன்று, கண்கள் இருட்டாகின. சில நொடிகளில் அவன் தரையில் விழுந்தான். வீடு முழுவதும் பதட்டம் பரவியது. அவனை உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்கள். அவன் அம்மாவின் குரல் நடுங்கியது; அவள் கண்களில் பயம் தெளிவாக தெரிந்தது.

மருத்துவர் பரிசோதனை செய்து வெளியே வந்தார். “இது திடீர் பிரச்சனை இல்லை… இது முன்பே ஆரம்பித்தது,” என்றார். அந்த ஒரு வரி, குடும்பத்தினரின் உள்ளத்தை உறைய வைத்தது. “அவர் முன்பே அறிந்திருந்தாரா?” என்ற கேள்வி அனைவரின் முகத்திலும் தெரிந்தது.

அந்த நேரத்தில், அருண் மெதுவாக கண்களைத் திறந்தான். “அம்மா, நீங்க பயந்து விட கூடாது என்ற அக்கறையில் தான் நான் உண்மையை சொல்ல தயங்கிட்டேன்” அந்த ஒப்புதல், அவன் உள்ளத்தில் இருந்த பாரத்தை வெளியில் கொண்டு வந்தது. ஆனால் அது மிகவும் தாமதமாகிவிட்டது.

அந்த அறையில் ஒரு கனமான அமைதி நிலவியது. யாரும் பேசவில்லை. அந்த அமைதி ஒரு உண்மையை சொல்லிக் கொண்டிருந்தது. வியாதியை விட அதை மறைத்தது தான் பெரிய விபரீதம். அந்த நாள், அந்த குடும்பம் ஒரு கடினமான பாடத்தை கற்றுக்கொண்டது: உண்மையை மறைப்பது சில நேரம் மனதில் தற்காலிக அமைதியை தரலாம், ஆனால் அதன் விளைவு, வாழ்நாளையே அமைதியாக்கிவிடும்.

இறைமக்களே, மறைப்பது ஒருபோதும் பாதுகாப்பை தராது. உண்மை சொல்லப்படாமல் இருக்கும் வரை, ஒவ்வொரு நாளும் மனதில் காயமாக பதிந்து, ஒருநாள் வெடித்துவிடும். ஆகையால், பயம் இருந்தாலும் சொல்லுங்கள், நெருக்கடி இருந்தாலும் பகிருங்கள், ஏனெனில் உண்மை பேசப்படும் இடத்தில் தான் குணமடையும் வழியும் தொடங்குகிறது.

“வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை” (லூக்கா 8:17) என இறைவேதம் கூறுகிறது.
எனவே, நம்மில் எவரும் எதையும் மறைக்க முயர்ச்சிக்காதிருங்கள்;
உண்மை கசந்தாலும் உங்களை காக்கும் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
Next: எரிகோ நகரம் – அதன் சுவர்கள் உண்மையில் இடிந்ததா?

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026
iron and gold
  • தியான செய்திகள்

வலிமையாக்கும் வலிகள்

Editorial Team August 28, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.