Skip to content
October 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதபகுதி பிரசங்கங்கள்
  • வழியிலே வரும் ஆபத்து
  • வேதபகுதி பிரசங்கங்கள்

வழியிலே வரும் ஆபத்து

Editorial Team October 22, 2026 1 minute read
ways

லூக்கா 10:30–34

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்.

  • இந்தக் கடைசி நாட்களில் பிசாசானவன் எவர்களை விழுங்கலாமெனப் பட்சிக்கிற சிங்கத்தைப்போல வகைதேடிச் சுற்றித்திரிகிறான். (ஏன் அவன் திருடன், கள்ளன்?) அவன் எதைத் திருடுவான்? எதை அழித்துப்போடுவான்?
    • நம் ஆத்துமாவைத் திருடுகிறான்; இரட்சிப்பின் வஸ்திரத்தைத் திருடுகிறவன்.
    • ஆண்டவர் தந்த மேன்மைகளை, தேவ பெலனை அழித்துப்போடுகிறவன்.
    • ஆசீர்வாதங்களைக் கெடுத்துப்போடுகிறவன். (அவன் வழிகளிலே நிற்கிறான்.)
  • பிசாசானவன் வழியில் நிற்கப்போகிறேன் என்று சொல்லி நிற்பதில்லை. அவன் எப்போ, எங்கே, எப்படி, யாரைப்போல் நிற்பான் என நமக்குத் தெரியாது. எப்படி வேண்டுமானாலும் நிற்பான்; எப்போ வேண்டுமானாலும் நிற்பான். மிகக் கவனம்!
  • நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அல்லது நாம் அடைய வேண்டிய இலக்கினை அடைய முடியாதபடி தடைசெய்ய வழியிலே நிற்கிறான்.

பிசாசு கொம்பு வைத்து, கருப்பு டிரஸ் போட்டு, பெரிய முடி வைத்து, பல் வைத்து, கால் தரையில் படாமல், அப்படியெல்லாம் இல்லாமல் (பல விதத்தில், பல ரூபத்தில், மனைவி, கணவன், பிள்ளைகள், குடும்பத்தினர், நண்பர்கள், அறிமுகமானவர்கள், வேலை, படிப்பு எனப் பல பல விதங்களில் தன்னை காட்டுகிறான்).

  • சிம்சோனுக்கு வழியிலே வந்த பெண் (பெலனெல்லாம் போனது).
  • தேமாவுக்கு வழியிலே வந்த உலக ஆசை (ஊழியமே போனது).
  • லோத்தின் மனைவி வருகிற வழியிலே பின்னிட்டுப் பார்த்தால் (சிலை).
  • இஸ்ரவேல் மக்கள் வருகிற வழியிலே முறுமுறுப்பினால் (அழிந்தார்கள்).
  • யூதாஸ் வாழ்வில் வழியிலே வந்த பண ஆசை (அழிந்தான்).
  • நகோமி குடும்பம் மோவாப் தேசம் போகும் வழியிலே (அழிந்தான்).
  • யோனா தேவ திட்டத்தை மீறிப் போகும் வழியிலே (ஆபத்து).
  • எசேக்கியா ராஜா வாழ்வின் வழியிலே வந்த உலக ஆசை (பிள்ளைகள் அடிமைகளாக்கப்பட்டார்கள்).

நாம் போகிற வழியில் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மைக் கவிழ்த்துப்போட, சமாதானத்தைத் திருட, தேவன் தந்த ஆசீர்வாதங்களை அழிக்க, பிசாசானவன் பட்சிக்கிற சிங்கத்தைப்போல வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

தேவ பிள்ளைகளே, நீங்களும் நானும் இந்தக் கடைசி நாட்களில் பிசாசின் வலைக்கு, கைக்கு, தந்திரங்களுக்குத் தப்பி, வழியிலே, இடையிலே வரும் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

சங்கீதம் 2:12

“குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.”

(Commitment Prayer)

  • நாங்கள் வழியிலே, இடையிலே, காலத்திற்கு முன்பே அழிந்துவிடக்கூடாது.
  • உம்முடைய கோபாக்கினைக்கு நாங்கள் ஆளாகிவிடக்கூடாது.
  • உம்மை அண்டிக்கொள்ளக்கூடிய கிருபை தாரும்.

லூக்கா 10:30 மீண்டும் வாசிப்போம்

ஒரு மனுஷன்…

  • ஒரு மனுஷன் ஏன் கள்ளர் கையில் அகப்பட்டான்?
  • அவன் வஸ்திரங்களை ஏன் உரிந்தார்கள்?
  • ஏன் அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப்போனார்கள்?

1. ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் கீழே போகையில்

ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குக் கீழே போகையில், இறங்கிப் போகையில்.

  • NIV: A Man was Going Down from Jerusalem to Jericho — இறங்கிப் போகையில்.
  • NLT: A Man was Travelling from Jerusalem Down to Jericho — கீழே போகையில்.

எருசலேம் — தேவன் வாசம் செய்யும் இடம்.

எரிகோ — சபிக்கப்பட்ட இடம்.

இங்கே ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து, தேவன் வாசம் செய்யும் இடத்திலிருந்து, உயரமான, மேன்மையான, ஆசீர்வதிக்கப்பட்ட இடத்திலிருந்து, சபிக்கப்பட்ட இடமாகிய எரிகோவைத் தேடிக் கீழே போகையில், இறங்கிப் போகையில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப்போல் சென்றான்.

இங்கே இந்த மனுஷன் ஏன் கள்ளர் கையில் அகப்பட்டான்?

  • இருக்க வேண்டிய இடத்தில் இல்லாததால்.
  • தேவன் தந்த, வைத்த மேன்மையை உணராததினால், அறியாததினால்.

இன்று நாம் எப்படி இருக்கிறோம்?

  • இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோமா?
  • தேவன் நம்மை வைத்த இடத்தில் இருக்கிறோமா?
  • தேவன் நம்மை வைத்த ஆலயத்தில் நிலைத்திருக்கிறோமா?
  • தேவன் நம்பிக் கொடுத்த பொறுப்பில் உண்மையாயிருக்கிறோமா?
  • தேவன் தந்த வேலையைச் சரியாய்ச் செய்கிறோமா?
  • ஜெப நேரத்தில், வேத தியான நேரத்தில் நாம் எங்கே இருக்கிறோம்?
  • ஆலய ஆராதனை நாளில் நாம் எங்கே இருக்கிறோம்?

வேலை, படிப்பு, குடும்பம், நண்பர்கள், பெற்றோர், அறிமுகமானவர்கள், உறவினர்கள் முக்கியம்தான். அதைத்தாண்டி ஆண்டவர் முக்கியம்.

தேவ பிள்ளைகளே!

  • நம் வாழ்வில் ஆண்டவர் விரும்பாத, சொல்லாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
  • ஆண்டவர் விரும்பாத எந்த வேலையிலும், அலுவல்களிலும் தலையிடக்கூடாது.
  • தேவனை விட்டுப் பிரிக்கிற காரியங்களுக்கு இடங்கொடுக்கக்கூடாது.
  • அவரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார். அவரை விட்டீர்களானால் அவரும் விட்டுவிடுவார். அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
  • வாழ்க்கையில் எதை இழந்தாலும் ஆண்டவரை இழந்துவிடக்கூடாது.
  • வழியிலே ஆபத்து இருக்கிறது; வழியிலே கள்ளன் நிற்கிறான்.
  • இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் ஆசீர்வாதம், பாதுகாப்பு.

ஜெபம்:

ஆண்டவரே, எதை இழந்தாலும் உம்மை இழந்துவிடக்கூடாது. உமக்காக நான் எதையும் இழக்க ஆயத்தம். (எனக்கு நீங்க தேவை; நீங்க இல்லாம நா இல்ல.)

பாடல் — எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை

எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை
உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா
நீங்க இல்லாமல் நான் இல்லப்பா

வாழ்வு தந்தவர் நீர்தானையா
வாழ வைப்பதும் நீர்தானையா
பிரிவதில்லை, உம்மை மறப்பதில்லை
இயேசுவே, உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை

கரம் பிடித்தவர் நீர்தானையா
கைவிடாதவர் நீர்தானையா

  • எரிகோவைப் போன்ற தவறான வழியைத் தேர்ந்தெடுப்பீர்களானால் அங்கே ஆபத்து இருக்கிறது. வழியிலே கள்ளன் நிற்கிறான்.
  • எருசலேமை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்கள். (வெறுக்கிறவர்கள்)
  • எருசலேமை நேசிக்கிறவர்களின் அலங்கத்திற்குள்ளே சமாதானம், சுகம்.

2. ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் தனிப் பிரயாணம் போகையில்

  • ஒரு மனுஷன் ஏன் கள்ளர் கையில் அகப்பட்டான்?
  • ஒருவனாய் வருகிறான்; தனியா வருகிறான். (தனிப் பிரயாணம்) தனிமை.
  • தனிமைதான் மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டுவருகிறது.

மார்த்தாள், மரியாள் வீட்டில் இயேசு வரும்போது மரியாள் அவர் சமுகத்தில் அமர்ந்து வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். ஆனால் மார்த்தாளோ பல வேலை செய்து ஆண்டவரைப் பார்த்துக் கேட்கிறாள்: “நான் தனியே வேலை செய்கிறேன்.”

அநேகர் இன்று இப்படித்தான்:

“எனக்கென யாருமில்லை.
நா தனிமையா இருக்கிறேன்; நா தனியா வேலை செய்கிறேன்.
என்னைப் புரிஞ்சுக்கிறதுக்கு யாருமில்லை. என் கஷ்டத்தை யார்ட்ட சொல்ல?
நாளெல்லாம் இப்படியே தனியா இருக்கணுமா?”

ஆனால் வசனத்தில்:

  • நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை.
  • நான் உன்னைத் திக்கற்றோராய் விடேன்.
  • நான் உன்னை மறப்பதில்லை; உள்ளங்கையில் வரைந்திருக்கிறேன்.
  • நான் உனக்குத் துணை நிற்கிறேன்; பயப்படாதே.
  • நான் உனக்கு முன்பாகச் செல்வேன்.
  • நான் உன் வலதுகரத்தைப் பிடித்து நடத்துவேன்.

ஆனால் இங்கே ஒரு மனுஷன் தனிப் பிரயாணம் செய்கிறான். ஆகவேதான் ஆபத்து.

தேவ பிள்ளைகளே!

  • பிசாசு நம்மைக் கவிழ்க்கும் நேரம் தனிமையில்தான், தனித்திருக்கும் போது.
  • தனியா உட்கார்ந்து யோசிக்கிறது, தனிமையை அதிகமாய் விரும்புவது.
  • வேறு யாரிடமும் பேச மனமில்லாத நிலை.
  • தனியாகவே தனியறையிலே நாட்களைக் கழிப்பது; அது மிகப்பெரிய ஆபத்து.
  • குடும்பத்தோடு ஒட்டவே மனமில்லாத நிலை.
  • தனி ஜெபம் பிடிக்கும்; குடும்பமாக ஜெபிக்கப் பிடிக்காது.
  • தனியா எங்கையாவது நேரம் செலவுபண்ணப் பிடிக்கும்; குடும்பமாக இருப்பது பிடிக்காது.
  • தனியா ஹோட்டல் போகப் பிடிக்கும்; குடும்பமாகப் போவது பிடிக்காது.
  • தனியா போனில் பேசுறது ஜாலி; குடும்பமாக இருந்து பேசினால் பிடிக்காது.
  • மற்றவரின் நல்ல ஆலோசனையைக் கேட்க மனசு இருக்காது.
  • என் வழி தனி வழி. (எனக்கு எல்லாம் தெரியும்.)
  • வழியிலே கள்ளன் நிற்கிறான்; கள்ளர் கையில் பிடிபடுவோம்.

ஆனால் தேவ மனிதர்கள்:

  • மோசே சொன்னார்: “உங்க சமுகம் கூட வரலனா நா போக மாட்டேன்.”
  • ஆபிரகாமைத்தான் ஆண்டவர் அழைத்தார். தனியே வந்தாரா? சாராளையும் கூப்பிட்டு வந்தார்.
  • யாபேஸ் ஜெபிக்கும்போது: “தேவரீர், நீர் என்னோடுகூட இருந்து…”
  • யாக்கோபு: “தேவன் என்னோடு இருந்து, நான் போகிற இந்த வழியிலே காத்து…”
  • ஆண்டவர் சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது தனியாக அனுப்பவில்லை. இரண்டு இரண்டு பேராக அனுப்பினார். ஏன்? தனிமை ஆபத்தானது.
  • இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த நாட்களில் தம்மோடு இருக்க 12 பேரைத் தேர்ந்துகொண்டார்.
  • நமக்கு ஆவிக்குரிய நண்பர்கள் மிக மிக அவசியம். வெற்றியிலும் தோல்வியிலும் கூட இருக்கிற நண்பர்கள், பாராட்டுகிறவர்களாக மட்டுமில்லாமல் தவறைக் கண்டிக்கிற நண்பர்கள் அவசியம்.
  • சீஷர்கள் படகில் போகும்போது ஆபத்து வந்தது. இயேசு இருந்ததால் பாதுகாக்கப்பட்டார்கள்.
  • சரீரப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் தனிமை மிக ஆபத்து.
  • இங்கே ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குத் தனியா வந்தான்.
  • அவரோடு கூட இருக்கணும், வாழணும், சேர்ந்து பிரயாணம் பண்ண வேண்டும்.

பாடல்: நான் போகும் இடமெல்லாம் நீங்க வரணும்

என்னை வாழவைக்கும் அன்பு தெய்வமே
என்னைத் தாங்கி நடத்தும் அன்பு இயேசுவே
நீங்க இல்லாத ஒரு நிமிஷம்கூட என்னால நெனச்சுப் பார்க்க முடியல

நான் போகும் இடமெல்லாம் நீங்க வரணும்
நான் அமரும் இடமெல்லாம் நீங்க அமரணும்
நான் பேசும் பேச்சிலெல்லாம் நீங்க இருக்கணும்
நீங்க இல்லாம நான் இல்லையே

கண்ணீரில் நான் நடந்து போகும்போது
கண்ணீரைத் துடைத்தெறிந்த தேவனே
கலங்கியே நின்ற எந்தன் வாழ்வில்
ஒளியாக வந்துதித்த தெய்வமே

தனிமையிலே நான் நடந்து போகும்போது
தோளோடு தோள் கோர்த்த தேவனே
தவறி நான் கீழே விழுந்தபோது
தூக்கியே சுமந்து சென்ற தெய்வமே

3. ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்

(எதிர்த்துப் போரிட்டான் என்று இல்லை; அகப்பட்டான், சிக்கினான்.)

ஏன்? அவனுக்கு எதிர்க்கப் பெலனில்லை.

  • இன்று ஏன் பல நேரங்களில் நம் வாழ்வில் தடுமாற்றம் தெரியுமா?
  • ஏன் சோர்ந்து போகிறோம் தெரியுமா?
  • ஏன் சோதனைகளைத் தாண்ட முடியவில்லை தெரியுமா?
  • ஏன் பிரச்சனையை மேற்கொள்ள முடியவில்லை தெரியுமா?
  • ஏன் பிசாசை ஜெயிக்க முடியவில்லை, பாவத்தை மேற்கொள்ள முடியவில்லை தெரியுமா?
  • ஏன் அடிக்கடி தவறுகிறோம், பாவத்தில் விழுந்து எழுகிறோம் தெரியுமா?

“தேவ பெலன் இல்லாததால்.”

1 கொரி

நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனம் கொடாமல், பாலைக் குடிக்கக் கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.

காலத்தைப் பார்த்தால் புருஷனாய் இருக்க வேண்டியவர்கள், ஆனால் இன்னமும் குழந்தையா இருந்தால் எப்படி?

ஏசாயா 40:31

சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.

இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள்; வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

இந்தப் பெலன் எத்தனை பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் குடித்தாலும் கிடைக்காது. தாகத்தோடு, வாஞ்சையோடு, “அப்பா, தாங்க” என்று கேட்டால் கிடைக்கும்.

சங்கீதம் 138:3

“நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறு உத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்.”

இங்கே ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில்:

  • பெலன் இல்லாததினால்தான் இந்த மனுஷன் கள்ளர் கையில் அகப்பட்டான்.
  • பெலன் இல்லாததினால்தான் அவனுடைய வஸ்திரங்களை உரிந்தார்கள்.
  • பெலன் இல்லாததினால்தான் அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக்கினார்கள்.

அப். 1:8

“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றார்.

ஜெபம்

சாட்சி சொல்கிறவர்களாக அல்ல, சாட்சியாய் இருக்க, ஜெயமெடுக்க.

என் மாம்ச பெலத்தினால் ஒன்றுமில்லை; உம் பெலனைத் தாரும்.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, ஆவியினால் எல்லாம் ஆகும்.

Post navigation

Previous: பிரிட்டனின் மிக அழகான கட்டிடமாகத் தேர்வு செய்யப்பட்ட வெல்ஸ் பேராலயம்!

இதையும் படிக்கலாம்

ten virgins
  • வேதபகுதி பிரசங்கங்கள்

பத்து கன்னிகைகளின் உவமை — மணவாளனைச் சந்திக்க ஆயத்தமா?

Editorial Team October 16, 2026
Prodigal Son
  • வேதபகுதி பிரசங்கங்கள்

காணாமற்போன மகன் — திரும்பி வந்தவனைத் தழுவிய தகப்பன்!

Editorial Team October 15, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

Editorial Team October 21, 2026
அப்போஸ்தலனாகிய பவுல்: கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, சுவிசேஷத்திற்காகப் போராடிய மனிதர் writer paul
  • வேதாகம மனிதர்கள்

அப்போஸ்தலனாகிய பவுல்: கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, சுவிசேஷத்திற்காகப் போராடிய மனிதர்

October 16, 2026
சீமோன் சிரேனே — இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதன்! Simon of Cyrene
  • வேதாகம மனிதர்கள்

சீமோன் சிரேனே — இயேசுவின் சிலுவையைச் சுமந்த மனிதன்!

October 16, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

ways
  • வேதபகுதி பிரசங்கங்கள்

வழியிலே வரும் ஆபத்து

Editorial Team October 22, 2026
Wells Cathedral
  • வரலாறுகள்

பிரிட்டனின் மிக அழகான கட்டிடமாகத் தேர்வு செய்யப்பட்ட வெல்ஸ் பேராலயம்!

Editorial Team October 22, 2026
Jericho
  • வியாக்கியான பிரசங்கங்கள்

எரிகோவின் சாபமும் ஆசிர்வாதமும்

Editorial Team October 22, 2026
fr accident
  • உலகம்

ஈக்வடாரில் பிரார்த்தனையின்போது பாதிரியார் மீது விழுந்த சிலுவை: நேரலையில் அதிர்ச்சி சம்பவம்!

Editorial Team October 22, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.