Skip to content
October 30, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • வேதபகுதி பிரசங்கங்கள்
  • கன்மலையின் மேல் உயர்த்துவார்!
  • வேதபகுதி பிரசங்கங்கள்

கன்மலையின் மேல் உயர்த்துவார்!

Editorial Team October 30, 2026 1 minute read
Hut

சங்கீதம் 27:5

“தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்!”

நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான தீங்கு நாட்களைப் பார்த்திருப்போம் அல்லது அதன் வழியாகக் கடந்து சென்றிருப்போம் அல்லது கடந்து சென்றுகொண்டிருப்போம்.

அவை,

  • நம் மனம் உடைந்துபோன நாளாக,
  • நம் நம்பிக்கையெல்லாம் நசுங்கிப்போன நாளாக,
  • நமக்கு விரோதமான எதிரிகள் சூழ்ந்த நாளாக,
  • தோல்வியையும் அவமானத்தையும் சந்தித்த நாளாக,
  • பலரால் பகைக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட நாளாகக்கூட இருக்கலாம்.

ஆனால், நிச்சயமாகவே நம் தேவன் நம்மைக் கன்மலையின் மேல் நிறுத்தி உயர்த்த வல்லமையுடையவராயிருக்கிறார்.

எனக்கு ஏன் இந்தத் தீமை, நெருக்கம், உபத்திரவம், பாடு, வேதனை, கண்ணீர், துக்கம், வெறுமை, பெலவீனம், அவமானம், ஆபத்து எனப் பலவிதமான தீங்குகள் நேரிடுகின்றன என்று பயந்து, என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பீர்களானால், உங்களுக்குத்தான் இந்த வார்த்தை:

கன்மலையின் மேல் உயர்த்துவார்!

செப்பனியா 3:15-17

  • இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
  • எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
  • அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.

நம்மில் இன்று அதிகமாகக் காணப்படுவது பயம்தான். பயம் பல விதங்களில் வருகிறது.

  • வியாதியைக் குறித்த பயம், எதிர்காலத்தைக் குறித்த பயம்.
  • பிள்ளைகளின் படிப்புக் காரியங்கள், தேவைகளைக் குறித்த பயம்.
  • வேலைக்காரியங்களைக் குறித்த பயம்.
  • எதிர்பார்த்தது நடைபெறாததைக் குறித்த பயம்.
  • வாழ்வில் சில இழப்புகளைக் குறித்த பயம்.
  • எதிர்மறையான சூழ்நிலையைக் குறித்த பயம்.

ஆனால், கர்த்தர் சொல்கிறார்:

  • பயப்படாதே, தளராதே!
  • உன் நடுவில் நான் இருக்கிறேன்.
  • உன்னை விடுவிக்க, இரட்சிக்க, பாதுகாக்க, சுகம் தர,
  • உன் தேவையைச் சந்திக்க, சூழ்நிலையை மாற்ற,
  • உன் வேதனையை, துக்கத்தை மாற்ற,
  • உன் கண்ணீரைத் துடைக்க உன் நடுவில் நான் இருக்கிறேன்.

இனி தீங்கைக் காணாதிருப்பாய்! நீ பயப்படாதே, தளராதே; நான் இருக்கிறேன்.

எதைக்குறித்தும் பயப்பட வேண்டாம்!

சங்கீதம் 91:5, 6

இரவில் உண்டாகும் பயங்கரத்திற்குப் பயப்படாதிருப்பாய்.

சங்கீதம் 91:7

உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அந்தத் தீங்கு உன்னை அணுகாது.

யாரை அணுகாது?

கூடார மறைவில் இருப்பவர்களுக்கு.

சங்கீதம் 91:1-3

உன்னதமானவரின் மறைவில், அவர் நிழலில் இருப்பவர்களுக்கு.

அவரை அடைக்கலமாகவும், தெய்வமாகவும், கோட்டையாகவும், தஞ்சமாகவும், அரணாகவும், கன்மலையாகவும், நம்பிக்கையாகவும், தாபரமாகவும் கொண்டிருப்பவர்களுக்கு:

  • தீமை அணுகாது.
  • பொல்லாப்பு நேரிடாது, வாதை அணுகாது, ஆபத்து நேரிடாது.
  • வேடனுடைய கண்ணியோ, பாழாக்கும் கொள்ளைநோயோ அணுகாது.
  • உன்னைக் காக்கத் தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
  • காரியங்களை மாறுதலாய் முடியப்பண்ணுவார்.
  • நமக்காக யாவையும் செய்து முடிப்பார்.

சங்கீதம் 91:4

  1. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்.
  2. அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்.

சங்கீதம் 27:5

  1. அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து,
  2. என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து,

யாத்திராகமம் 14

  • இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானான் பயணத்தில் சென்றபோது, செங்கடல் ஒரு பெரிய தீமையைப்போலத் தெரிந்தது.
  • பின்னிட்டுப் பார்த்தால் பார்வோனின் சேனை; இருபுறமும் சீனாய் மலை. எங்கும் அடைக்கப்பட்ட சூழ்நிலை.

மோசே சொன்னார்:

  • பயப்படாதேயுங்கள்!
  • கர்த்தர் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.
  • இன்று காணும் இவர்களை ஒருபோதும் காண்பதில்லை.
  • மேகஸ்தம்பம், அக்கினிஸ்தம்பம் மூலம் அவர்களை மறைத்தார், ஒளித்து வைத்தார்.
  • ஆக்கினைகளை அகற்றினார், சத்துருக்களை விலக்கினார்.

ஆதியாகமம் 21:17 – ஆகார்

ஆகாரும் குழந்தையும் வனாந்தரத்தில் இருந்தார்கள். தண்ணீர் இல்லை. பிள்ளை சாகப்போகிறது என்று பயந்துபோய் நின்ற ஆகாரைப் பார்த்து, தேவன், “பயப்படாதே” என்றார்.

  • உலகமும், குடும்பமும் ஆகாரை மறந்தது. நம்பியவர்கள் ஆகாரை மறந்தார்கள்.
  • ஆனால், இந்த மறைவிற்குள் அவர் சமூகத்திற்குள் வந்தபடியால், வனாந்திரமும் வயல்வெளியானது. “நீர் என்னைக் காண்கிறவர்” என அவ்விடத்திற்குப் பெயரிட்டாள்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

யோசேப்பை நினைத்துப் பாருங்கள்!

  • உடன்பிறந்தவர்களே யோசேப்புக்குத் தீமை செய்தார்கள்.
  • அவனை மறந்தே போனார்கள்; அவனை விற்றுப்போட்டார்கள்.
  • அவன் குழியிலும், சிறையிலும் இருந்தபோதும் அவர் மறைவில் இருந்தான்.
  • ஒரே நாளில் மன்னரின் மாளிகைக்குள் அழைக்கப்பட்டான்!

தாவீதை நினைத்துப் பாருங்கள்!

  • எல்லாரும் மறந்தார்கள், ஒதுக்கி வைத்தார்கள், கைவிட்டார்கள்.
  • ஆனால், தாவீதோ வனாந்தரத்திலும் அவர் மறைவிற்குள் இருந்தான்.
  • இராஜாவாக முடிசூட்டப்பட்டான்.

யாக்கோபை நினைத்துப் பாருங்கள்!

  • தன் சொந்த வீட்டை விட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சகோதரனுக்குப் பயந்து, வெறுங்கையாய் வனாந்தரத்தில் தனியே கைவிடப்பட்டவன்.
  • ஆனால், வனாந்தரத்தில் இந்த மறைவிற்குள் வந்தபடியால் பல ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்தான். இஸ்ரவேல் என்னும் தனி தேசமாகவே மாற்றினார்.

தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவை நினைத்துப் பாருங்கள்!

  • அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள்; எல்லாராலும் மறக்கப்பட்டவர்கள்.
  • மறைவிற்குள் இருந்தபடியால் அக்கினியோ, சிங்கமோ அவர்களைச் சேதப்படுத்தவில்லை.
  • தேசத்தில் உயர்ந்த இடத்தில் அவர்களை உயர்த்தினார்.

யோபுவை நினைத்துப் பாருங்கள்!

  • எல்லாம் இழந்துபோனது. எல்லாரும் மறந்துபோனார்கள். தனிமையிலும் இருந்தார்.
  • இந்த மறைவிற்குள் இருந்ததால் இரட்டிப்பான நன்மை கிடைத்தது.

உங்களையும் உயர்த்த வல்லவராயிருக்கிறார்!

இன்று எந்த அளவு மறக்கப்படுகிறீர்களோ, அந்த அளவு அவர் மறைவிற்குள் வந்து சேருங்கள்.

அவர் கரத்தில், சமூகத்தில், ஆலயத்தில், நிழலில், மறைவில் ஒளிந்து நிற்கிற, அடங்கியிருக்கிற, அடைக்கலமாகிறவர்களை அவர் நிச்சயமாய் தீங்கிலிருந்து விடுவிக்கவும், பாதுகாக்கவும், உயர்த்தவும் வல்லவராயிருக்கிறார்.

யோவேல் 2:27

  • நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும்,
  • நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும்,
  • என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை என்றும் அறிந்துகொள்வீர்கள்.

“தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்!”

– Rev. B. Kiruban Joshua

Post navigation

Previous: வன்முறை மற்றும் மதத் துன்புறுத்தலால் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை: எச்சரிக்கும் புதிய அறிக்கை
Next: பயப்படாதே, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

இதையும் படிக்கலாம்

Your wounds will heal
  • வேதபகுதி பிரசங்கங்கள்

உன் காயங்கள் மாறும்

Editorial Team October 28, 2026
ways
  • வேதபகுதி பிரசங்கங்கள்

வழியிலே வரும் ஆபத்து

Editorial Team October 22, 2026
ten virgins
  • வேதபகுதி பிரசங்கங்கள்

பத்து கன்னிகைகளின் உவமை — மணவாளனைச் சந்திக்க ஆயத்தமா?

Editorial Team October 16, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

boy crying
  • தியான செய்திகள்

மறைந்து போன கருப்புக் கறை

Editorial Team October 30, 2026
Depression
  • வியாக்கியான பிரசங்கங்கள்

பயப்படாதே, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

Editorial Team October 30, 2026
Hut
  • வேதபகுதி பிரசங்கங்கள்

கன்மலையின் மேல் உயர்த்துவார்!

Editorial Team October 30, 2026
church_demolished
  • உலகம்

வன்முறை மற்றும் மதத் துன்புறுத்தலால் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை: எச்சரிக்கும் புதிய அறிக்கை

Editorial Team October 29, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.