Skip to content
October 30, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • பிரசங்க குறிப்புகள்
  • வியாக்கியான பிரசங்கங்கள்
  • பயப்படாதே, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்
  • வியாக்கியான பிரசங்கங்கள்

பயப்படாதே, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

Editorial Team October 30, 2026 1 minute read
Depression

யோவேல் 2:21 – தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

எல்லாருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பயம் இருக்கிறது. அது பல விதங்களில் காணப்படுகிறது.

  • வாழ்க்கை குறித்த பயம்,
  • குடும்பத்தைக் குறித்த பயம்,
  • பிள்ளைகளைக் குறித்த பயம்,
  • எதிர்காலத்தைக் குறித்த பயம்,
  • பொருளாதாரத்தைக் குறித்த பயம்,
  • தேவைகளைக் குறித்த பயம்,
  • நெருக்கங்களைக் குறித்த பயம்,
  • கடன் பாரங்களைக் குறித்த பயம்,
  • தனிமையை நினைத்துப் பயம்,
  • இழந்து போனவற்றை நினைத்துப் பயம்,
  • எதிர்மறையானவற்றை நினைத்துப் பயம்,
  • வியாதிகளைக் குறித்த பயம்,
  • எதிராளிகளை நினைத்துப் பயம்,
  • ஆபத்தைக் கண்டு பயம்,
  • தற்போது தேர்வைக் குறித்த பயம்,
  • சிலருக்கு இருளைப் பார்த்தாலே பயம்.

பல விதங்களில் பயத்தினால் ஆளப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். வேதாகமத்தில் பலருடைய வாழ்க்கையில் பயந்து இருந்த சூழ்நிலையில் ஆண்டவர் அவர்களைத் தைரியப்படுத்தி, திடப்படுத்தி, பலப்படுத்தி, பயத்தோடு காணப்பட்ட அவர்களுடைய வாழ்க்கையில் மகிழவும் பெருகவும் செய்து வந்ததைப் பார்க்க முடிகிறது.

  • ஆதி 15:1 – ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
  • ஆதி 21:17 – ஆகாரே, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
  • ஆதி 26:24 – ஈசாக்கைப் பார்த்து, பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
  • நியா 6:23 – கிதியோனே, பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
  • ரூத் 3:11 – மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்.
  • ஏசாயா 41:10 – யாக்கோபே, நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
  • தானி 10:19 – பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்.
  • அப் 27:24 – பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும்; இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
  • சங்கீதம் 91:5 – இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
  • யாத் 14:13 – இஸ்ரவேல் மக்களைப் பார்த்து, பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்.
  • யோசுவா 8:1 – யோசுவா, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு.
  • லூக்கா 1:13 – சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்.
  • லூக்கா 1:30 – மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்.

இன்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து அதைத்தான் சொல்கிறார்: நீ பயப்படாதே!

  • எது உங்களைப் பயமுறுத்துகிறது? எது உங்களைக் கலங்கச் செய்கிறது?
  • ஏதாவது ஒரு காரியத்தை நினைத்துப் பயந்து போயிருக்கிறீர்களா?
  • எதிர்மறையான சூழ்நிலையினால் ஆளப்பட்டிருக்கிறீர்களா?
  • இந்தக் காரியம் எப்படி ஆகும் என யோசிக்கிறீர்களா?
  • என் காரியம் வாய்க்குமா? பதில் கிடைக்குமா? விடுதலை கிடைக்குமா?

உங்களுடைய பயத்திலிருந்து ஆண்டவர் இன்றைக்கு விடுதலை தருவாராக!

1. பயப்படாதே! கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

  • நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாகவே அற்புதம் செய்வார்.
  • எதிர்பார்க்கிற காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
  • அதிக நாட்கள் காத்திருந்து சோர்ந்து போனீர்களா? நீங்கள் விரும்பியதை அவர் நிச்சயமாய்த் தருவார். பயப்படாதேயுங்கள்.

உதாரணமாக,

வேதாகமத்தில் ஒரு பகுதியைத் தியானிப்போம்.

1 இராஜாக்கள் 17:8-16

பயம் – இதோடு வாழ்க்கை முடியப்போகிறது. இனி அவ்வளவுதான், வாழ முடியாது.

ஆனால், பயப்படாதே – உன் வாழ்வு இனிதான் ஆரம்பமாகிறது.

  • 10 – தண்ணீர் – மனந்திரும்புதலுக்கு, இரட்சிப்புக்கு அடையாளம்.
  • 11 – அப்பம் – தேவ வார்த்தைக்கு அடையாளம்.
  • 13 – உன் வார்த்தையின்படி செய். ஆனால் முதலில் எனக்கு, பின் உனக்கு.
  • 14 – ஒன்றும் குறையாது – தேவ வாக்கு.
  • 15 – எலியாவின் சொற்படி செய்தாள் – பெரிய அற்புதத்தைப் பார்த்தாள்.
  • 15 – அநேக நாள் அனேகர் சாப்பிட்டார்கள்; வீட்டாரும் சாப்பிட்டார்கள்.

லூக்கா 5:1-7 – வெறுமையான வாழ்வில் இதுவரை இல்லாத ஆசீர்வாதம்

  • 2 – வெறும் வலை – வெறுமையான வாழ்வு, குறைவுள்ள வாழ்வு, இழந்து போன வாழ்வு, விரக்தி, ஏமாற்றம், தோல்வி, கவலை, பயம். என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? தேவை, பற்றாக்குறை இவைகளையே பேசிக்கொண்டிருப்பது, அலசிக்கொண்டிருப்பது, ஆராய்ந்துகொண்டிருப்பது.
  • 4 – ஆழத்திலே – ஆழமான விசுவாசம் (விசுவாசத்தை அபிவிருத்தி செய்தல்).
  • 5 – வலையைப் போடுகிறேன் – விசுவாசத்தில் (சுயத்தில், ஞானத்தில், திறமையில், அனுபவத்தில், முயற்சித்ததில், தெரிந்ததில், யாரோ சொன்னதில் அல்ல).
  • 6, 7 – இயேசுவின் சொற்படி செய்தான் – பெரிய காரியத்தைப் பார்த்தான்.

உடன் இருந்தவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

  • நம் தேவனால் முடியாதது (அ) கூடாதது ஒன்றுமில்லை.
  • நமக்காக யாவையும் செய்து முடிப்பார்.
  • அவர் சகலமும் செய்ய வல்லவராயிருக்கிறார்.
  • உங்களது முடியாமை, இயலாமையைக் குறித்துப் பயப்பட வேண்டாம்.
  • முடியாது என்ற சூழ்நிலையில்தான் முடியப்பண்ணுவார்.
  • முடிந்தது என்ற சூழ்நிலையில்தான் ஆரம்பிப்பார்.
  • மருத்துவரின் ரிப்போர்ட் வாய்ப்பேயில்லை எனச் சொல்கிறதா? அவர் வார்த்தை?
  • லாசரு மரித்து 4 நாட்கள் ஆனது – வார்த்தையில் விடுதலை.
  • மரித்துப்போன சிறு பெண் உயிரோடு எழுந்தாள் – வார்த்தை.
  • வெறும் கற்குடங்களில் உள்ள தண்ணீர் ஜூஸாக மாறியது – வார்த்தை.
  • நாகமானின் சரீரம் சிறுபிள்ளையின் சரீரம்போல் மாறியது – வார்த்தை.
  • கொந்தளித்த கடலும், காற்றும் அடங்கியது – வார்த்தை.
  • நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் சுகமானான் – வார்த்தை.
  • திமிர்வாதக்காரன் எழுந்து நடந்தான் – வார்த்தை.

உன் காரியத்தைக் குறித்துப் பயப்படாதே – பெரிய காரியங்களைச் செய்வார்!

2. பெரிய அற்புதங்களைப் பார்க்க வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?

யோவேல் 2:21

கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூர்ந்து காணப்பட வேண்டும்

யோவேல் 2:23 – சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார்.

செப்பனியா 3:14,15 – சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.

கெம்பீரமாய்ப் பாடு, ஆர்ப்பரிப்போடு பாடு, முழு இருதயத்தோடு களிகூரு.

  • நம் நடுவில் இருக்கிற கர்த்தரை எப்படி துதிக்கிறோம்?
  • முழு இருதயத்தோடு, முழு உள்ளத்தோடு, முழு மனதோடு, முழு பலத்தோடு, முழு ஆத்மாவோடு அன்புகூறுகிறோமா? மகிழ்ந்து களிகூருகிறோமா?
  • நம்முடைய குடும்பங்களோடு,
  • நம்முடைய நண்பர்களோடு,
  • நம்முடைய உறவினர்களோடு,
  • சொந்த பந்தங்களோடு,
  • நம்மோடு பேசி பழகினவர்களோடு மகிழ்ச்சியாய் இருக்கிறோம். ஆனால்,
  • கர்த்தரோடு (கர்த்தருக்குள்) மகிழ்ச்சியாக இருக்கிறோமா? அவருக்குள் மகிழ்ந்திருக்கிறோமா அல்லது மற்றவைகளில் மகிழ்கிறோமா?
  • அவரைப் புகழ்கிறோமா? அல்லது மற்றவர்களையும் மற்றவைகளையும் புகழ்கிறோமா?

சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்.

(நினைவுகளை, எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை, வாஞ்சைகளை.)

கேள்வி: கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

சங் 118:24 – இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

நம்முடைய ஆயுசு நாட்களோடு ஒவ்வொரு நாளும் கூட்டித் தந்திருக்கிறாரே, அதை நினைத்து அவரைத் துதிக்க வேண்டும்.

சங் 126:3 – கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருப்போம்.

எது பெரிய காரியம்?

  • என்னைத் தேடி வந்தாரே, பாவங்களை மன்னித்தாரே, அதுதான் பெரிய காரியம்.
  • என்னை இரட்சித்தாரே, அதுதான் பெரிய காரியம்.
  • அவர் பிள்ளையாகத் தெரிந்துகொண்டாரே, அதுதான் பெரிய காரியம்.
  • என் பாடுகள், நிந்தனைகள், அவமானங்கள், பலவீனங்கள், சாபங்கள், தரித்திரங்கள் எல்லாவற்றையும் தம்மேல் சுமந்துகொண்டு என்னை வாழ வைத்திருக்கிறாரே! இதைவிட வேறு பெரிய காரியம் இருக்கக்கூடுமோ?
  • எதற்கும் பிரயோஜனமற்ற வாழ்வு, நாற்றமாக இருந்த வாழ்வு,
  • யாருக்கும் உதவாத வாழ்வு. ஆனால், இதை இன்று அனேகருக்கு ஆசீர்வாதமாக வைத்திருக்கிறாரே! இது எவ்வளவு பெரிய காரியம்! இதை நினைத்து நன்றி சொல்லித் துதிக்க வேண்டும்.

நெகேமியா 8:10 – கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களுடைய பலன்.

சில துன்பங்கள், குறைவுகள், வியாதிகள், உபத்திரவங்கள் நம்மை அணுகும்போது நாம் சோர்ந்துபோகாமல், ஆண்டவர் என் நடுவில் என்னோடு இருக்கிறார் என்று விசுவாச அறிக்கை செய்வோம்.

அவர் நம்மோடு இருக்கிறபடியால், நம் வாழ்வில் வரக்கூடிய தீமையையும் நன்மையாய் மாற்ற அவர் போதுமானவர்.

சங்கீதம் 9:1,2

  • என் முழு இருதயத்தோடு உம்மைத் துதிப்பேன்.
  • உம்முடைய அதிசயங்கள் எல்லாம் விவரிப்பேன்.
  • உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்.
  • உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.

அவர் செய்த நன்மைகளை நினைத்து அவரைத் துதித்து மகிமைப்படுத்துவோம். நிச்சயமாக நம்முடைய வாழ்க்கையில் பெரிய அற்புதங்களை அவர் செய்ய வல்லவராயிருக்கிறார்.

யோவேல் 2:26,27

உங்களை அதிசயமாய் நடத்தி வந்த தேவனுடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

சங் 126:1-3 – புறஜாதிகள் பார்க்கக்கூடிய அளவில் பெரிய காரியங்களைச் செய்வார்.

Message By: Rev. B. Kiruban Joshua

Post navigation

Previous: கன்மலையின் மேல் உயர்த்துவார்!
Next: மறைந்து போன கருப்புக் கறை

இதையும் படிக்கலாம்

Jericho
  • வியாக்கியான பிரசங்கங்கள்

எரிகோவின் சாபமும் ஆசீர்வாதமும்

Editorial Team October 22, 2026
Rev.Beviston
  • வியாக்கியான பிரசங்கங்கள்

தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவு

Editorial Team September 28, 2026
message_thumbnail
  • வியாக்கியான பிரசங்கங்கள்

தப்பி கரை சேருவாய்!

Editorial Team September 25, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

boy crying
  • தியான செய்திகள்

மறைந்து போன கருப்புக் கறை

Editorial Team October 30, 2026
Depression
  • வியாக்கியான பிரசங்கங்கள்

பயப்படாதே, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

Editorial Team October 30, 2026
Hut
  • வேதபகுதி பிரசங்கங்கள்

கன்மலையின் மேல் உயர்த்துவார்!

Editorial Team October 30, 2026
church_demolished
  • உலகம்

வன்முறை மற்றும் மதத் துன்புறுத்தலால் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை: எச்சரிக்கும் புதிய அறிக்கை

Editorial Team October 29, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.