“அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.”
— அப்போஸ்தலர் 17:28
1. வைத்தியர் – நோயாளி உறவு
ஏசாயா 1:6
“…தலையெல்லாம் வியாதியாயும், இருதயமெல்லாம் பலவீனமாயும் இருக்கிறது.”
சுகமேயில்லை → வைத்தியர் தேவை
- நோயாளி தனது நிலையை வைத்தியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
- தேவன் நம்முடைய உள்ள நிலையை அறிந்து சுகமாக்குகிறவர்.
- நம்முடைய காயங்களையும், பலவீனங்களையும் அவரிடம் கொண்டு வர வேண்டும்.
2. கொல்லன் – வெள்ளி உறவு
ஏசாயா 1:25
“உன் களிம்பை நீக்கி, உன் வெள்ளியைப் பரிசுத்தமாக்குவேன்.”
களிம்பு நீங்க → சுத்திகரிப்பு
- வெள்ளியில் உள்ள களிம்பை நீக்க நெருப்பு தேவை.
- அதுபோல தேவன் நம்மில் உள்ள தேவையற்றவற்றை நீக்குகிறார்.
- எ.கா. மோசே
- கோபக்காரன் → சாந்தகுணமுள்ளவன்
- தேவனுடைய கையில் குணம் மாற்றப்பட்டது.
தேவன் நம்மை அழிப்பதற்காக சுத்திகரிப்பதில்லை; பயன்படுத்துவதற்காக சுத்திகரிக்கிறார்.
3. சலவைக்காரன் – அழுக்கு வஸ்திரம்
ஏசாயா 1:18
“உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல வெண்மையாகும்…”
உள்ளும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்
- கறை → வெளியிலிருந்து எனக்குள் வரும் தாக்கங்கள்.
- பிழை → எனக்குள் இருந்து வெளியே வரும் தாக்கங்கள்.
மாற்கு 7:21
“உள்ளிருந்து, அதாவது மனுஷருடைய இருதயத்திலிருந்து, பொல்லாத சிந்தனைகள் புறப்படும்…”
வெளியில் இருக்கும் கறை மட்டும் அல்ல;
உள்ளே இருக்கும் பிழையும் நீங்க வேண்டும்.
4. வழக்கறிஞர் – குற்றவாளி உறவு
ஏசாயா 1:18
“நாம் வழக்காடுவோம்…”
ஏசாயா 1:23
“…திக்கற்ற பிள்ளையின் நியாயம் அவர்களால் விசாரிக்கப்படுகிறதில்லை.”
- குற்றவாளிக்கு வழக்கறிஞர் தேவை.
- நமக்காகப் பரிந்துபேசுகிறவர் இயேசு.
- திக்கற்றவர்களுக்காக தேவன் வழக்காடுகிறவர்.
- நம்முடைய குற்றத்தை மறைக்காமல் அவரிடம் கொண்டு வர வேண்டும்.
5. தோட்டக்காரன் – திராட்சைத்தோட்ட உறவு
ஏசாயா 5:1-2
தோட்டக்காரன் → தோட்டத்திற்கான அக்கறை
- தோட்டத்திற்கு பாதுகாப்பு வேலி வேண்டும்.
- வாழ்க்கையிலும் வரையறை, கட்டுப்பாடு வேண்டும்.
- எல்லாவற்றிற்கும் “ஆம்” என்று சொல்லாமல், சிலவற்றிற்கு “இல்லை” என்று சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
Watch Tower
நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
“இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை.”
— சங்கீதம் 121:4
ஆலை
திராட்சை வளர்வது மட்டும் போதாது.
திராட்சை → திராட்சை ரசம்
நம்முடைய வாழ்க்கையும் தேவனுடைய கரத்தில் பயன்படும் கனியாக மாற வேண்டும்.
6. குயவன் – களிமண் உறவு
ஏசாயா 64:8
“நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் எல்லாரும் உமது கரத்தின் கிரியை.”
குயவன் → களிமண்
- களிமண் குயவனுடைய கையில் இருக்க வேண்டும்.
- அவர் விரும்பியபடி வடிவமைக்கப்பட வேண்டும்.
- அழுத்தம், திருப்புதல், மாற்றம் எல்லாம் பாத்திரத்தை உருவாக்குவதற்காக.
எ.கா. கழுதை மீது இயேசு ஏறினார்
மத்தேயு 21:2-3
- சாதாரண கழுதை.
- ஆனால் இயேசுவின் கையில் ஒப்படைக்கப்பட்டபோது பயன்பட்டது.
- நம்முடைய தகுதி அல்ல; தேவனுடைய கையில் இருப்பதே முக்கியம்.
சங்கீதம் 40:2
“அவர் என்னைப் பயங்கரமான குழியிலிருந்தும், உளையான சேற்றிலிருந்தும் தூக்கி…”
பயங்கரமான குழி
- ஆழமான குழி
- நம்மால் நாமே வெளியே வர முடியாத நிலை
உளையான சேறு
- சிக்கிக்கொண்ட நிலை
- வெளியே வர முயற்சிக்கும்போது இன்னும் ஆழமாக செல்லும் நிலை
ஆனால் தேவன் தூக்குகிறார்.
“என் கால்களை ஒரு கன்மலையின்மேல் நிறுத்தி, என் நடைகளை ஸ்திரப்படுத்தினார்.”
Message by: Rev. B. Beviston