Skip to content
October 30, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
office plant

காலை ஒன்பது மணி. அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. கணினி திரைகள் ஒளிர, கீபோர்ட்களின் ஒலி இடைவிடாமல் கேட்டது. அந்த நீண்ட டேபிளின் ஒரு மூலையில் ஒரு சிறிய குடுவை. அதில் இருந்த செடி கருகி, உயிர் இல்லாதது போல நின்றது. அது சாதாரண செடி இல்லை; அது அனுவின் செடி. ஒருகாலத்தில் பசுமையாக இருந்த அந்தச் செடியை அனு தினமும் தண்ணீர் ஊற்றி, மெதுவாக பேசிக் கவனித்தாள். அது அவளது டேபிளின் ஒரு அலங்காரம் அல்ல, அவளது மனநிலையின் பிரதிபலிப்பு.

ஆனால் கடந்த 15 நாட்கள் எல்லாம் மாறிவிட்டது. அனு அலுவலகத்திற்கு வந்தாலும், அவள் முன்பு இருந்த அனு இல்லை. சிரிப்பு மங்கியது, பார்வை சோர்ந்தது, உள்ளம் எதையோ சுமந்தது. வேலை மட்டும் செய்து அமைதியாக அமர்ந்திருந்தாள். முதல் நாள் தண்ணீர் ஊற்ற மறந்தாள்; “நாளைக்கு பார்க்கலாம்” என்ற எண்ணம். அடுத்த நாள் அந்த உணர்வும் மறந்துவிட்டது. மூன்றாம் நாளிலிருந்து, அவள் மனம் வேறு உலகத்தில் தொலைந்து போனது. அந்த 15 நாட்களில் செடி மட்டும் இல்லை, அனுவும் மெதுவாக கருகிக் கொண்டிருந்தாள்.

ஒரு மாலை, அலுவலகம் காலியாகும் நேரம். அனைவரும் கிளம்பிய பின், அனு மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் பார்வை திடீரென்று அந்தக் குடுவையைத் தொட்டது. அருகே சென்று பார்த்த போது, கருகிய இலைகள், உலர்ந்த மண். அவளது கவனக்குறைவின் சாட்சியை கண்டு, தன் கையை நீட்டி தண்டைத் தொட்டாள்; இன்னும் சிறிது உயிர் இருந்தது. “மன்னிச்சுக்கோ…” என்று அவள் மெதுவாக கண்களில் கண்ணீர் வழிய சொன்னாள். அந்தச் சொல் செடிக்காக மட்டும் அல்ல, அவளது உள்ளத்திற்கும் ஒரு ஒப்புதலாக அமைந்தது.

அந்த முதல் அனு மாற ஆரம்பித்தாள். தினமும் தண்ணீர் ஊற்றி, உலர்ந்த இலைகளை அகற்றி, மெதுவாக பேசினாள். வெளியே மாற்றம் தெரியவில்லை, ஆனாலும் ஒரு நம்பிக்கை தான். அலுவலகத்திலும் ஒரு மென்மையான மாற்றம். யாரோ ஒருவர் ஜன்னலைத் திறந்தார், எங்கிருந்தோ ஒளி உள்ளே வந்தது. அந்தச் செடியைச் சுற்றி இருந்த காற்றே மாறியது. அனுவின் மனமும் மெதுவாக உயிர் பிடித்தது.

ஒரு காலை, சூரிய ஒளி நேராக அந்தச் செடியின் மேல் விழுந்தது. அனு செடியின் அருகே வந்து பார்த்த போது, தண்டின் ஓரத்தில் ஒரு சிறிய பச்சை முனை, அதில் சிறிய புதிய இலை. அந்த நிமிடம், அவள் நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையாக சிரித்தாள். “நாம இருவரும் பிழைத்துவிட்டோம்” என்று மெதுவாக சொன்னாள். அந்தச் செடி மீண்டும் வளரத் தொடங்கியது. அனுவின் உள்ளமும் மீண்டும் உயிர் பெற்றது. ஆம், உணர்ச்சிகள் இல்லாத இடத்தில் எந்த உயிர் இருப்பினும் அது கருகும்; ஆனால் அக்கறை, நம்பிக்கை, மகிழ்ச்சி இருந்தால் உடைந்த மனமும் ஏன் உடலும் கூட மீண்டும் மலரும்.

இறைமக்களே, உங்கள் சூழ்நிலையை கரிசனை, அன்பு, மகிழ்ச்சியால் நிரப்புங்கள். உங்கள் மன உணர்ச்சி உங்களை மட்டும் அல்ல, உங்கள் வீட்டையும், உங்கள் அலுவலகத்தையும், உங்களைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களையும் மெதுவாக தொட்டு மாற்றும். எனவே, நாம் எந்த மனநிலையை விதைக்கிறோமோ, அதையே சூழ்நிலையாக அறுவடை செய்கிறோம்.

“மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதி. 17:22) என இறைவேதம் கூறுகிறது. இதன் பொருள் என்னவெனில் “மகிழ்ச்சியான இருதயம் மருந்துபோல் ஆரோக்கியம் தரும்; உடைந்த ஆவி எலும்புகளைக் காய்க்கும்” என்பதாகும்.

அருள்முனைவர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: இயேசு பிறந்த பெத்லகேம் – Bible-ல் அதன் முக்கியத்துவம்
Next: மகாராஷ்டிராவில் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட தேவாலயம்; நீதிமன்ற விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன் மாநகராட்சி நடவடிக்கை

இதையும் படிக்கலாம்

boy crying
  • தியான செய்திகள்

மறைந்து போன கருப்புக் கறை

Editorial Team October 30, 2026
reckless love
  • தியான செய்திகள்

ஒரு கண நேரத் தவறான புரிதல்!

Editorial Team October 27, 2026
worship
  • தியான செய்திகள்

ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்போம்

Editorial Team October 16, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

boy crying
  • தியான செய்திகள்

மறைந்து போன கருப்புக் கறை

Editorial Team October 30, 2026
Depression
  • வியாக்கியான பிரசங்கங்கள்

பயப்படாதே, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

Editorial Team October 30, 2026
Hut
  • வேதபகுதி பிரசங்கங்கள்

கன்மலையின் மேல் உயர்த்துவார்!

Editorial Team October 30, 2026
church_demolished
  • உலகம்

வன்முறை மற்றும் மதத் துன்புறுத்தலால் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் வெளியேற வேண்டிய நிலை: எச்சரிக்கும் புதிய அறிக்கை

Editorial Team October 29, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.