Skip to content
September 19, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • வெறுமையான வாழ்க்கை
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026 1 minute read
tn_100

Alexander the Great உலக வரலாற்றில் மிகச் சிறந்த போர்வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். பல நாடுகளை வென்று, பேரரசுகளை நிறுவி, தனது வீரத்தால் உலகத்தை அச்சுறுத்தியவர். அவரது பெயர் வெற்றியின் அடையாளமாக இன்று வரை பேசப்படுகிறது. ஆனால் அவரது வாழ்க்கையின் இறுதி தருணத்தில் அவர் கூறிய ஒரு வேண்டுகோள், அவர் அடைந்த வெற்றிகளை விட ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது.

நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில் இருந்தபோது, அவர் தனது தளபதிகளை அழைத்து, “நான் இறந்த பிறகு, என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தெரியும் வகையில் அடக்கம் செய்யுங்கள்” என்று கேட்டார். இந்த விசித்திரமான வேண்டுகோளை கேட்ட தளபதிகள் ஆச்சரியமடைந்தனர். காரணம் என்ன என்று கேட்டபோது, அவர் அமைதியாக பதிலளித்தார்:

“உலகையே வென்ற நான், இந்த உலகிற்கு வெறும் கைகளோடு வந்தேன்; இப்போது போகும் போதும் வெறும் கைகளோடு தான் செல்கிறேன் என்பதை மக்கள் அறிய வேண்டும்.”

இந்த ஒரு வாக்கியம் மனித வாழ்க்கையின் மைய உண்மையை வெளிப்படுத்துகிறது. நாம் இந்த உலகிற்கு பிறக்கும் போது எதையும் கொண்டு வருவதில்லை. நாம் இறக்கும் போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் அந்த இரண்டிற்கும் இடையில் கிடைக்கும் குறுகிய கால வாழ்க்கையில், மனிதன் பொருள்களுக்காக போராடுகிறான், போட்டியிடுகிறான், உறவுகளை இழக்கிறான்.

இன்றைய உலகில் மனிதன் மனிதனை மதிக்காத நிலை அதிகரித்துள்ளது. சின்ன விஷயங்களுக்காக கூட சண்டைகள், பிரிவுகள், பகைகள் உருவாகின்றன. ஆனால் இறுதியில், இந்த வாழ்க்கை நிலையற்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

நாம் வாழும் வாழ்க்கையை சற்று சிந்தித்துப் பார்ப்போம். வாழ்க்கையின் ஒரு பகுதி தூக்கத்தில் செல்கிறது; மற்றொரு பகுதி கவலைகளிலும், ஆசைகளிலும், பதட்டங்களிலும் கழிகிறது. நம் மனதில் ஓடும் எண்ணங்களில் பல பயனற்றவை. அவை நமக்கு அமைதியை தராமல், சோர்வை மட்டுமே தருகின்றன.

இறைவேதமும் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது: மனிதன் புல்லைப் போலவும், ஒரு மலரைப் போலவும் இருக்கிறான்; சிறிது காலம் பூத்து, பின்னர் மறைந்து போகிறான்.

இதனால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க வேண்டும். சேர்ப்பதற்காக அல்ல, பகிர்வதற்காக வாழ வேண்டும்.

நாம் மட்டும் சந்தோஷமாக இருப்பது போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சுயநலத்தை விட்டுவிட்டு, அன்பையும் கருணையையும் வளர்க்க வேண்டும். பிறருக்காக வாழும் மனநிலையே உண்மையான வாழ்வு. ஆகையால், நாம் சேர்க்க முடியாதவற்றிற்காக வாழ்க்கையை வீணாக்காமல் “அன்பு, மரியாதை, உதவி, நன்றியுணர்வு” உள்ளிட்ட பகிரக் கூடியவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.

வெறும் கைகளோடு வந்தோம்;
வெறும் கைகளோடு போவோம்;

அதற்குள் அன்பை விதைப்போம்!

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மாறும் மனமும், மாறாத தேவனும்
Next: அதிர்ச்சி அறிக்கை: இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு அதிகரிக்கும் துன்புறுத்தல்! உலக கண்காணிப்பு பட்டியலில் இந்தியா 12-வது இடம்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Mrs.Eva message
  • வேதபகுதி பிரசங்கங்கள்

புயலைக் கடந்து வா!

Editorial Team September 18, 2026
Nigeria
  • உலகம்

நைஜீரியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 300 கிறிஸ்தவர்கள் கொலை; 200-க்கும் மேற்பட்டோர் கடத்தல் – புதிய அறிக்கை

Editorial Team September 18, 2026
Galilee
  • தகவல்கள்

கலிலேயக் கடல் – இயேசுவின் ஊழியத்தோடு அதன் தொடர்பு

Editorial Team September 17, 2026
nazerth
  • தகவல்கள்

நாசரேத் – இயேசுவின் குழந்தைப் பருவ ஊர்

Editorial Team September 17, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.