சென்னை | ஜூலை 2
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டமான FCRA (Foreign Contribution Regulation Act)-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சட்டத்திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மதப்போதகரும் தமிழ்நாடு சுயாதீன திருச்சபை கூட்டமைப்பின் தலைவருமான பிலிப் நெல்சன் லியோ, தமிழக கிறிஸ்தவர்கள் சார்பில் சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர் எம். ஷாஜகான் ஆகியோரிடம் மனு வழங்கினார்.
இந்தச் சந்திப்பில் பல்வேறு கிறிஸ்தவ சபைகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். சமூக நலன், கல்வி, மருத்துவம், பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, FCRA சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய FCRA விதிமுறைகளால் பல சமூக நலத் திட்டங்கள் மற்றும் சேவைப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தியபடியே தொண்டு நிறுவனங்கள் திறம்பட செயல்பட ஏதுவான சட்டத் திருத்தங்கள் அவசியம் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர் எம். ஷாஜகான் ஆகியோர், கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
– கிங்டம் நெட்வொர்க் நியூஸ்