👉 பாஸ்டர் சிரித்தால்…
இவருக்கு பக்தியே இல்லை என்பர்.
👉 பாஸ்டர் அழுதால்…
இவருக்கு விசுவாசமே இல்லை என்பர்.
👉 பாஸ்டர் சாப்பிட்டால்…
இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பர்.
👉 பாஸ்டர் உபவாசித்தால்…
இவர் செய்வது வேதத்தின் படி தவறு என்பர்.
👉 பாஸ்டர் வெள்ளை துணி உடுத்தினால்..
இவர் நடிக்கிறார் என்பர்.
👉 பாஸ்டர் கலர் துணி உடுத்தினால்…
இவரெல்லாம் ஒரு ஊழியரா? என்பர்.
👉 பாஸ்டர் டை கட்டினால்…
இவருக்கு தலக்கனம் அதிகம் என்பர்.
👉 பாஸ்டர் மனந்திறந்து பேசினால்…
இவர் ஒரு எமோஷன் பார்ட்டி என்பர்.
👉 பாஸ்டர் அமைதியாய் இருந்தால்…
இவர் பெருமைக்காரர் என்பர்.
👉 பாஸ்டர் இயேசுவை பற்றியே பேசினால்…
இவர் பூமியில் வாழ தகுதியில்லாதவர்
என்பர்.
👉 பாஸ்டர் சத்தமாய் பேசினால்…
இவர் மாம்சத்தில் பேசுகிறார் என்பர்.
👉 பாஸ்டர் அமைதியாய் பேசினால்…
இவர் ஒரு வல்மையற்ற ஆளு என்பர்.
👉 பாஸ்டர் பாவத்தை கண்டித்தால்…
இவர் பெரிய பரிசுத்தவானோ!? என்பர்.
👉 பாஸ்டர் ஆசீர்வாதத்தை பற்றி பேசினால்…
இவர் ஒரு பின்மாற்றக்காரர் என்பர்.
👉 பாஸ்டர் குடும்ப ஒழுங்கை பற்றி பேசினால்…
இதெல்லாம் சபையில் பேசக்கூடாது
என்பர்.
👉 பாஸ்டர் கொடுத்தல் பற்றி பேசினால்…
இவருக்கு பண ஆசை வந்துவிட்டது
என்பர்
👉 பாஸ்டர் சத்தமிட்டு ஆராதித்தால்…
இவ்ளோ சவுண்டு தேவையா? என்பர்.
👉 பாஸ்டர் அமைதியாக ஆராதித்தால்…
இதில் அபிஷேகமே இல்லையே என்பர்.
👉 பாஸ்டர் கறிவிருந்து சாப்பிட்டால்…
காணிக்கை பணத்தில் சுகபோகமாக இருக்கிறார் என்பர்.
👉 பாஸ்டர் கூலும் கன்றியும் சாப்பிட்டால்…
ஐயோ பாவம், இது தேவனின் தண்டனை என்பர்.
(இப்படி…தேவனால் அபிஷேகிக்கப்பட்ட
இராஜாவை
அற்பமாய் பேசி, அவனை அசட்டைபண்ணினார்கள்;
அவனோ காது கேளாதவன்
போல இருந்தான்.
( 1 சாமு 10:27)
இப்படிக்கு,
துன்பப்பட்ட
அடிபட்ட
அனுபவப்பட்ட
பாதிக்கப்பட்ட
பாஸ்டர்.