Skip to content
October 9, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • “நான்” என்னும் அகங்காரம்
  • தியான செய்திகள்

“நான்” என்னும் அகங்காரம்

Editorial Team July 8, 2026 1 minute read
tn_4

ஒரு நாள், மனிதனின் கையில் உள்ள ஐந்து விரல்க ளுக்குள் ஒரு வினோதமான விவாதம் ஏற்பட்டது. “எங்களில் யார் முக்கியமானவர்?” என்ற கேள்வி ஒவ்வொரு விரலின் மனதிலும் எழுந்தது. அந்தச் சின்னச் சச்சரவு, விரைவில் பெரும் வாதமாக மாறியது. முதலில் கட்டைவிரல் பெருமிதத்துடன் பேசத் தொடங் கியது: “நான் இல்லாமல் நீங்கள் எதையும் செய்ய முடியாது. பிடிப்பதற்கும், பிடித்து வைத்திருக்கவும் என்னு டைய உதவி அவசியம். ஆகவே, நான்தான் உங்களில் மிக முக்கியமான வன்.”

அடுத்ததாக ஆள்காட்டி விரல் தன் பெருமையை வெளிப்படுத்தியது: “என்னைப் பயன்படுத்தியே மனிதர்கள் திசைகளைச் சுட்டிக் காட்டுகிறார்கள். வழிகாட்டுவதிலும், அறிவுறுத்துவதிலும் எனக்கு தனித்தன்மை உண்டு. அதனால், எனக்கே முக்கியத்துவம் அதிகம்.”

இதை கேட்ட நடுவிரல் சற்று கோபத்துடன் கூறியது:
“நீங்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் உயரத்தில் பார்க்கும்போது நான்தான் உங்களில் உயரமான வன். உயரம் பெருமையின் அடையாளம். ஆகவே, நான்தான் முதன்மையானவன்.”

நான்காவது விரலான மோதிர விரல் அமைதியாக தன் கருத்தை பகிர்ந்தது: “உங்களில் யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பு எனக்குண்டு. மனிதர்கள் தங்க மோதிரங்களையும் வைர மோதிரங்களையும் அணிவது என்னைத் தான். அதனால் எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. எனவே, முக்கியத் துவம் எனக்கே அதிகம்.”

இறுதியாக சுண்டுவிரல் சிரித்தபடி கூறியது: “நீங்கள் அனைவரும் உங்களைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருக் கிறீர்கள். ஆனால் ஒருவர் மற்றவரை வணங்கும்போதோ, இறைவனை வணங்கும்போதோ, நான் தான் முன்பாக நிற்கிறேன். நீங்கள் எல்லோரும் எனக்குப் பின்னால்தான் நிற்கிறீர்கள். அதனால், நான்தான் முதன்மையானவன்.”

இவ்வாறு ஒவ்வொரு விரலும் தங்களது சிறப்புகளை எடுத்துக் கூறி, தங்களை உயர்ந்தவர்களாக நிரூபிக்க முயன்றுகொண்டிருந்தன. ஆனால் அந்த விவாதத்திற்கு முடிவு எதுவும் வரவில்லை. அவ்வேளையில், சாலையில் ஒரு வியாபாரி “லட்டு! லட்டு!” என்று கூவி கொண்டு வந்தான். அதை கேட்டவுடன், எந்த விரலும் தனித்து செயல்படவில் லை. மறுவினாடி, ஐந்து விரல்களும் ஒன்றுபட்டு செயல்பட்டு, அந்த வியாபாரியிடமிருந்து லட்டை வாங்கிக்கொண்டன.

அப்போது தான் அவை உணர்ந்தன. “தனித்தனியாக இருந்தால் பெருமை பேசலாம்; ஆனால் ஒன்றிணைந்தால் மட்டுமே செயல்பட முடியும்”
இறைமக்களே, இச்சிறிய உவமை நமக்கு மிகப் பெரிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுத் தருகிறது. நம் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கும், உறவுகள் சிதைவதற்கும், மனக்கசப்புகள் உருவாகுவதற்கும் அடிப்படை காரணம் “நான்” என்னும் அகங்காரம்தான். “நான் சிறந்தவன்”, “நான் உயர்ந்தவன்”, “எனக்கே முக்கியம்” என்ற எண்ணம் மனிதனை தனிமைப்படுத்துகிறது.

தன்னை முன்னேற்றிக் காட்டிக் கொள்ளும் எண்ணம் தவறல்ல. அது ஒருவரின் முன்னேற்றத்திற்குத் தேவையானது. ஆனால் “நான் மட்டுமே சிறந்தவன்” என்ற மனப்பான்மை ஆபத்தானது. அது உறவுகளை உடைக்கிறது, மனிதநேயத் தை சிதைக்கிறது, சமுதாயத்தைப் பிரிக்கிறது.

“நான்! நான்! நான்!” என்ற சுயநலம், பெருமை, கர்வம் ஆகியவை நாளடைவில் மனிதனை மனிதத்தன்மையிலிருந்து விலக்கி விடும். அது அவனை கடினமான மனநிலையுடன் வாழ வைக்கிறது.

அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் சீடரான பேதுரு இப்படிக் கூறுகிறார். “இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங் கள். நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர் களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5:5).

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தெரியாமல் நிற்கும் மிகப்பெரிய தடையாக இருப்பது இந்த “நான்” என்னும் அகங்காரம் தான்.

எங்கெல்லாம் உறவுகள் முறிகிறதோ, அங்கெல்லாம் மறைந்து செயல்படுவது “நானும் எனதுமே” என்ற எண்ணமே. நாம் வாழும் இந்த உலகம் நிலையற்றது. இன்றிருப்போர் நாளை இல்லாமலாகலாம். அப்படியிருக்க, இந்த அளவுக்கு தலைக்கனம் எதற்காக?
நாம் உண்மையான மகிழ்ச்சியையும், பூரணத்தையும் அடைய விரும்பினால்,

அகந்தையை விட வேண்டும்.
தாழ்மையை அணிய வேண்டும்.
ஒற்றுமையை வளர்க்க வேண்டும்.

விரல்கள் தனித்தனியாக இருந்தால் அவை பலவீனமா னவை; ஆனால் ஒன்றிணைந்தால் ஒரு வலிமையான கையாக மாறுகின்றன. அதேபோல், மனிதர்கள் தாழ்மையுடன் ஒன்றிணை ந்தால், அவர்கள் வாழ்க்கை வலிமையுடனும் அர்த்தமுடனும் விளங்கும். “நான்” என்பதை விடுவோம், “நாம்” என்பதில் இணைவோம்

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: ஏழைகளின் தாய்
Next: தியாகத்தின் உயர்வு

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.