Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • பாம்புடன் விளையாடியவன்
  • தியான செய்திகள்

பாம்புடன் விளையாடியவன்

Editorial Team July 11, 2026 1 minute read
tn_32.1

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பாம்பாட்டி வாழ்ந்து வந்தான். அவன் வாழ்க்கை எளிமை யானது; ஆனால் அவன் தேர்ந்தெடுத்த தொழில் மிகவும் ஆபத்தானது. அவனிடம் ஒரு பெரிய மலைப்பாம்பு இருந்தது. அந்தப் பாம்பை வைத்து தான் அவன் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று, அந்தப் பாம்புடன் பல விதமான காட்சிகளை நடத்துவான். அவன் சொன்ன கட்டளைகளைப் பாம்பு கேட்டு நடப்பது போலத் தோன்றும். “என் மேல் ஏறு”, “என்னைச் சுற்றிக்கொள்”, “இறங்கு” என்று அவன் கூறினால், அந்தப் பாம்பும் அவன் சொற்படியே அசைவுகளைச் செய்யும்.

இந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டு மகிழ்ச்சியடைவார்கள். சிலர் பயப்படுவார்கள்; சிலர் ரசிப்பார் கள். ஆனால் அனைவரும் அவனைப் பாராட்டி காசு கொடுப் பார்கள். அந்தப் பணத்தில்தான் அவன் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். வெளியே பார்த்தால் அது ஒரு சாதாரண தொழிலாகத் தோன்றியது. ஆனால் அதன் உள்ளே மறைந்து இருந்தது ஒரு பெரிய ஆபத்து.

அவனுடைய அண்டை வீட்டாரும் நண்பர்களும் அவனை அடிக்கடி எச்சரித்தனர்: “பாம்போடு விளையாடாதே! அது எப்போது தனது இயல்பை வெளிப்படுத்தும் என்று தெரியாது. இன்று அது உன் கட்டுப்பாட்டில் இருப்பது போலத் தோன்றலாம்; ஆனால் அது ஒரு விலங்கு. அதன் இயல்பு மாறாது. வேறு ஒரு பாதுகாப்பான தொழிலைத் தேர்ந்தெடு” என்று அறிவுறுத்தினர். ஆனால் அந்தப் பாம்பாட்டி இந்த எச்சரிக்கைகளை கவனிக்கவில்லை. “இந்தப் பாம்பு எனக்கு பழகியதே. இது என்னைத் தாக்காது. எனக்கு எதுவும் ஆகாது” என்ற தன்னம்பிக்கையுடன் அவன் வாழ்ந்தான். அவன் அனுபவம் தான் அவனை பாதுகாக்கும் என்று எண்ணினான். அவன் தொடர்ந்து அதே வாழ்க்கையை நடத்திக் கொண்டே இருந்தான்.

நாள் கடந்தது. அவன் வாழ்க்கை பழையபடியே சென்றது. எச்சரிக்கைகள் அவனுடைய காதுகளில் விழுந்தாலும், அவன் மனதில் இடம் பெறவில்லை. ஒருநாள், வழக்கம்போல அவன் மக்கள் மத்தியில் தனது காட்சியை நடத்திக் கொண்டிருந்தான். மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அனைவரும் அவனை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் பாம்பை எடுத்துக் கொண்டு, “என் மேல் ஏறு” என்று கட்டளையிட்டான். பாம்பு மெதுவாக அவன் கால்களில் இருந்து மேலே ஏறத் தொடங்கியது.

அது அவன் உடலைச் சுற்றிக் கொண்டது. முதலில் கால்களை, பின்னர் இடுப்பை, அதன் பின் மார்பைப் சுற்றியது. இறுதியில் அது அவன் கழுத்து மற்றும் தலைப்பகுதியைச் சுற்றிக் கொண்டது. அவன் அதை ஒரு கலை நிகழ்ச்சியாக மாற்றி, மக்களை மகிழ்விக்கத் தொடங்கினான். மக்கள் கைத்தட்டினார்கள். சிலர் பயத்தில் கத்தினார்கள். அந்தச் சூழ்நிலை முழுவதும் ஒரு வேடிக்கையாகவே இருந்தது.
சில நிமிடங்கள் கழித்து, அவன் வழக்கம்போல் பாம்பை இறங்குமாறு கட்டளையிட்டான். ஆனால் அந்த நாளில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பாம்பு அவன் கட்டளையை ஏற்கவில்லை. மாறாக, அது அவனை மேலும் இறுக்கமாகச் சுற்றிக் கொள்ளத் தொடங்கியது.

முதலில் அவன் அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டான். ஆனால் சில நொடிகளில் அது உண்மை யான ஆபத்தாக மாறியது. அவன் தப்பிக்க முயன்றான். அவன் கத்தினான். ஆனால் பாம்பின் பிடி மேலும் இறுக்க மாகியது. அவனால் சுவாசிக்க முடியவில்லை. அவன் உடல் மெதுவாக தளர்ந்தது. எலும்புகள் நொறுங்கின. சில நொடிகளில், அந்த மனிதன் உயிரிழந்தான். அங்கே நின்றிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் பார்த்தது ஒரு காட்சி அல்ல; ஒரு உண்மை. பல ஆண்டுகள் பாம்புடன் விளையாடியவன், ஒரே நாளில் அதனால் அழிக்கப்பட்டான்.

இறைமக்களே, இந்தச்சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. தீமையுடன் விளையாடும் வாழ்க்கை, ஒருநாள் நிச்சயம் அழிவை ஏற்படுத்தும். பாவம் ஆரம்பத்தில் சுவையாகத் தோன்றும். அது நமக்கு ஆபத்தில்லாதது போலத் தோன்றும். “இது ஒரு சிறிய விஷயம் தான்” என்று நம்மை ஏமாற்றும். ஆனால் அதன் உண்மை சுபாவம் வெளிப்படும் போது, அது மனிதனை முழுமையாக அழித்து விடும்.

இதைத்தான் இறைவேதம் எச்சரிக்கிறது: “முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும்; விரியனைப்போல் தீண்டும்” (நீதிமொழிகள் 23:32).

இன்று நாம் “ஒருமுறை மட்டும்” என்று ஆரம்பிக்கும் சில விஷயங்கள், நாளை நம்மை கட்டுப்படுத்தும் அடிமைத் தனமாக மாறிவிடும். தீய பழக்கங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சி தரும். பின்னர் அது பழக்கமாக மாறும். அதன் பின் அது அடிமைத்தனமாக மாறும். இறுதியில் அது அழிவை ஏற்படுத் தும். அது உறவுகளை காயப்படுத்தும். குடும்பங்களை சிதைக்கும். மனதையும் உடலையும் பாதிக்கும். ஆகையால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எந்த விஷயத் தோடு விளையாடுகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

நாம் பாவத்துடன் விளையாடக்கூடாது. நாம் தீமையை சோதனை செய்து பார்க்கக் கூடாது. ஆரம்பத்தில் சிறியதாகத் தோன்றும் தவறுகள், பின்னர் பெரிய அழிவாக மாறிவிடும். ஆனால் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. விடுதலைக்கான வழி இருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவின் மூலம். அவர் நம்மை பாவத்திலிருந்து விடுவிக்க வல்லவர். அவர் நம்மை புதுப்பிக் கிறார். அவர் நமக்கு புதிய வாழ்க்கையை அளிக்கிறார்.

பாவத்துடன் (பாம்புடன்) விளையாடாதீர்கள்.
ஆரம்பத்தில் சுகம் தருவது, முடிவில் சோகமாக மாறலாம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: ஆழமே உயரத்தின் அடித்தளம்
Next: தாயின் தியாகம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026
pocso
  • தமிழ்நாடு

நெல்லையில் 4 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆபிரகாமுக்கு மரண தண்டனை – தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

Editorial Team August 24, 2026
joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.