Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • ஆழமே உயரத்தின் அடித்தளம்
  • தியான செய்திகள்

ஆழமே உயரத்தின் அடித்தளம்

Editorial Team July 10, 2026 1 minute read
tn_31

ஒரு நாள், ஒரு மனிதன் தன் வீட்டருகே சிலர் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தான். அவர்கள் நிலத்தை ஆழமாக தோண்டிக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் அது ஒரு சாதாரண வேலை போலத் தோன்றியது. ஆனால் அவர் நின்று கவனித்தபோது, அவர்கள் மிகவும் தீவிரமாகவும் கவனமாக வும் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருப்பதை பார்த்து ஆச்சரி யமடைந்தார்.

அவர் அருகே சென்று, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இங்கு ஒரு பெரிய கட்டிடம் கட்டப் போகிறோம்” என்று பதிலளித்தனர்.

அந்த மனிதன் மனதில் உடனே ஒரு கேள்வி எழுந்தது: “கட்டிடம் கட்டப் போகிறீர்கள் என்றால் சுவர் எழுப்ப வேண்டும்; இப்படி ஏன் தொடர்ந்து தோண்டிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்ற சந்தேகம் இருந்தாலும், அவர் அமைதியாக அங்கிருந்து சென்றார்.

மூன்று மாதங்கள் கழித்து, அவர் மீண்டும் அதே இடத்திற்கு வந்தார். இப்போது அவர் மேலும் ஆச்சரியமடைந் தார். ஏனெனில், இன்னும் அவர்கள் தோண்டிக் கொண்டே இருந்தனர். நிலம் இன்னும் ஆழமாகி இருந்தது. ஆனால் கட்டிடத்தின் எந்த வடிவமும் தெரியவில்லை. அவருக்கு அது புரியவில்லை. “இவ்வளவு நாள் ஆனதும் இன்னும் தோண்டிக் கொண்டே இருக்கிறார்களே?” என்ற குழப்பம் அதிகரித்தது.

அவர் மீண்டும் அமைதியாக சென்றாலும், அந்த காட்சி அவரின் மனதில் பதிந்துவிட்டது. ஆறு மாதங்கள் கழித்து, அவர் மீண்டும் அங்கு வந்தார். இந்த முறை அவர் பொறுமையை இழந்தார்.

அங்கே இன்னும் தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த வுடன், அவர் கோபத்துடன் கேட்டார்: “இங்கு என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்? இத்தனை மாதங்களாக தோண்டிக் கொண்டே இருக்கிறீர்களே! கட்டிடம் எப்போது கட்டப் போகிறீர்கள்?”

அதற்கு அவர்கள் அமைதியாக, “இதன் ஆழத்தைப் பாருங்கள்” என்று சொன்னார்கள். அவர் கீழே பார்த்தார். ஆனால் அவரால் அதன் முழு ஆழத்தைக் காண முடியவில் லை.

அவர் பதிலளித்தார்: “இதன் ஆழம் எனக்குத் தெரிய வில்லை. எவ்வளவு ஆழம் தோண்டியுள்ளீர்கள் என்று பார்க்க முடியவில்லை.”

அவர்கள் சிரித்தபடி கூறினர்: “இன்னும் சில ஆண்டு கள் கழித்து வாருங்கள். அப்போது இங்கு எழும் கட்டிடத்தின் உயரத்தைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த உயரத்தை முழுவதும் பார்க்கவே முடியாது. அந்த உயரத்திற்கு காரணம் இந்த ஆழமே.” அந்த வார்த்தைகள் அந்த மனிதனின் மனதில் ஆழமாக பதிந்தன.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு மிகப் பெரிய வாழ்க்கைப் பாடத்தை எடுத்துரைக்கிறது. ஒரு கட்டிடத்தின் உயரம், அதன் அடித்தளத்தின் ஆழத்தைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அடித்தளம் பலமாக இல்லாமல், உயரமான கட்டிடம் நிலைத்திருக்க முடியாது.

ஆழம் இல்லாமல் உயரம் இல்லை. நாம் பெரும்பாலும் உயரத்தை மட்டுமே பார்க்கிறோம். ஒருவரின் வெற்றி, புகழ், நிலை இவற்றைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆனால் அந்த உயரத்திற்கு பின்னால் இருக்கும் ஆழமான உழைப் பையும், பொறுமையையும், தியாகத்தையும் நாம் கவனிக்க மறந்துவிடுகிறோம். ஒரு விதை மண்ணுக்குள் புதையாமல், இருளில் இருக்காமல், அழுத்தத்தை அனுபவிக்காமல், பெரிய மரமாக வளர முடியாது. அதேபோல், கடலின் ஆழத்திற்கு செல்லாதவன், அதன் உள்ளே இருக்கும் முத்துக்களை பெற முடியாது.

“ஆழம் எப்போதும் அமைதியாக இருக்கும்;
உயரம் தான் வெளியில் தெரியும்.”

இன்றைய உலகில், பலர் உடனடியாக உயரத்தை அடைய விரும்புகிறார்கள். அவர்கள் காத்திருக்க விரும்ப வில்லை. அவர்கள் தயாராக விரும்பவில்லை. அவர்கள் அடித்தளத்தை அமைக்க விரும்பவில்லை.

குறுக்குவழியில் உயரத்தை அடைய முயல்கிறார்கள். ஆனால் குறுக்குவழியில் கிடைக்கும் உயர்வு நிலையானதாக இருக்காது. அது தற்காலிகமானது. அது விரைவில் சிதைந்து போகும். தேவன் நமக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிப்பதற்கு முன், அந்த ஆசீர்வாதத்தை தாங்கும் திறனை நம்மில் உருவாக்குகிறார்.

அவர் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.
அவர் நம்மை வடிவமைக்கிறார்.
அவர் நம்மை உறுதிப்படுத்துகிறார்.

குயவனின் கையில் இருக்கும் களிமண் போல, நாம் தேவனின் கையில் அடங்கி இருக்க வேண்டும். களிமண் தன்னிச்சையாக இருந்தால் அது அழகான பாத்திரமாக மாறாது. அது குயவனின் கையில் வடிவம் பெற வேண்டும். அதேபோல், நம்முடைய வாழ்க்கையும் தேவனின் கரங்களில் வடிவம் பெற வேண்டும். சில நேரங்களில், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் காலங்கள் “ஆழம்” போன்றதாக இருக் கும்.
எதுவும் நடக்காதது போல இருக்கும்.
முன்னேற்றம் தெரியாதது போல இருக்கும்.
இருள் சூழ்ந்தது போல இருக்கும்.

ஆனால் அந்த காலங்கள் வீணானவை அல்ல.

அவை நம்மை உருவாக்கும் காலங்கள்.
அவை நம்மை பலப்படுத்தும் காலங்கள்.
அவை நம்மை உயரத்திற்கு தயார்படுத்தும் காலங்கள்.

இதைத்தான் இறைவேதம் கூறுகிறது: “ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6).

இந்த வசனம் நமக்கு ஒரு உறுதியை அளிக்கிறது

நாம் காத்திருந்தாலும்,
நாம் மறக்கப்படவில்லை.

தேவன் நம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆகையால், வாழ்க்கையில் “ஆழமான” காலங்களை நாம் பயப்பட வேண்டாம். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் பொறுமையுடன் நிலைத்திருக்க வேண்டும்.

முடிவாக நினைவில் கொள்ள வேண்டியது:

உயரத்தை நாடுகிறீர்களா?
முதலில் ஆழத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஆழம் இல்லாமல் உயரம் இல்லை;

தேவனின் நேரத்தில் உயரம் நிச்சயம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: காணாத கயிறுகள்
Next: பாம்புடன் விளையாடியவன்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.