Skip to content
August 25, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • நியாயந்தீர்ப்பதற்கு முன்
  • தியான செய்திகள்

நியாயந்தீர்ப்பதற்கு முன்

Editorial Team July 12, 2026 1 minute read
tn_34

ஒரு நாள், ஒரு போதகர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் அமர்ந்திருந்த பெட்டி அமைதியாக இருந்தது. சிலர் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தனர்; சிலர் சாளரத்தை நோக்கி வெளியுலகைக் கவனித்துக் கொண்டிருந் தனர். அந்த அமைதிக்குள், ஒரு தகப்பனும் அவரது இரண்டு சிறிய பிள்ளைகளும் அமர்ந்திருந்தனர். ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாக இருந்தது. ஆனால் சில நிமிடங்களில், அந்தப் பிள்ளைகள் மிகுந்த உற்சாகத்துடன் ஓடிக் குதித்து விளையாடத் தொடங்கினர்.

அவர்கள் சிரித்தார்கள், கத்தினார்கள், இருக்கைகளின் இடையே ஓடினார்கள். அவர்கள் எழுப்பிய சத்தம் அந்தப் பெட்டியின் அமைதியை முற்றிலும் குலைத்தது. மற்ற பயணி கள் சிலர் எரிச்சலுடன் முகம் சுளித்தனர். சிலர் ஒன்றோ டொன்று பார்த்துக் கொண்டனர். அந்த சூழ்நிலை போதகரின் மனதையும் பாதித்தது. “இந்தப் பிள்ளைகள் இவ்வளவு சத்த மாக நடந்து கொள்கிறார்கள்; ஆனால் அவர்களது தகப்பன் ஏன் எதுவும் பேசவில்லை?” என்ற எண்ணம் அவரது மனதில் எழுந்தது.

அவர் அந்தத் தகப்பனை கவனமாகப் பார்த்தார். அந்தத் தகப்பன் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர் எதையும் கவனிக்காதவர் போல, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். அவரது முகத்தில் ஒரு அமைதி இருந்தாலும், அதில் ஒரு விதமான சோகமும் தெரிந்தது. ஆனால் அதை அந்த நேரத்தில் போதகர் கவனிக்கவில்லை. அவர் பார்த்தது வெளிப்புறம் மட்டும்; உள்ளத்தின் வேதனை அவருக்குப் புரியவில்லை.
சில நொடிகள் கழித்து, போதகரின் எரிச்சல் அதிகரி த்தது. அவர் தனது மனதில், “பெற்றோராக இருப்பவர்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க வேண்டும். இது என்ன கட்டுப்பாடில்லாத நடத்தை?” என்று எண்ணினார். அந்த எண்ணம் அவரை பேசத் தூண்டியது. அவர் ஒரு வேதாகம வசனத்தை எடுத்துக் கொண்டு, பெற்றோர் பொறுப்பைப் பற்றிப் பேசத் தொடங்கினார். பிறகு அந்தத் தகப்பனை நோக்கி, “நீங்கள் உங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்தாமல் என்ன செய்கிறீர்கள்?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டார்.

அந்தக் கேள்வி கேட்டவுடன், அந்தத் தகப்பன் மெதுவாகத் தலைநிமிர்ந்து பார்த்தார். அவரது கண்களில் இருந்த வேதனை அப்போது தெளிவாகப் பட்டது. அவர் மெதுவாகவும், மிகவும் அமைதியாகவும் பேசத் தொடங்கினார்: “ஐயா, இப்போதுதான் என் மனைவியை அடக்கம் செய்து விட்டு வருகிறேன். இந்தக் குழந்தைகள் அந்தத் துக்கத்தை மறந்து கொஞ்சம் சிரிக்கத் தொடங்கியுள்ளனர். நான் இப்போது அவர்களை கண்டித்தால், அவர்கள் மீண்டும் அந்த வேதனை யை நினைத்து அழுவார்கள்.”

அந்த ஒரு வாக்கியம் போதகரின் உள்ளத்தை உலுக்கியது. அவர் சொன்ன வார்த்தைகள் மௌனமாகிப் போயின. அவர் தன்னுடைய அவசர தீர்ப்பை உணர்ந்தார். உண்மையை அறியாமல் பேசிவிட்டதை நினைத்து மனம் வருந்தினார். உடனே அவர் அந்தத் தகப்பனிடம் மன்னிப்பு கேட்டார். அந்தத் தருணம், அவருக்கு ஒரு பெரிய வாழ்க்கைப் பாடமாக மாறியது.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகிறது. நாம் பார்க்கிறதெல்லாம் முழு உண்மை அல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நாம் காணாத கதைகள் இருக்கின்றன. வெளியில் சிரிப்பவர்களின் உள்ளத்தில் வேதனை இருக்கலாம். அமைதியாக இருப்பவர் களின் உள்ளத்தில் போராட்டம் இருக்கலாம். நம்மால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகள், அவர்கள் வாழ்க்கையில் இருக்கலாம்.

பல நேரங்களில் நாம் அவசரமாக தீர்ப்பளிக்கிறோம். ஒரு சம்பவத்தை பார்த்தவுடன், முழு உண்மையை அறியாமல் கருத்து கூறுகிறோம். ஆனால் அது தவறான முடிவுகளுக்கும், பிறரை காயப்படுத்தும் வார்த்தைகளுக்கும் வழிவகுக்கிறது. முன்கோபமும் எரிச்சலும் நம்மை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். அவை நம்மை பொறுமையற்றவர்களாகவும், கருணையற்றவர்களாகவும் மாற்றுகின்றன.

நீதியை விரும்புவது நல்லது. ஆனால் கருணையற்ற நீதியோ, முழுமையற்ற உண்மையோ, நியாயமல்ல. நாம் பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். தீர்ப்பளிப்பதற்கு முன் உணர வேண்டும். ஒருவரின் நிலையை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நமது வார்த்தைகள் காயப்படுத்தாமல் குணப்படுத்தும்.

இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு முக்கியமான வழிகாட்டு தலை அளிக்கிறார்: “நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க் கிறீர்கள்; நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை” என்று அவர் கூறுகிறார். மேலும், “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்ற வசனம், நம்முடைய பார்வையை திருத்துகிறது. நாம் வெளிப்புறத்தை மட்டுமே பார்க்கிறோம்; ஆனால் தேவன் உள்ளத்தைப் பார்க்கிறார்.

ஆகையால், நாம் நம்மை சுயமாக ஆய்வு செய்ய வேண்டும். நாம் பிறரை எவ்வாறு பார்க்கிறோம்? நாம் பொறு மையுடன் நடக்கிறோமா? நாம் கருணையுடன் அணுகுகிறோமா? நாம் மன்னிக்க கற்றுக்கொண்டுள்ளோமா? என்ற கேள்விகளை நம்மையே கேட்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள், நமது ஆன்மீக வளர்ச்சியை வெளிப்படுத்தும்.

முடிவாக, ஒருவரை நியாயந்தீர்ப்பதற்கு முன், அவரை உணர முயற்சிப்போம். பார்க்கும் கண்கள் பலருக்குக் கிடைக்கும்; ஆனால் உணர்ந்து கொள்ளும் இதயம் சிலருக்கே கிடைக்கும். அந்த இதயத்தை வளர்த்துக் கொள்ளுவோம். நியாயத்திற்கு முன் கருணையை வைப்போம். அப்போது நமது வாழ்க்கை தேவனுக்குப் பிரியமானதாக மாறும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தாயின் தியாகம்
Next: மனமென்னும் விளக்கு

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”
  • சாட்சிகள்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”

Editorial Team August 25, 2026
101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி
  • உலகம்

101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி

Editorial Team August 25, 2026
விசித்திரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இங்கிலாந்து போதகர் மீது வழக்குப்பதிவு
  • இந்தியா

விசித்திரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இங்கிலாந்து போதகர் மீது வழக்குப்பதிவு

Editorial Team August 25, 2026
வெளிநாட்டு நிதி முறைகேடு புகார்: ராஜஸ்தான் போதகருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
  • இந்தியா

வெளிநாட்டு நிதி முறைகேடு புகார்: ராஜஸ்தான் போதகருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Editorial Team August 25, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.