Skip to content
August 25, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மனமென்னும் விளக்கு
  • தியான செய்திகள்

மனமென்னும் விளக்கு

Editorial Team July 12, 2026 1 minute read
tn_35

ஒரு அமைதியான இரவு நேரத்தில், இரண்டு மனிதர்கள் ஒரு அடர்ந்த காட்டுப் பாதையில் பயணம் செய்து கொண்டிரு ந்தார்கள். அந்த பாதை மிகவும் இருண்டதாகவும், சற்று பய மூட்டுவதற்குரியதாகவும் இருந்தது. மரங்கள் உயரமாக வளர்ந்து, நிலவொளியையும் மறைத்திருந்தன. அந்த இருள் நிறைந்த சூழலில், அவர்களில் ஒருவரிடம் மட்டும் ஒரு சிறிய விளக்கு இருந்தது. மற்றொருவரிடம் எந்த வெளிச்சமும் இல்லை. இருப்பினும், அவர்கள் இருவரும் ஒன்றாகச் சென்றதால், அந்த விளக்கின் ஒளி இருவருக்கும் போது மானதாக இருந்தது.

விளக்குடன் இருந்த மனிதன் முன்னே நடந்தான்; அவன் கையில் இருந்த விளக்கு பாதையை தெளிவாக காட்டியது. அந்த வெளிச்சம், கற்களையும் தடைகளையும் வெளிப்படுத்தியது. அதனால் அவர்கள் தடுமாறாமல், பயமின்றி, நிதானமாக முன்னேற முடிந்தது. விளக்கு இல்லாத மனிதனும் அந்த வெளிச்சத்தில் நிம்மதியாக நடந்தான். “எனக்கு விளக்கு இல்லையே” என்ற உணர்வு ஆரம்பத்தில் இருந்தா லும், காலப்போக்கில் அது மறைந்து போனது. அவன் மனதில் ஒரு தவறான நிம்மதி உருவானது: “என் பாதை வெளிச்ச மாகத்தான் இருக்கிறது; எனக்கு எந்த குறையும் இல்லை.”

அவன் உணராமல் ஒரு பெரிய தவறு செய்தான். அவன் நடந்த வெளிச்சம் அவனுடையது அல்ல; அது மற்றொருவருடையது என்பதை மறந்துவிட்டான். ஆனால் அவன் அதை சிந்திக்கவில்லை. அவன் அந்த வெளிச்சத்தை நம்பி பயணம் செய்தான். அது போதுமானது என்று எண்ணி னான். இந்த நிலை, பலரின் வாழ்க்கையைப் போலவே இருந்தது. பிறரின் உதவியில், பிறரின் அனுபவத்தில், பிறரின் விசுவாசத்தில் நிம்மதியாக வாழும் மனநிலை.

சில நேரம் கழித்து, அவர்கள் ஒரு சந்திப்புச் சாலையை அடைந்தனர். அங்கு இருந்து இருவரும் வெவ்வேறு வழிகளில் செல்ல வேண்டியிருந்தது. விளக்குடன் இருந்த மனிதன் தனது பாதையைத் தேர்ந்தெடுத்து சென்றான். விளக்கு இல்லாத மனிதன் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நொடியில் தான் அவன் வாழ்க்கையின் மிக முக்கியமான உண்மையை எதிர்கொண்டான்.

விளக்குடன் இருந்தவன் சென்ற உடனே, அந்த இடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. அந்த இருள் பாதையை மட்டும் மூடவில்லை; அந்த மனிதனின் உள்ளத்தையும் ஆட்கொண் டது. அவன் எங்கு செல்ல வேண்டும் என்று தெரியாமல் திகைத்தான். அவன் இதுவரை நடந்த பாதையை நினைத் தான். அது வெளிச்சமாக இருந்தது. ஆனால் இப்போது முழு வதும் இருள். அந்த நேரத்தில் தான் அவனுக்கு உணர்வு வந்தது: “என்னிடம் சொந்தமாக ஒரு விளக்கும் இல்லை!”

அவன் மனம் வருந்தியது. “நான் இதுவரை நடந்த வெளிச்சம் என்னுடையது அல்ல. மற்றொருவருடையது தான். ஒரு சிறிய விளக்கையாவது நான் எடுத்திருக்கலாமே!” என்று அவன் தன்னைத் தானே குற்றம் சாட்டிக் கொண்டான். ஆனால் அந்த உணர்வு மிகவும் தாமதமாக வந்தது. இப்போது அவன் இருளில் நின்று கொண்டு, தன் தவறை உணர்ந்தான்.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமது வாழ்க்கையின் ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. பல நேரங் களில் நாம் பிறரின் வெளிச்சத்தில் வாழ்கிறோம். பிறரின் விசுவாசம் நம்மை இழுத்துச் செல்கிறது. பிறரின் அனுபவம் நம்மை வழிநடத்துகிறது. பிறரின் அறிவு நம்மை முன்னேற் றுகிறது. ஆனால் இவை எல்லாம் தற்காலிகமானவை. ஒரு நாள், அந்த வெளிச்சம் நம்மை விட்டு விலகிவிடும். அந்த நேரத்தில் தான் நாம் உணர்வோம் “எனக்கு சொந்தமான ஒளி தேவை” என்று.

ஒவ்வொருவருக்கும் தனித்த பாதை உள்ளது. அந்தப் பாதையை நாமே நடக்க வேண்டும். பிறர் நமக்காக எப்போதும் வெளிச்சம் கொடுக்க முடியாது. ஆகையால், நம் வாழ்க் கைக்கான ஒளியை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிறரை ஒப்பிடாமல், அவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், நம் உள்ளத்தில் ஒளியை ஏற்ற வேண்டும்.

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந் துகிறது. சிலர் மற்றவர்களின் ஜெபத்தை நம்பி வாழ்கிறார் கள். சிலர் மற்றவர்களின் விசுவாசத்தை நம்பி நிற்கிறார்கள். ஆனால் அது போதுமானதல்ல. ஒவ்வொருவரும் தனிப்பட்ட உறவை தேவனுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த உறவே நம் வாழ்க்கையின் உண்மையான வெளிச்சமாக இருக்கும்.

இறைவேதம் கூறுகிறது: “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” (யோவான் 1:9)

அந்த மெய்யான ஒளி இயேசு கிறிஸ்து. அவர் நம் வாழ்க்கையில் ஒளிர்ந்தால், எந்த இருளும் நம்மை ஆட்கொள்ள முடியாது. அவர் நம் உள்ளத்தில் இருக்கும் போது, நம் பாதை தெளிவாகும்; நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

நம் உள்ளத்தில் அந்த ஒளி ஏற்றப்பட்டால், அது நமக்குள் மட்டும் நிற்காது. அது நம் குணத்திலும் வெளிப்படும். நம் வார்த்தைகளிலும் தெரியும். நம் குடும்பத்தையும் அது ஒளிரச் செய்யும். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஒளி ஏற்றப்பட்டால், சமூகம் முழுவதும் பிரகாசிக்கும்.

முடிவாக, பிறரின் விளக்கில் வாழும் வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்காது. நமக்கான விளக்கை நாமே ஏற்ற வேண்டும். அந்த விளக்கு அறிவின் விளக்காக இருக்கட்டும்; விசுவாசத்தின் விளக்காக இருக்கட்டும்; தேவனின் சத்திய த்தின் விளக்காக இருக்கட்டும். அந்த ஒளியை நம் உள்ளத்தில் நிலைநிறுத்தினால், நம் வாழ்க்கை மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள உலகமும் ஒளிரும்.

உன் விளக்கு உன் பாதையை வெளிச்சமாக்கும்; உன் பாதை உன் வாழ்க்கையை மாற்றும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: நியாயந்தீர்ப்பதற்கு முன்
Next: செய்நன்றி மறவாத தேவன்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.