Skip to content
August 26, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • செய்நன்றி மறவாத தேவன்
  • தியான செய்திகள்

செய்நன்றி மறவாத தேவன்

Editorial Team July 13, 2026 1 minute read
tn_36

ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு ஏழை சிறுவன், தனது வாழ்க்கையை தானே போராடி முன்னேற்றிக் கொண்டி ருந்தான். அவனுக்கு பெற்றோர் ஆதரவு குறைவு; வசதிகள் இல்லை; இருந்தது ஒரே ஒன்று கல்வி மூலம் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற உறுதி. அந்த இலக்கை அடைய, அவன் வீடு வீடாகச் சென்று சிறிய பொருட்களை விற்று தனது படிப்பைத் தொடர்ந்தான். அவனுடைய ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருந்தது. அவன் சம்பாதித்த சிறிய பணத்தில்தான் அவனுடைய உணவும், புத்தகங்களும், வாழ்க்கையும் சார்ந்திருந்தது.

ஒருநாள், வழக்கம்போல் அவன் வேலைக்காக வெளியே சென்றிருந்தான். ஆனால் அந்த நாள் அவனுக்குச் சாதாரண மாக அமையவில்லை. காலை முதல் எதையும் சாப்பிடாத தால், அவன் உடல் பலவீனமடைந்தது. பசி அவனை வாட்டியது. கால்கள் நடக்க மறுத்தன. அவன் மனமும் உடலும் சோர்ந்து போனது. “இன்னும் ஒரு வீடு மட்டும் சென்றுவிட்டு ஓய்வெடுக் கலாம்” என்ற எண்ணத்துடன் அவன் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்தவள் ஒரு இளம்பெண். அவள் அந்தச் சிறுவனை பார்த்தவுடன், அவன் நிலையை உடனே உணர்ந் தாள். அவன் முகத்தில் இருந்த சோர்வு, கண்களில் இருந்த பசி, உடலில் இருந்த பலவீனம் இவை அனைத்தும் அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தன. அந்தச் சிறுவன் தண்ணீர் கேட்க வந்திருந்தான். ஆனால் அவள் தண்ணீருக்குப் பதிலாக ஒரு டம்ளர் பாலை கொண்டு வந்து கொடுத்தாள். அது வெறும் பால் அல்ல; அது கருணை கலந்த அன்பின் வெளிப்பாடு.

அந்தப் பாலை குடித்ததும், அந்தச் சிறுவனின் உடலில் புத்துணர்ச்சி வந்தது. அவன் மனம் நன்றியால் நிரம்பியது. அவன் மரியாதையுடன் கேட்டான்: “இதற்காக நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்?” அவன் வாழ்ந்த உலகில், எதற்கும் ஒரு விலை இருந்தது. ஆனால் அந்த இளம்பெண் புன்னகையுடன் பதிலளித்தாள்: “நான் உதவியை பணத்திற்காகச் செய்ய மாட்டேன். இது என் தாய் எனக்குக் கற்றுக் கொடுத்தது.” அந்த வார்த்தைகள் அந்தச் சிறுவனின் இதயத்தில் ஆழமாக பதிந்துவிட்டது. அது அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணமாக மாறியது.

காலம் நகர்ந்தது. அந்தச் சிறுவன் வளர்ந்து, தனது கல்வியை முடித்து, ஒரு சிறந்த மருத்துவராக உயர்ந்தான். வாழ்க்கை அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. ஆனால் அவன் மனதில், அந்த ஒரு டம்ளர் பாலும், அந்த இளம்பெண்ணின் கருணையும் என்றும் அழியாமல் இருந்தது.
அதே சமயம், அந்த இளம்பெண்ணின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவள் வயதாகி, ஒரு கடுமையான நோயால் பாதிக்கப்பட்டாள். அந்த நோய் மிகவும் அரியதும், ஆபத்தானதும் ஆகும். உள்ளூர் மருத்துவர்கள் அவளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இறுதியில், அவளை ஒரு பெரிய நகர மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அந்த மருத்துவமனையில், அவளுடைய நிலையை கவனிக்க ஒரு பிரபலமான மருத்துவர் அழைக்கப்பட்டார் டாக்டர் ஹாவர்டு கெல்லி. அவர் நோயாளியின் விவரங்களைப் பார்த்தபோது, அவள் வந்த ஊரின் பெயர் அவருக்கு ஒரு பழைய நினைவைக் கிளறியது. உடனே அவர் நேரடியாக சென்று நோயாளியைப் பார்த்தார். அவளைப் பார்த்தவுட னேயே, அவர் அவளை அடையாளம் கண்டார் பல ஆண்டு களுக்கு முன்பு, தன்னிடம் கருணையுடன் பாலை கொடுத்த அந்த இளம்பெண் தான் அவள்.

அந்த நினைவு அவரது உள்ளத்தை உருகச்செய்தது. “இப்போது நான் செய்ய வேண்டியது என்ன?” என்ற கேள்விக்கு பதில் அவனுக்குள் தெளிவாக இருந்தது. அவர் முழு அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் அவளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். பல நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, இறுதியில் அந்தப் பெண் குணமடைந்தாள். சிகிச்சை முடிந்ததும், மருத்துவமனை செலவுக்கான கட்டண விவரம் தயாரிக்கப்பட்டது. அது மிகப் பெரிய தொகையாக இருக்கும் என அந்தப் பெண் பயந்தாள். “இந்தக் கடனை நான் எப்படி செலுத்துவேன்?” என்ற கவலை அவளுடைய மனதை நிரப்பியது. நடுங்கும் கைகளால் அவள் அந்தக் கவரைத் திறந்தாள்.

அதில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி அவளுடைய வாழ் க்கையை மாற்றியது: “கட்டணம் முழுவதும் செலுத்தப் பட்டது. நீங்கள் கொடுத்த ஒரு டம்ளர் பாலிற்காக என்றும் நன்றியுடன், டாக்டர் ஹாவர்டு கெல்லி.” அந்த வார்த்தை களைப் பார்த்தவுடன், அவளுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்த நாள் செய்த சிறிய நன்மை, இவ்வளவு பெரிய ஆசீர்வாதமாக திரும்பி வந்ததை அவள் உணர்ந்தாள்.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை எடுத்துரைக்கிறது. நம்மால் செய்யப்படும் நன்மை கள் எதுவும் வீணாகாது. அது சிறியது என்று நாம் எண்ணி னாலும், அது தேவனுடைய கண்களில் பெரிதாகும். நாம் விதைக்கும் நன்மை, ஒருநாள் நமக்கு பலனாக திரும்பி வரும்.

இறைவேதம் கூறுகிறது: “உன் ஆகாரத்தைத் தண்ணீர் கள் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.” மேலும், “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று சொல்லப்படுகிறது. இந்த வசனங்கள், நம்முடைய செயல்களின் பலன் நிச்சயம் திரும்பும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகையால், நாம் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் மனுஷருக்காக அல்ல, தேவனுக்காகச் செய்வோம். எதிர்பார்ப்பு இல்லாமல் உதவுவோம். கருணையுடன் நடப்போம். அன்பை விதைப்போம். ஒருநாள், அந்த அன்பு நமக்கு பல மடங்கு திரும்பி வரும்.

ஒரு டம்ளர் பால் அது ஒரு சிறிய செயல் போல தோன்றலாம். ஆனால் அது ஒரு வாழ்க்கையை மாற்றியது; ஒரு உண்மையை வெளிப்படுத்தியது: நன்றி மறையாது; நன்மை வீணாகாது.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மனமென்னும் விளக்கு
Next: மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்காதீர்கள்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”
  • சாட்சிகள்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”

Editorial Team August 25, 2026
101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி
  • உலகம்

101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி

Editorial Team August 25, 2026
விசித்திரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இங்கிலாந்து போதகர் மீது வழக்குப்பதிவு
  • இந்தியா

விசித்திரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இங்கிலாந்து போதகர் மீது வழக்குப்பதிவு

Editorial Team August 25, 2026
வெளிநாட்டு நிதி முறைகேடு புகார்: ராஜஸ்தான் போதகருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
  • இந்தியா

வெளிநாட்டு நிதி முறைகேடு புகார்: ராஜஸ்தான் போதகருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Editorial Team August 25, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.