Skip to content
September 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்காதீர்கள்
  • தியான செய்திகள்

மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்காதீர்கள்

Editorial Team July 13, 2026 1 minute read
tn_37

ஒரு நாள், ஒரு கழுகு வானத்தின் அகன்ற வெளியில் தனது வலிமையையும் திறமையையும் வெளிப்படுத்திக் கொண்டு உயர்ந்து பறந்து கொண்டிருந்தது. அது சாதாரண பறவை அல்ல; வலிமையான இறக்கைகள், கூர்மையான கண்கள், கிழிக்கும் வல்லமை கொண்ட நகங்கள் இவை யெல்லாம் அதற்குக் கிடைத்திருந்தன. மலைகளைக் கடந்தும், மேகங்களைக் கடந்தும், உலகை மேலிருந்து பார்ப்பதற்கான அந்த உயர்வு அதற்கு பெருமையை அளித்தது. கீழே உள்ள உயிரினங்களை அது சிறியதாகக் கண்டு, தன்னை உயர்ந்த வனாக எண்ணியது.

அந்த உயரத்தின் மயக்கத்தில், அது கீழே நடமாடும் மிருகங்களைப் பார்த்து பரியாசமாக சிரித்தது. “நான் தான் வானத்தின் ராஜா; நான் தான் எல்லாவற்றிலும் மேலானவன்” என்ற எண்ணம் அதன் மனதில் வேரூன்றியது. அதன் உயரம் அதற்கு தாழ்மையை அளிக்கவில்லை; மாறாக, அகந்தையை வளர்த்தது.

அந்த நேரத்தில், அந்த வழியாக ஒரு பெரிய யானை மெதுவாக நடந்துகொண்டிருந்தது. அதன் நடை அமைதியா னது; அதன் தோற்றம் வலிமையானது; ஆனால் அதன் மனநிலை அமைதியுடனும் சமநிலையுடனும் இருந்தது. அதை பார்த்த கழுகு சிரித்தபடி கீழிறங்கி, யானையை நோக்கி கேள்வி எழுப்பியது: “உன்னைப் பற்றித் தான் எல்லோரும் பலசாலி என்று சொல்கிறார்கள். ஆனால் உன்னால் என்னைப் போல வானத்தில் பறக்க முடியுமா? நான் தான் உண்மையான உயர்ந்தவன்!”

அந்த கேள்வி பெருமையால் நிரம்பியிருந்தது. ஆனால் யானை அந்த வார்த்தைகளை அமைதியாகக் கேட்டது. அது கோபப்படவில்லை; அது தன்னை நிரூபிக்க முயற்சிக்க வில்லை. மாறாக, அது ஒரு ஆழமான உண்மையை வெளிப் படுத்தும் பதிலை அளித்தது: “நான் தரையில் நடந்தாலும், என் பார்வை எப்போதும் வானத்தை நோக்கியே இருக்கும். ஆனால் நீ வானத்தில் உயர்ந்து பறந்தாலும், தரையில் கிடக்கும் அழுகிய பிணங்களையே தேடுகிறாய்.”

இந்த ஒரு வாக்கியம் கழுகின் உள்ளத்தை அதிர வைத்தது. அது தன்னுடைய உண்மையான நிலையை உணர்ந்தது. உயரத்தில் பறந்தாலும், அதன் எண்ணங்கள் உயர்ந்ததாக இல்லை. அதன் பார்வை உயரத்தில் இருந்தா லும், அதன் விருப்பங்கள் தாழ்ந்ததாக இருந்தது. அது தேடியது உயர்ந்த இலக்குகள் அல்ல; தாழ்ந்த தேவைகள் மட்டுமே.

அந்த உண்மை அதன் பெருமையை உடைத்தது. அது வெட்கத்துடன் அங்கிருந்து பறந்து சென்றது. அந்த நாளில் அது ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக்கொண்டது உயரம் என்பது உடலின் உயரம் அல்ல; அது உள்ளத்தின் உயரம்.
இறைமக்களே, இந்தச் சிறிய உவமை நமக்கு ஒரு ஆழமான வாழ்க்கைப் பாடத்தை அளிக்கிறது. இன்று உலகில் பலர் உயரத்தை நாடுகிறார்கள். பதவி, பணம், புகழ், அதிகாரம் இவைகள் எல்லாம் உயர்வாகத் தோன்றுகின்றன. ஆனால் இவை உண்மையான உயர்வை அளிக்கிறதா? ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவன் எண்ணங்களும் நோக்கங்களும் தாழ்ந்ததாக இருந்தால், அந்த உயரத்திற்கு அர்த்தமில்லை.

ஒருவரிடம் கோடி கணக்கில் பணம் இருக்கலாம். ஆனால் அந்தப் பணம் பிறருக்குப் பயனாக இல்லையெனில், அது வெறும் சுமையாகவே மாறும். ஒருவரிடம் பல பட்டங் களும் அறிவும் இருக்கலாம். ஆனால் அந்த அறிவு மனிதநே யத்துடன் இணைக்கப்படாவிட்டால், அது உண்மையான ஞான மாக மாறாது. உயர்வு என்பது நாம் எவ்வளவு பெற்றுள்ளோம் என்பதில் இல்லை; நாம் எதற்காக வாழ்கிறோம் என்பதில் இருக்கிறது. திருவள்ளுவர் கூறும்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

என்ற குறள், இந்த உண்மையை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. சிறிய, தற்காலிக இன்பங்களுக்காக தவறான வழியில் செல்லாமல், நிலையான உயர்ந்த இன்பத்தைத் தேட வேண்டும் என்பதே அதன் சாரம். வாழ்க்கையின் நோக்கம் தற்காலிக சந்தோஷ த்தில் இல்லாமல், நிலையான நன்மையில் இருக்க வேண்டும்.

இன்றைய மனிதன் பல நேரங்களில் சிற்றின்பங் களைத் தேடி தனது வாழ்க்கையை வீணாக்குகிறான். தற்காலிக மகிழ்ச்சிக்காக நிரந்தர ஆனந்தத்தை இழக்கிறான். உலகத்தின் கவர்ச்சிகள் அவனை இழுத்துச் செல்கின்றன. ஆனால் அவன் “நான் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன்?” என்று சிந்திக்கவில்லை.
இறைவேதம் நமக்கு தெளிவாக அறிவுறுத்துகிறது:

“பூமியிலுள்ளவைகளையல்ல,
மேலானவைகளையே நாடுங்கள்.” (கொலோ. 3:2)

இந்த வசனம் நமது வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது. நாம் தேட வேண்டியது தற்காலிகமான பொருட்கள் அல்ல; நிலையான மதிப்புகளும் இறையருளும் ஆகும்.

நமது வாழ்க்கையின் நோக்கம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அது சுயநலத்தைக் கடந்ததாக இருக்க வேண்டும். அது பிறருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது இறை நோக்கத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் நமது வாழ்க்கை உண்மையான அர்த்த த்தை அடையும்.

முடிவாக, உயரத்தில் இருப்பது பெருமை அல்ல; உயர்ந்த நோக்கத்தில் வாழ்வதே பெருமை. நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியமல்ல; நாம் எதை நோக்கி வாழ்கிறோம் என்பதே முக்கியம். மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்காதீர்கள். சிற்றின்பத்திற்காக பேரின்பத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் நோக்கம் உயர்ந்தால், உங்கள் வாழ்க்கையும் உயர்ந்ததாக மாறும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: செய்நன்றி மறவாத தேவன்
Next: நிதர்சனமான உண்மை

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

srilanka case
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் சிறை

Editorial Team September 24, 2026
srilanka
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Editorial Team September 24, 2026
bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.