Skip to content
September 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • நிதர்சனமான உண்மை
  • தியான செய்திகள்

நிதர்சனமான உண்மை

Editorial Team July 13, 2026 1 minute read
tn_38

இன்றைய உலகை நாம் கவனமாகப் பார்த்தால், அது ஒரே நேரத்தில் இரு மாறுபட்ட முகங்களை காட்டுகிறது. ஒரு பக்கம் அளவுக்கு மீறிய செழிப்பு, மற்றொரு பக்கம் அடிப்படை தேவைகளுக்கே போராடும் வறுமை. இந்த இரண் டிற்கும் இடையிலான வித்தியாசம் சில நேரங்களில் நம்மை சிந்திக்கத் தூண்டும் அளவுக்கு ஆழமாக இருக்கிறது. சிலர் ஒரு நாளில் செலவிடும் தொகை, பலர் ஒரு வருடம் முழு வதும் உழைத்தும் சம்பாதிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த வேறுபாடு வெறும் பணத்தில் மட்டும் இல்லாமல், வாழ்க்கை முறையிலும், வாய்ப்புகளிலும், மரியாதையிலும் பிரதிபலிக்கிறது.

ஒரு பணக்காரரின் வீட்டில் உள்ள ஒரு அறையின் பரப்பளவுக்குக் கூட சமமாக இல்லாத குடிசைகளில் பல குடும்பங்கள் வாழ்கின்றன. சிலரிடம் எண்ணிக்கையற்ற ஆடை கள் இருக்கின்றன; ஆனால் சிலர் ஒரே ஒரு உடையைப் பல நாட்கள் அணிந்து வாழ்கிறார்கள். சிலருக்கு உணவு ஒரு தேர்வு; மற்றவர்களுக்கு அது ஒரு போராட்டம். ஒருவர் உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மையங்களுக்கு செல்வார்; இன்னொருவர் வயிறு நிறைய உணவு கிடைக்க தினமும் உழைக்கிறார். இந்த முரண்பாடுகள் வெறும் காட்சிகள் அல்ல; அவை சமூகத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்தும் கண்ணாடி.

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த உயரத்தை எட்டியுள்ளது. ஒரு ஸ்மார்ட் போன், ஒரு லேப்டாப், ஒரு கார் இவை அனைத்தும் சிலருக்கு சாதாரண தேவைகள் போலிவிட்டன. ஆனால் அதே நேரத்தில், ஒரு சாதாரண மொபைல் போன் கூட வாங்க முடியாமல் பலர் தவிக்கிறார்கள். ஒரே நாட்டில், ஒரே நகரத்தில் கூட இரண்டு உலகங்கள் இருக்கின்றன ஒன்று வசதியின் உலகம்; மற்றொ ன்று வறுமையின் உலகம். ஒரு பக்கம் ஏசி அறைகளில் உறங்கும் மக்கள்; மற்றொரு பக்கம் வெப்பத்திலும் இருளிலும் வாழும் மக்கள்.

இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். இது கடவுளின் திட்டமா? இல்லை. இது மனிதர்களின் செயல்களின் விளைவு. சிலர் அதிகமாக சேர்த்துக் குவிக்கிறார்கள்; சிலருக்கு அடிப்படை தேவைகளு க்கே கிடைக்கவில்லை. ஒருவர் தேவைக்கு மேல் சேமிக்கிறார்; மற்றொருவர் தேவைக்கே போராடுகிறார். இந்த சமநிலை யின்மை மனிதர்களின் சுயநலத்திலிருந்து உருவாகிறது.

நாம் அனைவரும் பகிர்ந்து வாழும் மனநிலையுடன் இருந்திருந்தால், உலகம் இவ்வளவு வறுமையால் பாதிக்கப் பட்டிருக்குமா? ஒருவர் தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்தால், இன்னொருவரின் வாழ்க்கை மாறிவிடும். ஒரு சிறிய உதவி, ஒரு கருணை செயல், ஒரு அன்பான அணுகுமுறை இவை அனைத்தும் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் நாம் பல நேரங்களில் “என்னிடம் உள்ளதை நான் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்” என்ற எண்ணத்தில் வாழ்கிறோம்.

இறைவேதம் நமக்கு மிகவும் தெளிவாக ஒரு வழியை காட்டுகிறது: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத் திலும் அன்புகூருவாயாக.” (மத்.19:19, மத்.22:39, மாற்.12:31, ரோம.13:9, கலா.5:14, யாக்.2:8)

இந்த ஒரு கட்டளை, சமூக சமநிலைக்கான அடித்தளமாக இருக்கிறது. நாம் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசித்தால், அவர்களின் தேவையை உணர முடியும். அவர்களின் துயரத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்போது பகிர்தல் இயல்பாகவே நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிடும். “தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்” (நீதி.14:21) என்ற வேதாகம வார்த்தை, கருணையின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

பிறரை உதாசீனப்படுத்துவது ஒரு பாவமாகும்; ஆனால் அவர்களை உயர்த்த முயற்சிப்பது ஒரு ஆசீர்வாதமாகும். நாம் கொடுப்பது குறையாது; அது பல மடங்கு திரும்பி வரும். அன்பு, கருணை, பகிர்தல் இவை அனைத்தும் வாழ்க்கையை வளமாக்கும் உண்மையான செல்வங்கள்.

நாம் உணர வேண்டிய முக்கியமான உண்மை என்ன வென்றால் உலகம் ஒரு குடும்பம். நாம் அனைவரும் அதில் அங்கத்தினர்கள். ஒருவரின் துயரம் மற்றொருவரின் பொறுப்பு. ஒருவரின் மகிழ்ச்சி மற்றவரின் பங்களிப்பால் உருவாகும். இந்த உணர்வு நம்மில் வந்தால், சமூகத்தில் காணப்படும் பல வேறுபாடுகள் குறைந்து விடும். மாற்றம் பெரிய அளவில் தொடங்க வேண்டியதில்லை. அது நம்மிலிருந்து தொடங்கலாம்.

ஒரு பசியானவருக்கு ஒரு உணவு அளிப்பது, ஒரு மாணவருக்கு கல்வி உதவி செய்வது, ஒரு ஏழை குடும்பத் திற்கு ஆதரவு அளிப்பது இவை அனைத்தும் சிறிய செயல்கள் போல தோன்றினாலும், அவை பெரிய மாற்றத்தின் விதைகளாக மாறுகின்றன. ஒரு நல்ல செயல் இன்னொரு நல்ல செயலை உருவாக்கும். அந்தச் சங்கிலி தொடரும்போது, சமூகம் மெதுவாக மாற்றம் அடையும்.

முடிவாக, நாம் சேர்த்துச் சேமிப்பது வாழ்க்கையை உயர்த்தாது; நாம் பகிர்ந்து வாழ்வதே வாழ்க்கையை உயர்த்தும். செல்வம் வைத்திருப்பது பெருமை அல்ல; அதை சரியான இடத்தில் பயன்படுத்துவது தான் உண்மையான பெருமை. அன்புடன் பகிர்ந்து வாழ்ந்தால், உலகம் சமநிலையுடன் இருக்கும். வேறுபாடுகள் குறையும். மனிதநேயம் வளரும். அதுவே உண்மையான உயர்ந்த வாழ்க்கை.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மண்ணுக்காக மாணிக்கத்தை இழக்காதீர்கள்
Next: கோபம் கொடியது!

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

srilanka case
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் சிறை

Editorial Team September 24, 2026
srilanka
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Editorial Team September 24, 2026
bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.