Skip to content
September 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • தூய்மை மனதில் வேண்டும்
  • தியான செய்திகள்

தூய்மை மனதில் வேண்டும்

Editorial Team July 13, 2026 1 minute read
tn_40

சாந்தி தான் அந்த வீட்டின் மையம். ஆம், அவள் காலையில் எழுந்த பின்னர் தான் வீடே உயிர் பெறும்; காபியின் வாசனை, சமையலறையின் சத்தம், குழந்தைகளின் அவசரம் என அனைத்திலும் அவளது அன்பு கலந்து இருக்கும். அவள் இல்லையெனில் அந்த வீட்டின் ஓட்டமே மாறிப் போய்விடும் என்று வீட்டார் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் மாதவிலக்கு நாட்கள் வந்தால், அதே வீட்டில் அவளுக்கு ஒரு தூரம் வைக்கப்படும். அது யாருக்கும் புதிதில்லை; பல ஆண்டுகளாக வந்த ஒரு பழக்கம். “தீட்டு காலம்” என்று சொல்லி, அவள் தானாகவே ஒரு மூலையில் அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டிருந்தாள்.

அந்த நாட்களில் அவள் சமையலறைக்கு செல்ல மாட்டாள், வழக்கமாக அவள் தொடும் பொருட்களைத் தொட்டுக் கொள்ளமாட்டாள், வீட்டில் இருந்தாலும், அந்த வீட்டின் நடுவிலிருந்து அவள் சிறிது விலகி நிற்பாள். இது அவளுக்கு ஓய்வு என்ற பெயரில் கொடுக்கப்பட்ட இடைவெளி. ஆனால் அந்த ஓய்வின் உள்ளே ஒரு சொல்லப்படாத தனிமையும் வலியும் இருந்தது. அவள் அதை வெளியில் சொல்லவில்லை; அமைதியாகவே அதை தாங்கிக்கொண்டாள். வீட்டில் மற்றவர்கள் இதை வழக்கமாகவே எடுத்துக் கொண்டார்கள். யாருக்கும் கேள்வி எழவில்லை.

ஒரு மதிய நேரத்தில், வீட்டில் எல்லோரும் தங்கள் வேலையில் இருந்தபோது, திடீரென்று தாத்தா மயங்கி விழுந்தார். அந்த நொடியில் ஒரு குழப்பம் பரவியது. யாருக்கு என்ன செய்வது என்று புரியாமல் சில நொடிகள் உறைந்து போனார்கள். அந்தச் சின்ன இடைவெளியில், சாந்தி மட்டும் தயங்கவில்லை. அவள் உடனே ஓடி வந்து தாத்தாவைத் தாங்கி தன் மடியில் படுக்க வைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்தாள். மருத்துவருக்கு அழைக்கச் சொன்னாள். அவள் செய்த ஒவ்வொரு செயலும் அவசரமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. அந்த சில நிமிடங்களில் அந்த வீட்டின் துடிப்பே அவளாக மாறிவிட்டது.

அந்த தருணத்தில் யாரும் அவளைத் தடுக்கவில்லை; யாரும் “இது தீட்டு காலம்” என்று நினைக்கவில்லை. அவளது அன்பு, பொறுப்பு, மனிதம் என்பவைகள் தாத்தாவின் கண்களைத் திறக்கச்செய்தது; வீட்டில் இருந்த பதட்டம் மெதுவாக அடங்கி யது. எல்லோரும் சுவாசம் விட்டார்கள். அந்த நிமிடத்தில், சொல்லாமல் ஒரு உண்மை எல்லோரின் உள்ளத்திலும் மெதுவாக எழுந்தது.

அனைத்தும் அமைதியான பிறகு, சாந்தி மீண்டும் தன் இடத்துக்குச் சென்றாள். அவள் முன்புபோல் எதுவும் நடக் காதது போல அமைதியாக உட்கார்ந்தாள். அவள் தன் மீது விதிக்கப்பட்ட அந்த தூரத்தை மீண்டும் ஏற்றுக்கொண்டாள். ஆனால் இந்தமுறை, அந்த தூரம் இயல்பாகத்தோன்றவில்லை. அந்த வீட்டின் சுவர்களுக்குள் ஒரு மௌனம் உருவானது. அது பழக்கத்தின் மௌனம் இல்லை; அது சிந்திக்கச் செய்யும் மௌனம்.

அடுத்த மாதம் அதே நாட்கள் வந்தபோது, வீட்டில் யாரும் அவளை. “தொடாதே” என விலக்கவில்லை. “நீ ஓய்வு எடு” என்ற அன்பு மட்டும் இருந்தது; மாற்றம் பெரியதாகத் தோன்றவில்லை, ஆனால் அது ஒரு ஆழமான புரிதலின் ஆரம்பம். வார்த்தைகள் பேசப்படவில்லை, வாதங்கள் நடக்க வில்லை, ஆனால் ஒரு உண்மை உள்ளங்களில் பதிந்து விட்டது. அன்பைத் தூரப்படுத்தும் எந்த பழக்கமும், அன்பின் முன் நிலைக்க முடியாது.

இறைமக்களே, மனிதனின் உடல் நிலையை விட உயர்ந்தது அவன் உள்ளத்தின் நிலை. அன்பு செய்கிற கைகள் எப்போதும் தூயவையே; உயிரைக் காக்கும் இதயம் எந்த காலத்திலும் தீட்டாகாது. நாம் பழக்கமாக ஏற்றுக்கொண்ட சில விஷயங்கள், உண்மையில் மனிதத்துவத்தை மெதுவாக விலக்கிக் கொண்டிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.

பெண்மையின் இரத்தத்தை தீட்டு என்போமானால், அதே இரத்தத்திலிருந்து உயிராய் வந்த நாம் எப்படி “தூய்மை” என்று சொல்லப்படுவோம்? எனவே, தூரம் உருவாக்கும் மரபுகளை விட, அருகில் கொண்டு வரும் அன்பைத் தேர்ந்தெடுப்போம். மனிதனைப் பிரிக்கும் எண்ணங்களை விட, மனிதனை இணைக்கும் கருணையைப் பிடித்துக்கொள்வோம். ஏனெனில் இறைவன் பார்க்கிற தூய்மை உடலில் அல்ல; அன்பு நிறைந்த இதயத்தில் தான்.

“அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் சகிக்கும். (1 கொரி.13:7)” என இறைவேதம் நம் அன்பிற்கு அறைகூவல் தருகிறது.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: கோபம் கொடியது!
Next: கிறிஸ்துமஸ் உணர்த்தும் பாடம்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

srilanka case
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் சிறை

Editorial Team September 24, 2026
srilanka
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Editorial Team September 24, 2026
bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.