Skip to content
September 21, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • தாழ்மையின் மகிமை
  • தியான செய்திகள்

தாழ்மையின் மகிமை

Editorial Team July 30, 2026 1 minute read
tn_91

ஒரு மரங்கொத்திப் பறவை, ஒரு பெரிய மரத்தின் அடிவாரத்தில் அமர்ந்து அதைத் தனது அலகால் கொத்திக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் திடீரென ஒரு மின்னல் அந்த மரத்தை தாக்கியது. மின்னல் தாக்கியதால் அந்த பெரிய மரம் சாய்ந்து விழுந்தது.

இதைக் கண்ட மரங்கொத்திப் பறவை மிகுந்த பெருமை கொண்டது. “நான் கொத்தியதால்தான் இந்த மரம் விழுந்தது! என் அலகு எவ்வளவு வலிமையானது!” என்று எண்ணியது. அதனால் அது இன்னும் அதிகமாக பெருமை கொண்டு, “நான் இன்னும் பெரிய மரங்களையும் வீழ்த்தி காட்டுவேன்” என்று சவால் விடுத்தது.

அது மற்றொரு பெரிய மரத்திற்குச் சென்று அதையே போல் கொத்த முயன்றது. ஆனால் இந்த முறை அது தோல்வியடைந்தது. மரம் விழவில்லை. மாறாக, அதன் அலகே முறிந்து போய்விட்டது.
இந்தச் சிறிய சம்பவம் நமக்கு ஒரு பெரிய உண்மையை கற்றுத்தருகிறது. நம்மால் நிகழ்ந்தது என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் உண்மையில் தேவனுடைய கிருபையால் நடந்தவை.

இன்றைய உலகில் பலர் இப்படித் தான் இருக் கிறார்கள். தேவன் அவர்களின் வாழ்க்கையிலும் குடும்பங் களிலும் பெரிய காரியங்களைச் செய்கிறார். ஆனால் அவர்கள் அதை உணராமல், “என் உழைப்பால் என் திறமையால் என் புத்தியால் என் செல்வாக்கால்” என்று தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையான ஆன்மீக மனிதர்கள் வேறுபட்டவர்கள். அவர்கள் செய்ததைப்பற்றி பெருமை பேசுவதில்லை.

ஒரு தேவ மனிதரிடம், “நீங்கள் எத்தனை பேரை தேவனிடத்திற்கு நடத்தி வந்துள்ளீர்கள்?” என்று கேட்டபோது, அவர் தாழ்மையுடன், “அதற்கான கணக்குப் புத்தகம் என்னிடம் இல்லை” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அவருடைய இந்த தாழ்மைதான், தேவன் அவரை அதிகமாக பயன் படுத்தியதற்கான காரணம்.

இறைமக்களே, தாழ்மை என்பது ஒரு பலவீனம் அல்ல; அது ஒரு பெரிய ஆவிக்குரிய வலிமை. நாம் நம்மைத் தாழ்த்திக் கொண்டு, தேவனை உயர்த்தும் போது தான், அவர் நம்மை உயர்த்துகிறார்.

இறைவேதம் கூறுகிறது: “தேவன் அகங்காரிகளை எதிர்க்கிறார்; தாழ்மையானவர்களுக்கு கிருபை அளிக்கிறார்” (யாக்கோபு 4:6) மேலும், “கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியை முழுமையாக அறிவிப்பவன் யார்?” (சங்கீதம் 106:2)

அன்பானவர்களே, நம் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நன்மைக்கும், வெற்றிக்கும், உயர்வுக்கும் காரணம் நாம் அல்ல, நம் தேவனே. எனவே, நம் பெயரை உயர்த்தா மல், இயேசுவின் நாமத்தை உயர்த்துவோம். நம்மை முன்னி -லைப்படுத்தாமல், தேவனை முன்னிலைப்படுத்துவோம்.

நாம் நம்மை குறைத்துக் கொண்டால், தேவன் நம்மை உயர்த்துவார். தாழ்மையுடன் வாழ்வோம், அவருடைய கிருபையில் வளர்வோம்

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: வேகமாக காணாமல் போகும் வேகம்
Next: நன்றி அப்பா

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026
william carey
  • கவிதைகள்

வில்லியம் கேரி – விசுவாசம், ஊழியம் மற்றும் தேவனைப் பற்றிய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.