Skip to content
August 7, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • வேகமாக காணாமல் போகும் வேகம்
  • தியான செய்திகள்

வேகமாக காணாமல் போகும் வேகம்

Editorial Team July 30, 2026 1 minute read
tn_90

ஒரு தோட்டத்தில் புதிதாக ஒரு வாழைக் கன்று நடப்பட்டது. அதற்கு அருகில் ஏற்கனவே ஒரு தென்னங்கன்று இருந்தது. சில நாட்களில் வாழைக்கன்று வளரத் தொடங்கியது. அது தென்னங்கன்றை நோக்கி, “நீ இங்கே எத்தனை வருடமாக இருக்கிறாய்?” என்று கேட்டது. தென்னங்கன்று அமைதியாக “ஒரு வருடம்” என்று பதிலளித்தது.

அதைக் கேட்ட வாழைக்கன்று சிரித்துக் கொண்டு, “ஒரு வருடமா? ஆனா என்னைவிட கொஞ்சம்தான் உயரமா இருக்கே! உனக்கு வளர்ச்சி இல்லையா?” என்று கேலி செய்தது. ஆனால் தென்னங்கன்று எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல, வாழைக்கன்று வேகமாக வளர்ந்து, சில மாதங்களிலேயே தென்னங்கன்றை விட உயரமாகி விட்டது. அதன் பெருமையும் அதே அளவுக்கு அதிகரித்தது. தினமும் அது தென்னங்கன்றை பார்த்து கேலி செய்தது.
“நாம ஒரே மண்ணில்தான் இருக்கோம், ஒரே தண்ணி குடிக்கிறோம், ஆனா பாரு நான் எவ்வளவு வேகமா வளர்ந்துட்டேன். உனக்கு வளர்ச்சி கிடைக்கல போல!” என்று இகழ்ந்தது. ஆனால் தென்னங்கன்று எப்போதும் போல அமைதியாகவே இருந்தது. அது எந்த கிண்டலுக்கும் பதில் சொல்லவில்லை.

சில காலத்தில், வாழைமரம் அழகாக வளர்ந்து குலையையும் கொடுத்தது. காய்களால் நிரம்பி அது பெருமையுடன் காட்சி அளித்தது. இதனால் அதன் அகங்காரம் மேலும் அதிகரித்தது.

ஒருநாள் ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்து வாழைமரத்தை சுற்றிப் பார்த்தான். அதன் காய்களை பரிசோதித்தான். தென்னை மரத்தை கவனிக்கவே இல்லை. இதைக் கண்ட வாழைமரம் மிகுந்த பெருமை கொண்டது. ஆனால் அதற்குப் பிறகு சில நிமிடங்களில் மற்றொரு மனிதன் கத்தியுடன் வந்தான். வாழைமரத்தின் குலைகள் வெட்டப் பட்டன. பின்னர் முழு மரமும் வெட்டி சாய்க்கப் பட்டது. சில நேரத்தில், உயர்ந்து நின்ற வாழைமரம் முழுமையாக அழிக்கப்பட்டது. ஆனால் தென்னை மரம்? அது அங்கேயே நின்றுகொண்டே இருந்தது. அமைதியாக, மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. அதன் வளர்ச்சி தாமதமாக இருந்தாலும், அது நிலையானது.

இந்த நிகழ்வு ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. வேகமாக வளர்வது வெற்றி அல்ல; நிலைத்து நிற்பதே உண்மையான வெற்றி. பொறுமை இல்லாத வளர்ச்சி நீண்ட நாட்கள் நிலைக்காது.

வாழ்க்கையிலும் இதேபோல் தான். சிலர் விரைவாக முன்னேறுவார்கள். சிலர் மெதுவாக வளர்வார்கள். அதனால் தாழ்வு உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு வருக்கும் அவரவர் நேரம் உண்டு. இறைவேதமும் இதையே வலியுறுத்துகிறது: “ஒரு காரியத்தின் முடிவு அதன் தொடக்கத்தை விட சிறந்தது; பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் மேன்மையானவன்.”

எனவே, பிறர் சொல்வதைக் கேட்டு மனம் தளராமல், நிதானமாகவும் பொறுமையுடனும் முன்னேற வேண்டும். எல்லா கேலிகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அமைதியாக உங்கள் பாதையில் செல்லுங்கள். உண்மை, நேர்மை, பொறுமை இவை மூன்றும் இணைந்தால், உங்கள் வாழ்க்கை நிச்சயம் நிலையான வெற்றியை அடையும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மீட்கப் பிறந்த தகப்பன்
Next: தாழ்மையின் மகிமை

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

andrew
  • சாட்சிகள்

சகோதரர் ஆண்ட்ரூ – “தேவனின் வேதாகமக் கடத்தல்காரர்” (God’s Smuggler)

Editorial Team August 7, 2026
depressed
  • உலகம்

பாகிஸ்தானில் 16 வயது கிறிஸ்தவ சிறுமி: கடத்தல், கட்டாய மதமாற்றம், வலுக்கட்டாய திருமணம் – நீதிக்காக போராடும் குடும்பம்

Editorial Team August 7, 2026
pakistan
  • உலகம்

குடிநீர் குடித்ததற்காக கிறிஸ்தவத் தொழிலாளி கொலை – பாகிஸ்தானில் மீண்டும் மதவெறி வன்முறை! செங்கல் சூளை வழக்கிலும் குற்றவாளிகள் விடுதலை

Editorial Team August 7, 2026
FCRA
  • உலகம்

இந்தியாவின் FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்க எம்.பி. கவலை – “கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலாக மாறக்கூடும்” என எச்சரிக்கை

Editorial Team August 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.