Skip to content
August 7, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மீட்கப் பிறந்த தகப்பன்
  • தியான செய்திகள்

மீட்கப் பிறந்த தகப்பன்

Editorial Team July 30, 2026 1 minute read
tn_89

ஒரு நாள் மாலை நேரத்தில், அரியணையில் அமைதி யாக அமர்ந்திருந்த ராஜாவிடம் ஒரு மந்திரி வந்து வணங்கி, “மகிமைமிகு ராஜா அவர்களே, இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்கள் விடுமுறை தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார். அதை கேட்ட ராஜா சிரித்துக் கொண்டு, “ஐந்து நாள் அல்ல, பத்து நாள் கூட உனக்கு விடுமுறை தருகிறேன். ஆனால் நான் கேட்கும் ஒரு கேள்விக்கு சரியான பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

அவர் கேட்ட கேள்வி மிகவும் ஆழமானது: “இயேசு கிறிஸ்து கடவுள் தானே? அப்படியிருக்க, ஏன் அவர் தானே மனிதராக வந்து பாவங்களுக்காக மரிக்க வேண்டும்? வேறு யாரையாவது அனுப்பி வைத்திருக்க முடியாதா? ஒரு ராஜா தன் நிலையை விட்டு இறங்காமல், ஒரு பிரதிநிதியை அனுப்புவதைப் போல கடவுளும் செய்யலாம் அல்லவா?” இந்த கேள்விக்கு மறுநாள் பதில் கூறுவதாக மந்திரி வாக்கு கொடுத்தார்.

அடுத்த நாள் அதிகாலை, சூரியன் உதிக்கும் முன்பாக, ராஜா வழக்கம்போல் கடற்கரைக்கு குதிரையில் சென்றார். அவருக்கு பின்னால் பாதுகாப்புக்காக பல வீரர்களும் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராஜா கடற்கரையை அடைந்த போது, அங்கு ஒரு சிறிய படகில் மந்திரி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒரு குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தை ராஜாவின் குழந்தையைப் போலவே இருந்தது. அதை பார்த்த ராஜா பதற்றத்துடன், “மந்திரியாரே! என்ன செய்கிறீர்கள்? அது என் குழந்தை அல்லவா? உடனே கரைக்கு வாருங்கள்!” என்று கூச்சலிட்டார்.

அந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக மந்திரியின் கையிலிருந்து அந்தக் குழந்தை கடலில் விழுந்தது. “ஐயோ!” என்று அலறிய ராஜா, ஒரு நொடியும் தாமதிக்காமல் தன் மேலிருந்த ஆடைகளை கழற்றி எறிந்து, குதிரையிலிருந்து இறங்கி, நேராக கடலுக்குள் பாய்ந்து, நீந்தி சென்று அந்தக் குழந்தையை காப்பாற்றினார். பின்னர் தான் அவர் உணர்ந்தார். அது உண்மையான குழந்தை அல்ல; ஒரு பொம்மை!

அவர் கோபத்திலும் குழப்பத்திலும், “மந்திரியாரே! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார். அப்போது மந்திரி அமைதியாகப் பேசத்தொடங்கினார்: “மகிமைமிகு ராஜா அவர்களே, உங்கள் குழந்தை கடலில் விழுந்தபோது, நீங்கள் உங்கள் சேவகர்களில் ஒருவரையாவது அனுப்பியிருக்கலாம். நீங்கள் ஒரு பெரிய ராஜா. உங்கள் நிலையை விட்டு நீங்களே குதிப்பது அவசியமா?”

அதற்கு ராஜா உடனே பதிலளித்தார்: “அது என் குழந்தை அல்லவா? நான் எப்படி மற்றவர்களை நம்ப முடியும்? என் குழந்தையை காப்பாற்ற நான் தான் செல்ல வேண்டும்!” அந்தச் சொற்களை கேட்ட மந்திரி மெதுவாக சிரித்தார்: “அரசே, இதுதான் உங்கள் கேள்விக்கான பதில்.

நாம் கடவுளின் பிள்ளைகள். நாம் பாவத்தின் ஆழத்தில் விழுந்திருந்தோம். நம்மை காப்பாற்ற கடவுள் வேறு ஒருவரை அனுப்பவில்லை. அவர் தாமே மனிதராக வந்து, நம்மை மீட்டார். அதுதான் இயேசு கிறிஸ்துவின் அவதாரம்.”

இந்த உண்மையை கேட்ட ராஜாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நான் கேட்ட கேள்விக்கு உண்மையான பதிலை நீ அளித்தாய்” என்று கூறி, மந்திரியை அணைத்தார்.
அவர் மகிழ்ச்சியுடன், “இந்த கிறிஸ்துமஸ் விழாவை நமது நாடு முழுவதும் கொண்டாடட்டும்” என்று உத்தரவிட்டார்.

இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு ஆழமான உண்மையை உணர்த்துகிறது. கடவுளின் அன்பு வெறும் வார்த்தைகளில் அல்ல; அது செயலால் வெளிப்பட்டது. அதனால் தான் இறைவேதம் கூறுகிறது: “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தம்மைத்தாமே வெறுமையாக்கி, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர் 2:6-7)

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. அது கடவுளின் அளவற்ற அன்பின் வெளிப்பாடு. “அவர் நம்மைத் தேடி வந்தார், நம்மை மீட்க தம்மையே தந்தார்” எனவே, கிறிஸ்துமஸை வெளிப்புற கொண்டாட்டமாக அல்லாமல், அவருடைய அன்பையும் தியாகத்தையும் நினைவுகூரும் நாளாகக் கொண்டாடுவோம். அவரை நம் இதயத்தில் ஏற்றுக்கொள்வோம். அவருடைய அன்பில் வாழ்வோம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: வாழ்நாட்கள் நீடித்திருக்க வழி
Next: வேகமாக காணாமல் போகும் வேகம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

depressed
  • உலகம்

பாகிஸ்தானில் 16 வயது கிறிஸ்தவ சிறுமி: கடத்தல், கட்டாய மதமாற்றம், வலுக்கட்டாய திருமணம் – நீதிக்காக போராடும் குடும்பம்

Editorial Team August 7, 2026
pakistan
  • உலகம்

குடிநீர் குடித்ததற்காக கிறிஸ்தவத் தொழிலாளி கொலை – பாகிஸ்தானில் மீண்டும் மதவெறி வன்முறை! செங்கல் சூளை வழக்கிலும் குற்றவாளிகள் விடுதலை

Editorial Team August 7, 2026
FCRA
  • உலகம்

இந்தியாவின் FCRA சட்டத் திருத்தம் குறித்து அமெரிக்க எம்.பி. கவலை – “கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலாக மாறக்கூடும்” என எச்சரிக்கை

Editorial Team August 7, 2026
FCRA
  • இந்தியா

FCRA சட்டத் திருத்தம்: கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஊழியங்களுக்கு புதிய சவாலா? – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிலே மூர் கவலை

Editorial Team August 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.