Skip to content
September 21, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • வாழ்நாட்கள் நீடித்திருக்க வழி
  • தியான செய்திகள்

வாழ்நாட்கள் நீடித்திருக்க வழி

Editorial Team July 29, 2026 1 minute read
tn_88

80 வயதான ஒரு முதியவர், தனது வீட்டில் சாய்வு நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவருடன், நல்ல கல்வி கற்ற 45 வயது மகனும் அருகில் உட்கார்ந்திருந்தான். அப்போது, ஒரு காக்கை வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்தது.

அதை பார்த்த தந்தை மெதுவாக மகனை நோக்கி, “இது என்ன?” என்று கேட்டார். மகன் அமைதியாக, “இது காக்கை” என்று பதிலளித்தான். சில நிமிடங்கள் கழித்து, தந்தை மீண்டும் அதே கேள்வியை கேட்டார்: “இது என்ன?” இம்முறை மகன் சற்று எரிச்சலுடன், “இப்போதுதானே காக்கை என்று சொன்னேன்” என்றான்.

மூன்றாவது முறையாகவும், நான்காவது முறையாகவும் தந்தை அதே கேள்வியை கேட்டபோது, மகன் கோபம் அடைந்து, “எத்தனை முறை அதே கேள்விக்கு பதில் சொல்லணும்?” என்று சினந்தான்.
சில நிமிடங்கள் கழித்து, அந்த முதிய தந்தை மெதுவாக எழுந்து தனது அறைக்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு பழைய நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு வந்தார். அது, தனது மகன் பிறந்த நாளிலிருந்து எழுதப்பட்ட நினைவுக் குறிப்புகள் கொண்ட ஒரு புத்தகம். அவர் ஒரு பக்கத்தைத் திறந்து மகனிடம் படிக்கச் சொன்னார்.

அதில் எழுதப்பட்டிருந்தது: “இன்று என் மூன்று வயது மகன் என்னுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஜன்னலில் இருந்த காக்கையை காண்பித்து 23 முறை ‘இது என்ன?’ என்று கேட்டான். ஒவ்வொரு முறையும் நான் அவனை அன்போடு அணைத்துக்கொண்டு, பொறுமையுடன் ‘இது காக்கை’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.”

அதை வாசித்த மகனின் மனம் தளர்ந்தது. அவன் கண்களில் கண்ணீர் தோன்றியது. அப்போது தந்தை அமைதியாகச் சொன்னார்: “நான் உனக்கு 23 முறை பதில் சொல்லும்போது கோபப்படவில்லை. ஆனால் நீ எனக்கு நான்கு முறை கேட்டதற்கே கோபப்படுகிறாய்.” இந்தச் சிறிய சம்பவம் ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நாம் சிறு குழந்தைகளாக இருந்தபோது, நம்முடைய பெற்றோர் எவ்வளவு பொறுமையுடன், அன்புடன், தன்னலமின்றி நம்மை வளர்த்தார்கள்!

நாம் பேச கற்றுக்கொண்டதும், நடக்க கற்றுக் கொண்டதும், உலகத்தை அறிந்ததும் அவர்களின் அக்கறை, தியாகம், அன்பு காரணமாகத்தான். ஆனால், அவர்கள் வயதாகும் போது, நாம் பல நேரங்களில் அவர்களைப் புரிந்துகொள்ளாமல், எரிச்சலுடன் பேசுகிறோம். அவர்களை ஒரு சுமையாகப் பார்க்கிறோம். அவர்களின் மெதுவான செயல்களையும், மறதி தன்மையையும் நாம் சகிக்க முடியாமல் போகிறது.

இறைமக்களே, இது நம் வாழ்க்கையில் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பகுதி. பெற்றோர் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல; அது ஒரு ஆசீர்வாதம். அவர்களை மதிப்பதும், அவர்களுடன் நேரம் செலவிடுவதும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் நம் கடமையாகும்.

“உன் தகப்பனையும் உன் தாயையும்
கனம்பண்ணுவாயாக” (உபாகமம் 5:16)

அன்பானவர்களே, பெற்றோர் நம்மை சிறு வயதில் தாங்கியதுபோல், இன்று நாம் அவர்களை அன்போடு தாங்குவோம். அவர்கள் பேசும்போது பொறுமையுடன் கேட்போம். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்போம்.

ஏனெனில், ஒருநாள் நாம் தேடும்போது அவர்களின் குரலும், அன்பும், இருப்பும் நமக்கு கிடைக்காமல் போய்விடலாம். அவர்களை உயிரோடு இருக்கும்போதே மதிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரத்தை ஆசீர்வாதமாக எண்ணிப் பாதுகாப்போம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: உண்மையே உயர்ந்த தர்மம்
Next: மீட்கப் பிறந்த தகப்பன்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026
william carey
  • கவிதைகள்

வில்லியம் கேரி – விசுவாசம், ஊழியம் மற்றும் தேவனைப் பற்றிய ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.