Skip to content
November 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • அக்கறையுள்ள மனம்
  • தியான செய்திகள்

அக்கறையுள்ள மனம்

Editorial Team November 2, 2026 1 minute read
a caring mind

என் பக்கத்து வீட்டில் 74 வயதான ஒரு பெண்மணி வசித்து வந்தார். பல மாதங்களாக அவ்வப்போது என்னிடம் சிறுசிறு உதவிகளைக் கேட்டுக்கொண்டே இருப்பார். குப்பைப் பையை எடுத்துச் சென்று போடுவது, டிபன் வாங்கிக் கொடுப்பது, புரியாத கடிதத்தைப் படித்துக் காட்டுவது, மருந்தகத்திற்குச் செல்லும்போது உடன் செல்வது எனச் சின்னச் சின்ன உதவிகளைக் கேட்பார்.

ஆரம்பத்தில் இதெல்லாம் எனக்குத் தொந்தரவாகத் தெரியவில்லை. ஆனால், நாளடைவில், “இவர் என்னுடைய உதவியை அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கிறாரோ?” என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. ஒருநாள் பொறுமை இழந்து, “எல்லாவற்றுக்கும் அண்டை வீட்டாரையே சார்ந்திருக்கக் கூடாது” என்று அவரிடம் சொல்லி விட்டேன். அவர் அமைதியாக என்னைப் பார்த்துவிட்டு, “சரி, புரிகிறது. நன்றி” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் என்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து, கீழே நடைபாதையில் அவரைச் சந்தித்தேன். அவருடைய ஒரு கையில் குப்பைப் பையும், மற்றொரு கையில் மருத்துவர் சீட்டும் இருந்தன. அவரைப் பார்த்து, “உங்களால் தனியாகவே இதையெல்லாம் செய்ய முடிகிறது போலிருக்கிறதே!” என்று கேட்டேன். அவர் அமைதியாக, “என்னால் எப்போதும் தனியாகச் செய்ய முடியும்” என்றார். அந்தப் பதில் என்னைச் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர் தொடர்ந்து சொன்ன வார்த்தைகள்தான் என் மனதை உடைத்து விட்டன. “என் கணவர் இறந்ததிலிருந்து சில நாட்களில் நான் யாருடனுமே பேசுவதில்லை. குப்பை, டிபன், தபால்.. இவையெல்லாம் வெறும் காரணங்கள்தான். அவற்றைச் சாக்காக வைத்து யாராவது ஒருவருடைய கதவைத் தட்டி, ஐந்து நிமிடமாவது பேசிக்கொண்டிருக்கலாம் என்பதுதான் என் எண்ணம்” என்றார்.

நான் பேச்சற்று நின்று விட்டேன். இத்தனை நாட்களாக அவரால் தனியாக வேலைகளைச் செய்ய முடியவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மை முற்றிலும் வேறாக இருந்தது. அவரால் எல்லாவற்றையும் தனியாகச் செய்ய முடிந்தது. ஆனால், தனிமையுடன் எப்படித் தனியாக வாழ்வது என்பதுதான் அவருக்குப் பெரும் போராட்டமாக இருந்தது.

அவர் என்னைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்து, “கவலைப்படாதீர்கள். நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். இனி யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். கதவு மூடப்பட்டது. ஆனால், நான் மட்டும் அந்தக் கதவைப் பார்த்தபடி அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.

அன்றுதான் எனக்கு ஒரு பெரிய உண்மை புரிந்தது. சிலர் நம்மிடம் உதவி கேட்பது, அவர்களால் அந்த வேலையைச் செய்ய முடியாததால் அல்ல; யாரிடமாவது கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு குப்பைப் பையை எடுத்துக் கொடுப்பது, ஒரு மருந்துச் சீட்டைப் படித்துக் கொடுப்பது, ஒரு டிபன் வாங்கிக் கொடுப்பது போன்றவை நமக்குச் சிறிய உதவிகளாகத் தெரியலாம். ஆனால், அந்த ஐந்து நிமிட உரையாடல் ஒருவருடைய முழு நாளையும் தனிமையிலிருந்து காப்பாற்றக்கூடும்.

எனவே, ஒருவர் நம்மைத் தொந்தரவு செய்கிறார் என்று நினைப்பதற்கு முன்பு, “ஒருவேளை அவர்களுக்கு என்னுடைய உதவி மட்டும் அல்ல, என்னுடைய இருப்பும் தேவைப்படுகிறதோ?” என்று ஒருமுறை யோசித்துப் பார்ப்போம்.

ஏனென்றால், தனிமை என்பது யாரும் அருகில் இல்லாத நிலை மட்டுமல்ல; மனதில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளவும், அன்பாகப் பேசவும், தன்னுடைய உணர்வுகளைக் கேட்கவும் யாரும் இல்லாத நிலையும் கூட.

இறைவேதாகமம் கூறுகிறது: “ஒருவன் விழுந்தால் அவனைத் தூக்கிவிட அவனுடைய துணைவன் இருப்பான்; தனியாயிருக்கிறவனோ விழுந்தால் அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.” (பிரசங்கி 4:10) ஆகவே, நம்மைச் சுற்றியிருக்கும் முதியவர்கள், தனியாக வாழ்பவர்கள், பேசுவதற்கு யாருமின்றித் தவிப்பவர்கள் ஆகியோரிடம் அன்பாகப் பேசுவோம். அவர்களுக்குத் தேவையானது எப்போதும் பணமோ பொருளோ அல்ல; சில நேரங்களில் நம்முடைய நேரமும், அன்பான வார்த்தைகளும், அக்கறையுடன் கேட்கும் மனமும்தான்.

நாம் செய்யும் சிறிய அன்பான செயல், இன்னொருவரின் தனிமையான வாழ்க்கையில் பெரிய ஆறுதலாக மாறலாம்.

– அருள்முனைவர்.பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!

இதையும் படிக்கலாம்

Oviyam
  • தியான செய்திகள்

இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!

Editorial Team November 2, 2026
boy crying
  • தியான செய்திகள்

மறைந்து போன கருப்புக் கறை

Editorial Team October 30, 2026
reckless love
  • தியான செய்திகள்

ஒரு கண நேரத் தவறான புரிதல்!

Editorial Team October 27, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

a caring mind
  • தியான செய்திகள்

அக்கறையுள்ள மனம்

Editorial Team November 2, 2026
Oviyam
  • தியான செய்திகள்

இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!

Editorial Team November 2, 2026
Andrea Williams
  • உலகம்

பிரிட்டன் அரசியல்வாதிகள் மத்தியில் கிறிஸ்தவத்தின் மீதான ஆர்வம் அதிகரிப்பு – கிறிஸ்தவ அமைப்பு தகவல்

Editorial Team November 2, 2026
chatgpt
  • தகவல்கள்

ChatGPT-யில் கேட்கப்படும் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளில் பாதி வேதாகமத்தைப் புரிந்துகொள்வது குறித்தவை

Editorial Team November 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.