Skip to content
November 2, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!
  • தியான செய்திகள்

இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!

Editorial Team November 2, 2026 1 minute read
Oviyam

ஒரு சிறிய கிராமத்தில் தாரகை என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவளுக்குச் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால், அவள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளிடம் வண்ணங்கள் வாங்குவதற்குக்கூடப் பணம் இல்லை. ஒருநாள் அவள் தன் தந்தையிடம், “அப்பா, எனக்கும் அழகான ஓவியங்களை வரைய வேண்டும். ஆனால், என்னிடம் வண்ணங்கள் இல்லை. நான் எப்படி வரைவது?” என்று கேட்டாள்.

அதற்குத் தந்தை, “மகளே, உன்னிடம் இருக்கும் திறமையைப் பயன்படுத்து. உன்னால் முடிந்ததைச் செய். உன் கையில் என்ன இருக்கிறதோ, அதைக் கொண்டு தொடங்கு. வெற்றிக்குத் தேவையான அனைத்தும் உன்னிடம் இருக்க வேண்டும் என்பதில்லை; தொடங்குவதற்கான மனம் இருந்தால் போதும்” என்றார். தந்தையின் வார்த்தைகள் தாரகையின் மனதில் ஆழமாகப் பதிந்தன.

தாரகை தன்னிடம் இருந்த பென்சிலால் ஓவியங்களை வரையத் தொடங்கினாள். பழைய காகிதங்கள், செய்தித்தாள்கள் எனக் கிடைத்த அனைத்திலும் ஓவியங்களை வரைந்தாள். அவள் வரைந்த ஓவியங்கள் அழகாக இருந்தாலும், அவற்றில் வண்ணங்கள் இல்லாததால் அவளுக்கு வருத்தம் இருந்தது.

ஒருநாள் அந்தக் கிராமத்திற்கு ஒரு புகழ்பெற்ற ஓவியர் வந்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளின் ஓவியத் திறமையைக் கண்டறிய ஒரு போட்டியை நடத்தினார்.

தாரகையும் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பினாள். ஆனால், அவளிடம் வண்ணங்கள் வாங்கப் பணம் இல்லை.

அவள் வருத்தத்துடன் வீட்டில் அமர்ந்திருந்தபோது, அவளுடைய அம்மா அவளிடம் வந்தார். தாரகையின் நிலையைப் புரிந்துகொண்ட அம்மா, தன்னிடம் இருந்த சிறிது பணத்தை அவளிடம் கொடுத்து, “மகளே, இந்தப் பணத்தைக் கொண்டு உனக்குத் தேவையானதை வாங்கிக்கொள். உன் திறமையை உலகிற்குக் காட்டுவதற்கு முயற்சி செய்” என்றார்.

அம்மாவின் அன்பான வார்த்தைகள் தாரகைக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தன.

போட்டியில் கலந்துகொண்ட மற்ற குழந்தைகள் வண்ணமயமான பூக்கள், அழகான கடற்கரைகள், இயற்கைக் காட்சிகள் போன்றவற்றை வரைந்தனர். ஆனால், தாரகை ஒரு வித்தியாசமான ஓவியத்தை வரைந்தாள்.

அதில் ஒரு முதியவர் தன் பேரக்குழந்தையை அன்புடன் அரவணைத்துக் கொண்டிருந்தார். முதியவரின் முகத்தில் அன்பும், குழந்தையின் முகத்தில் பாதுகாப்பும் மகிழ்ச்சியும் வெளிப்பட்டன. அவள் அந்த ஓவியத்திற்கு “மகிழ்ச்சியின் முகம்” என்று பெயரிட்டாள்.

ஓவியங்களை மதிப்பீடு செய்த புகழ்பெற்ற ஓவியர், தாரகையின் படத்தைப் பார்த்தவுடன் வியந்துபோனார்.

அவர் அவளிடம், “மகளே, இந்த ஓவியத்தை வரைய உனக்கு எவ்வளவு நேரம் ஆனது?” என்று கேட்டார்.

தாரகை, “ஐயா, அதிக நேரம் ஆகவில்லை. என் தாத்தா என்னை அன்புடன் அணைத்துக்கொள்ளும் தருணத்தை நினைத்தேன். அந்த நினைவுதான் இந்த ஓவியமாக மாறியது” என்றாள்.

அந்த ஓவியர் மகிழ்ச்சியுடன், “மற்ற குழந்தைகள் தங்கள் கண்களால் பார்த்தவற்றை வரைந்திருக்கிறார்கள். ஆனால், நீ உன் இதயத்தால் உணர்ந்ததை வரைந்திருக்கிறாய். அதுதான் உன் ஓவியத்தின் சிறப்பு!” என்றார். அந்தப் போட்டியில் தாரகைக்கு முதல் பரிசு கிடைத்தது.

அவள் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குத் திரும்பி, பரிசைப் பெற்றுக்கொண்ட செய்தியைத் தன் பெற்றோரிடம் கூறினாள். அவளுடைய பெற்றோர் அவளை அன்புடன் அணைத்துக்கொண்டு மகிழ்ந்தார்கள்.

காலங்கள் கடந்தன. தாரகை ஒரு புகழ்பெற்ற ஓவியராக வளர்ந்தாள். அவள் தன்னுடைய திறமையைப் பயன்படுத்தி ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்தாள். கடந்த காலத்தில் வண்ணங்கள் வாங்கக்கூடப் பணமில்லாமல் தவித்த அவள், இன்று பல குழந்தைகளின் கனவுகளுக்கு வண்ணம் தீட்டுபவளாக மாறினாள்.

இறைமக்களே, நம்மிடம் என்ன இல்லை என்று நினைத்து வருந்துவதைவிட, நம்மிடம் என்ன இருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். இறைவேதம் கூறுகிறது: “உன் கையால் செய்யும்படி நேரிடுகிறது எதுவோ, அதை உன் முழுப்பெலத்தோடும் செய்.” (பிரசங்கி 9:10)

தாரகையிடம் எல்லா வசதிகளும் இல்லை. ஆனால், தன்னிடம் இருந்ததைப் பயன்

படுத்தி முழு முயற்சியுடன் செயல்பட்டாள். அதுவே அவளுடைய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

நம்மில் பலர், “என்னிடம் பணம் இல்லை; வசதி இல்லை; வாய்ப்பு இல்லை; என்னால் முடியாது” என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தேவன் நம்மிடம் கொடுத்திருக்கும் திறமையை உணர்ந்து, நம்மிடம் இருப்பதைக் கொண்டு உண்மையாக முயற்சி செய்யத் தொடங்க வேண்டும். நம்மிடம் இருப்பது சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதைச் சரியாகப் பயன்படுத்தும்போது, அதன் மூலம் ஏற்படும் மாற்றம் பெரியதாக இருக்கலாம்.

இன்று உன்னிடம் இருக்கும் சிறிய திறமை, நாளை பலருடைய வாழ்க்கையில் பெரிய ஆசீர்வாதமாக மாறலாம். உன்னிடம் என்ன இல்லை என்பது உன் எதிர்காலத்தைத் தீர்மானிக்காது; உன்னிடம் இருப்பதை நீ எப்படிப் பயன்படுத்துகிறாய் என்பதே உன் எதிர்காலத்தை மாற்றும்.

– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்

Post navigation

Previous: பிரிட்டன் அரசியல்வாதிகள் மத்தியில் கிறிஸ்தவத்தின் மீதான ஆர்வம் அதிகரிப்பு – கிறிஸ்தவ அமைப்பு தகவல்
Next: அக்கறையுள்ள மனம்

இதையும் படிக்கலாம்

a caring mind
  • தியான செய்திகள்

அக்கறையுள்ள மனம்

Editorial Team November 2, 2026
boy crying
  • தியான செய்திகள்

மறைந்து போன கருப்புக் கறை

Editorial Team October 30, 2026
reckless love
  • தியான செய்திகள்

ஒரு கண நேரத் தவறான புரிதல்!

Editorial Team October 27, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

a caring mind
  • தியான செய்திகள்

அக்கறையுள்ள மனம்

Editorial Team November 2, 2026
Oviyam
  • தியான செய்திகள்

இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!

Editorial Team November 2, 2026
Andrea Williams
  • உலகம்

பிரிட்டன் அரசியல்வாதிகள் மத்தியில் கிறிஸ்தவத்தின் மீதான ஆர்வம் அதிகரிப்பு – கிறிஸ்தவ அமைப்பு தகவல்

Editorial Team November 2, 2026
chatgpt
  • தகவல்கள்

ChatGPT-யில் கேட்கப்படும் கிறிஸ்தவம் தொடர்பான கேள்விகளில் பாதி வேதாகமத்தைப் புரிந்துகொள்வது குறித்தவை

Editorial Team November 2, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.