Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • இலவசமான சொர்க்கம்
  • தியான செய்திகள்

இலவசமான சொர்க்கம்

Editorial Team July 9, 2026 1 minute read
tn_26

ஒரு மாலை நேரத்தில், ஒரு முதியவர் தனது பேரனுடன் வீட்டின் முன்பாக அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார். வாழ்க்கைப் பாடங்களை எளிமையாகவும் ஆழமாகவும் சொல்லும் பழக்கம் அவருக்கிருந்தது. அந்த நாளில் அவர் பேரனை நோக்கி சிரித்தபடி ஒரு வாக்கியம் கூறினார்: “பேரனே, சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்; ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.” இந்த வார்த்தைகள் பேரனின் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. உடனே அவன் ஆர்வத்துடன் கேட்டான்: “தாத்தா, இது எப்படி சாத்தியம்? சொர்க்கம் இலவசமா? நரகத்துக்கு பணமா?”

முதியவர் சிரித்தபடி மெதுவாக விளக்கத் தொடங்கி னார்: “மகனே, நன்றாக சிந்தித்துப் பார். சூதாட்டத்தில் ஈடுபட பணம் வேண்டும். மதுபானம் அருந்த பணம் வேண்டும். சிகரெட் புகைக்க பணம் வேண்டும். தீய பழக்கங்களில் ஈடுபடவும், தவறான வழிகளில் செல்லவும் பணம் தேவைப்படுகின்றது. மனிதன் தன் வாழ்க்கையை அழிக்கும் பல விஷயங்களுக்கு பணத்தை செலவழிக்கிறான். இவை அனைத்தும் அவனை மெதுவாக அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. அதனால் தான் நான் சொன்னேன். நரகத்திற்கு போக பணம் தேவை என்று.”

அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் தொடர்ந்து கூறினார்: “ஆனால், அன்பு காட்ட பணம் தேவை யில்லை. ஒருவரை ஆறுதல் கூற பணம் தேவையில்லை. தேவனை வணங்க பணம் தேவையில்லை. மன்னிப்பு கேட்க வும், மன்னிக்கவும் பணம் தேவையில்லை. தாழ்மையாக நடக்கவும், நேர்மையாக வாழவும் எந்தச் செலவும் இல்லை. ஒருவர் மற்றவருக்கு உதவுவது, சேவை செய்வது, நல்லதை தேர்ந்தெடுத்து வாழ்வது. இவை அனைத்தும் இலவசமாக கிடைக்கும் வாய்ப்புகள். அதனால்தான் சொர்க்கத்திற்கு

செல்லும் பாதை இலவசம் என்று சொன்னேன்.”

இந்த வார்த்தைகள் பேரனின் உள்ளத்தில் ஆழமாக பதிந்தன. முதியவர் அவனை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்: “இப்போது நீயே சொல்லு மகனேஞ் பணம் செலவழித்து அழிவைத் தேர்ந்தெடுக்கிறாயா? அல்லது இலவசமாகக் கிடைக்கும் நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடு க்கிறாயா?” அந்தக் கேள்வி அவனை சிந்திக்க வைத்தது.

இறைமக்களே, இந்தச் சிறிய உரையாடல் ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நாம் வாழும் வாழ்க் கையில், நமது நேரம், பணம், ஆற்றல் ஆகியவை எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. பலர் அறிந்திருந்தும் தவறான பழக்கங்களுக்கு பணம் செலவழிக்கிறார்கள். அது உடலையும், மனதையும், குடும்பத்தையும் பாதிக்கிறது. ஆனால் நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு பெரும்பாலும் பணம் தேவையில்லை; மனம் மட்டும் போதும். இறைவேதமும் இதையே எச்சரிக்கிறது:

“பாவிகளுடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே” (நீதி.4:14,15). மேலும், “நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைப் பின்பற்று” (நீதி. 2:20) என்று அறிவுறுத்துகிறது.

எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கின்றன. வாழ்க்கை என்பது தினமும் நாம் எடுக்கும் சிறிய முடிவுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு நாளும் நாம் இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம். நல்ல வழி அல்லது தீயவழி. தீய வழி ஆரம்பத்தில் இனிமையாகத் தோன்றலாம்; ஆனால் அதன் முடிவு அழிவு. நல்ல வழி ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம்; ஆனால் அதன் முடிவு அமைதியும் ஆசீர்வாதமும் ஆகும். ஆகையால், நாம் எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்பையும் தாழ்மை யையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தேவனை நம் வாழ்க்கையின் மையமாக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை பணத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது; நம்முடைய தேர்வுக ளால் நிர்ணயிக்கப்படுகிறது.

முடிவாக, வாழ்க்கை ஒரு தேர்வு. அந்தத் தேர்வு நம் கைகளில் உள்ளது. நாம் பணம் செலவழித்து அழிவை வாங்கிக் கொள்ள வேண்டுமா? அல்லது இலவசமாகக் கிடைக்கும் கிருபையையும் நன்மையையும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமா?

செலவு செய்து நரகத்தைத் தேர்ந்தெடுக்காதீர்;
இலவசமான பாதையைத் தேர்ந்தெடுத்து
சொர்க்கத்தில் வாழுங்கள்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: அன்பு கொடுக்கும் மரம்
Next: நாவு என்னும் ஆயுதம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.