Skip to content
September 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • சிறிய கனவு
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026 1 minute read
tn_44

ஒரு காலத்தில் இரண்டு சகோதரர்கள் மிகவும் ஏழ்மை யான சூழலில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்க்கை எளிதானதல்ல. தினமும் உழைத்தால்தான் அன்றைய உணவு கிடைக்கும் நிலை. தெருக்களில் கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளையும், எலும்புத் துண்டுகளையும் சேகரித்து விற்று, அந்தச் சிறிய வருமானத்தில் வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் முயற்சி குறைவானவர்கள் அல்ல; பல வேலை களில் கைகொடுத்தனர். ஆனால் எதிலும் நிலைத்த வெற்றி கிடைக்கவில்லை. தோல்வி அவர்களைத் தொடர்ந்து வந்தது.

ஒரு முயற்சி தோல்வியடைந்ததும், அவர்கள் தளர வில்லை. மற்றொரு முயற்சியைத் தொடங்கினர். ஆனாலும் வெற்றி அவர்களைத் தேடி வரவில்லை. பலர் இத்தகைய சூழ்நிலையில் நம்பிக்கையை இழந்து விடுவார்கள். “இது தான் என் வாழ்க்கை” என்று சமாதானப்பட்டு விடுவார்கள். ஆனால் இந்த சகோதரர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்களுக்குள் எங்கோ ஒரு நம்பிக்கை இன்னும் உயிரோடு இருந்தது.

ஒருநாள், அந்த சகோதரர்களில் ஒருவன் ஒரு நூலகத் திற்குச் சென்றான். அங்கு அவன் படித்த ஒரு கதை, அவன் வாழ்க்கையின் திசையை முற்றிலும் மாற்றியது. அந்தக் கதையில், ஒரு மனிதன் ஒரு கருவியின் உதவியால் வானில் பறப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அது ஒரு கற்பனைக் கதை தான். ஆனால் அந்தக் கற்பனை, அவன் மனதில் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கியது. “மனிதன் உண்மையா கவே பறக்க முடியுமா?” என்ற கேள்வி அவன் உள்ளத்தில் தீப்பொறியாக மின்னியது.
அந்த ஒரு கேள்வி அவனுடைய வாழ்க்கையை மாற்றிய தருணமாகியது. அவன் உடனே தனது சகோதரனிடம் இந்த எண்ணத்தைப் பகிர்ந்தான். இருவரும் சேர்ந்து மனிதன் வானில் பறப்பது பற்றிக் கவனமாக சிந்திக்கத் தொடங்கினர். அவர்கள் கனவு காணத் தொடங்கினர். அந்தக் கனவு சாதார ணமானதல்ல; அது உலகம் முழுவதையும் மாற்றக்கூடியது.

அவர்களின் பயணம் மிகவும் கடினமானது. எண்ணற்ற சோதனைகள், தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகள், பிறர் செய்த கேலிகள், பணமின்மை இவை அனைத்தும் அவர்களை தடுக்க முயன்றன. பலர் அவர்களைப் பார்த்து சிரித்தனர். “மனிதன் பறப்பான் என்று நினைக்கிறீர்களா?” என்று கேலி செய்தனர். ஆனால் அந்த கேலிகள் அவர்களை தளரச் செய்யவில்லை. மாறாக, அவர்களை மேலும் உறுதியானவர்களாக மாற்றின.

அவர்கள் ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் கற்றுக் கொண்டனர். ஒவ்வொரு முயற்சியும் அவர்களை ஒரு படி முன்னேற்றியது. அவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தனர். அவர்களுடைய கனவை விடவில்லை. ஆண்டுகள் கடந்தன. பல சோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் ஒரு இயந்திரத்தை உருவாக்கினர். அது சாதாரண இயந்திரமல்ல; அது உலக வரலாற்றை மாற்றப்போகும் கண்டுபிடிப்பு.

1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி, மனித வரலாற்றில் முதன்முறையாக சக்தியூட்டப்பட்ட விமானம் வானில் பறந்தது. அந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் ரைட் சகோதரர்கள். ஒரு காலத்தில் குப்பைகளை சேகரித்து வாழ்ந்
தவர்கள், உலகத்தின் வரலாற்றை மாற்றியவர்களாக மாறினர்.

இந்தக் கதையில் மறைந்திருக்கும் உண்மை மிகவும் ஆழமானது. ஒரு சிறிய எண்ணம், ஒரு கேள்வியாக தொடங் குகிறது. அந்த கேள்வி ஒரு கனவாக மாறுகிறது. அந்தக் கனவு முயற்சியாக மாறுகிறது. அந்த முயற்சி, விடா முயற்சியுடன் தொடர்ந்தால், அது ஒரு பெரிய சாதனையாக மாறுகிறது. உலகத்தை மாற்றும் சக்தி, ஒரு சிறிய சிந்தனை யிலேயே இருக்கிறது.

நாம் பல நேரங்களில் தோல்வியை முடிவாகக் கருதுகிறோம். ஆனால் உண்மையில் தோல்வி என்பது முடிவு அல்ல. அது வெற்றிக்கான ஒரு படிக்கட்டு. ரைட் சகோதரர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு நின்றிருந்தால், இன்று நாம் விமானத்தில் பயணம் செய்திருக்க முடியாது. அவர்கள் தோல்வியை தாண்டி முன்னேறியதால் தான், உலகம் ஒரு புதிய உயரத்தை அடைந்தது.

“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;
நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில்
அறுப்போம்.” (கலாத்தியர் 6:9)

இந்த வசனம் நமக்கு ஒரு பெரிய உறுதியை அளிக்கிறது. நாம் செய்யும் உழைப்பு வீணாகாது. நாம் காணும் கனவுகள் வீணாகாது. நாம் செலுத்தும் முயற்சி வீணாகாது. தேவனுடைய காலத்தில் அதன் பலன் நிச்சயமாக வெளிப்படும்.

ஒரு மனிதன் உயர்வதற்கு மூன்று முக்கியமான விஷயங்கள் அவசியம் விசுவாசம், விடாமுயற்சி, உழைப்பு. இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தால், சாதிக்க முடியாதது எதுவுமில்லை. நம்முடைய வாழ்க்கையிலும் இதே உண்மை பொருந்துகிறது. நாம் காணும் கனவுகளை சிறுமைப்படுத்த க்கூடாது. நாம் சந்திக்கும் தோல்விகளைப் பயப்படக்கூடாது. நாம் எதிர்கொள்ளும் தாமதங்களை மனம் தளராமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

முடிவாக, ஒரு சிறிய எண்ணத்தை அலட்சியப் படுத்தாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும். ஒரு சிறிய முயற்சியைத் தள்ளிப் போடாதீர்கள். அது ஒரு பெரிய வெற்றியின் தொடக்கமாக இருக்கலாம். விசுவாசத்தில் நிலைத்திருங்கள். சோர்ந்து போகாமல் முயற்சி செய்யுங்கள். கடைசி வரை ஓடுங்கள். நிச்சயமாக, நீங்கள் காணும் கனவு ஒருநாள் நிஜமாகும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தேவையானது ஒரு தீர்மானம்
Next: பொறுமை கடலினும் பெரிது

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

srilanka case
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் சிறை

Editorial Team September 24, 2026
srilanka
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Editorial Team September 24, 2026
bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.