Skip to content
September 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • பொறுமை கடலினும் பெரிது
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026 1 minute read
tn_45

ஒரே மரத்தின் ஒரே கிளையில் இரண்டு மாம்பழங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. வெளியில் பார்த்தால் இரண்டும் ஒரே மாதிரி தோன்றினாலும், அவற்றின் நிலை ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவற்றில் ஒன்று ஏற்கனவே பழுத்து இனிமையடைந்திருந்தது. மற்றொன்று இன்னும் பச்சையாகவே இருந்தது; அது பழுக்க இன்னும் காலம் தேவைப்பட்டது. ஒரே கிளை, ஒரே சூரியன், ஒரே மழை, ஒரே சூழ்நிலை ஆனாலும் வளர்ச்சியின் நேரம் வேறுபட்டது. இந்தச் சிறிய காட்சி, வாழ்க்கையின் மிகப் பெரிய உண்மையை நமக்குக் கற்றுத்தருகிறது: ஒவ்வொருவருக்கும் தன் நேரம் உண்டு.

இறைமக்களே, நம் வாழ்க்கையிலும் இதேபோல பல தருணங்கள் நிகழ்கின்றன. நம்முடன் தொடங்கியவர்கள் சிலர் விரைவில் முன்னேறிவிடுகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் உயர்கிறார்கள். ஆனால் நாம் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. அந்த நேரத்தில் நம் மனதில் பல கேள்விகள் எழுகின்றன. “ஏன் நான் இல்லை?”, “எனக்கு வாய்ப்பு இல்லையா?”, “என் வாழ்க்கை ஏன் இப்படித்தான் இருக்கிறது?” என்று நாம் நம்மையே குறை கூறத் தொடங்குகிறோம். ஒப்பீடு நம் மனதை உடைக்கத் தொடங்குகிறது.

ஆனால் உண்மையில், அது தோல்வி அல்ல. அது தாமதமும் அல்ல. அது தேவன் நிர்ணயித்த நேரம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை. பச்சை மாம்பழம், பழுத்த மாம்பழத்தைப் பார்த்து குறை கூறாது. அது அவசரப்படாது. அது இயற்கையை நம்பி அமைதியாக காத்திருக்கிறது. ஏனெனில் அது அறிவது ஒன்றே: “என் நேரம் வரும்.” அதே போல நாமும் நம் வாழ்க்கையில் பொறுமையை கற்றுக்கொள்ள வேண்டும். பிறரைப் பார்த்து தளர வேண்டாம். நம்முடைய பயணம் தனித்துவமானது.

இறைமக்களே, பொறுமை என்பது சும்மா காத்திருப்பது அல்ல. அது நம்பிக்கையுடன் காத்திருப்பது. அது உள்ளத்தில் உறுதியுடன் நிலைத்திருப்பது. நாம் காத்திருக்கும்போது, தேவன் நம்மை தயார் செய்து கொண்டிருக்கிறார். நாம் காணாத இடங்களில் அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். நாம் நினைப்பதைவிட அவர் திட்டம் பெரியது.

இதைக் காட்டும் ஒரு சிறிய சம்பவம் இருக்கிறது. ஒரு நாள், ஒரு சிறுமி தோட்டத்தில் ஒரு அழகான பூச்செடியைப் பார்த்தாள். அந்த செடி மிகவும் அழகாக மலர்ந்திருந்தது. ஆனால் அதன் அடிப்பகுதியில் சேறும், மாட்டுச் சாணமும் இருப்பதை அவள் கவனித்தாள். “இவ்வளவு அழகான பூ இவ்வளவு அசுத்தமான இடத்தில் இருக்கக் கூடாது” என்று எண்ணினாள். உடனே அந்தச் செடியை வேரோடு பிடுங்கி எடுத்தாள். அதை தண்ணீரால் சுத்தம் செய்து, சுத்தமான இடத்தில் வைத்தாள்.

சில நேரத்தில் அந்தச் செடி வாடத் தொடங்கியது. அதன் அழகு மறைந்தது. பூ சுருங்கி விழுந்தது. அப்போது அங்கு வந்த தோட்டக்காரன் அதைப் பார்த்து வருந்தினார். “இந்த செடி என் தோட்டத்தில் மிகவும் சிறந்தது. அதை ஏன் பிடுங்கினாய்?” என்று கேட்டார். சிறுமி தனது காரணத்தை சொன்னாள். அதற்கு தோட்டக்காரன் அமைதியாக பதிலளித்தார்: “இந்த செடியை அந்த இடத்தில் வைத்ததும் நான் தான். அதற்கு சாணம் போட்டதும் நான் தான். எந்த செடி எங்கு வளர வேண்டும் என்பதை நான் அறிவேன்.”

இந்தச் சம்பவம் நமக்கு ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறது. நாம் பல நேரங்களில் நம் வாழ்க் கையின் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளாமல் குறை கூறுகிறோம். “ஏன் இந்த குடும்பம்?”, “ஏன் இந்த வேலை?”, “ஏன் இந்த சோதனை?” என்று கேட்கிறோம். ஆனால் நாம் அறியாதது என்னவென்றால் தேவன் நோக்கமின்றி எதையும் செய்யமாட்டார். நாம் இருக்கும் இடம் ஒரு தவறு அல்ல; அது ஒரு திட்டம். அது ஒரு தண்டனை அல்ல; அது ஒரு தயார் செய்தல்.

நாம் இருக்கும் சூழ்நிலை சில நேரங்களில் சிரமமாக தோன்றலாம். ஆனால் அந்த சூழ்நிலையே நம்மை வளர்க்கும் உரமாக இருக்கலாம். சாணம் இல்லாமல் செடி வளராது. அதேபோல் சோதனை இல்லாமல் மனிதன் வளர முடியாது. நாம் தவிர்க்க விரும்பும் பல அனுபவங்களே நம்மை உயரத்திற்கு கொண்டு செல்லும் படிக்கட்டுகளாக இருக்கின்றன.

இறைவேதம் கூறுகிறது: “தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.”

இந்த வசனம் நமக்கு சொல்லுவது என்னவென்றால், வாழ்க்கையின் சுமைகள் வீணானவை அல்ல. அவை நம்மை உருவாக்கு கின்றன. அவை நம்மை உறுதியாக்குகின்றன. அவை நம்மை உயரத்திற்கு ஆயத்தப்படுத்துகின்றன.

இறைமக்களே, நம்முடைய வாழ்க்கையை மற்றவர் களுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு நம்மை தாழ்வாக உணரச் செய்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. ஒவ்வொருவருக்கும் தேவன் தனித்த திட்டம் வைத்திருக்கிறார். ஒருவரின் நேரம் இன்று வந்திருக்கலாம்; மற்றொருவரின் நேரம் நாளை வரும். ஆனால் தாமதமான வெற்றி கூட, சரியான நேரத்தில் வரும் போது, அது நிலையானதாக இருக்கும்.

முடிவாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: நேரம் வராத வெற்றி இல்லை. நோக்கம் இல்லாத வாழ்க்கை இல்லை. தேவன் அமைத்த நேரம் தவறுவதில்லை. ஆகையால் நாம் அவசரப்பட வேண்டாம். நாம் புலம்ப வேண்டாம். நாம் நம்பிக்கையை இழக்க வேண்டாம். பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில், சரியான நேரத்தில், தேவன் நம்மை உயர்த்துவார். அவர் செய்யும் செயல்கள் தாமதமாக தோன்றலாம்; ஆனால் அவை எப்போதும் துல்லியமானவை. நம் நேரம் வரும். நம் வாழ்க்கையும் இனிமையாய் பழுக்கும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: சிறிய கனவு
Next: அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

srilanka case
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் சிறை

Editorial Team September 24, 2026
srilanka
  • உலகம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை

Editorial Team September 24, 2026
bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.