Skip to content
July 16, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தகவல் களஞ்சியம்
  • கதைகள்
  • பிறனிடத்திலும் அன்புகூருவாயாக
  • கதைகள்

பிறனிடத்திலும் அன்புகூருவாயாக

Editorial Team July 1, 2026
love_unity

“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”
– மத்தேயு 22:39

ஒரு போர்வீரன் வியட்நாம் போர் முடிந்து, தன் வீட்டிற்குத் திரும்பும் நேரம் வந்தது. சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த தன் பெற்றோரை அவன் தொலைபேசியில் அழைத்து, “நான் வீட்டிற்கு வரப்போகிறேன். ஆனால் உங்களிடம் ஒரு உதவியைக் கேட்கிறேன். என்னோடு என் நண்பனும் வர இருக்கிறான்” என்று கூறினான்.

அதற்கு பெற்றோர்கள், “ஓ, தாராளமாகக் கூட்டிக்கொண்டு வா. அவனை நாங்களும் பார்க்க ஆவலாயிருக்கிறோம்” என்றார்கள்.

அதற்கு மகன், “அவன் நடந்த போரில் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணியில் காலை வைத்ததினால், அவனுடைய ஒரு காலையும் ஒரு கையையும் இழந்துவிட்டான். அவனுக்கு யாரும் இல்லாததால், அவன் என்னோடு இருப்பதை விரும்புகிறேன்” என்று கூறினான்.

பெற்றோர், “மகனே, அதைக் கேட்க மிகவும் விசனமாயிருக்கிறது. இருந்தாலும், அவனை நாம் வேறொரு இடத்தில் தங்க வைக்க ஆயத்தப்படுத்துவோம். நம்மோடு அவன் இருக்க முடியாது. அவனை வைத்துப் பார்த்துக்கொள்வது மிகவும் கஷ்டம் என்பது உனக்குத் தெரியும். இந்த வயதான காலத்தில் எங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு பாரம் இருந்தால் மிகவும் கஷ்டம். இதைப் புரிந்துகொண்டு, அவனை வேறு இடத்தில் விட்டுவிட்டு, நீ மட்டும் வா” என்று கூறினர்.

மகன் போனை வைத்துவிட்டான்.

சிறிது நாட்கள் கழித்து, சான் பிரான்சிஸ்கோ நகர போலீசார் அந்த பெற்றோரை அழைத்து, “உங்கள் மகன் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டான். நீங்கள் வந்து பார்த்து அது உங்கள் மகன்தானா என்று உறுதி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

உடனே பதறிய பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, அது அவர்களுடைய மகன்தான் என்று தெரிந்தது. அப்போது அவர்களுக்குத் தெரியாத ஒரு காரியமும் வெளிப்பட்டது. அவர்களுடைய மகனுக்கே ஒரு கையும் ஒரு காலும் இல்லாமல் இருந்தது.

பிரியமானவர்களே, நம்மில் அநேகரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மைப் போல எல்லாவற்றையும் உடையவர்களாகவும், அழகாகவும், அறிவாளிகளாகவும் இருந்தால் அவர்களோடு பழகத் துடிக்கிறோம்; பழகுகிறோம். ஆனால் நம்மைவிட அழுக்காகவோ, உடல் ஊனமுற்றவர்களாகவோ இருந்தால், அவர்களைத் தவிர்க்கவே விரும்புகிறோம்.

மேலே சொல்லப்பட்ட கதையில், அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைதான் ஊனமடைந்திருக்கிறான் என்று தெரிந்திருந்தால், நிச்சயமாக வீட்டிற்கு அழைத்து வந்து அவனைப் பராமரித்திருப்பார்கள். ஆனால், வேறு யாரோ என்று நினைத்து, “அவனுக்காக நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?” என்று எண்ணியதாலேயே அவர்கள் தங்கள் சொந்த மகனையே இழக்க வேண்டியதாயிற்று.

நமக்கு ஒருவர் உண்டு. அவருடைய அன்பு நிபந்தனையற்றது. நாம் எத்தனை அழகற்றவர்களாயிருந்தாலும், அறிவற்றவர்களாயிருந்தாலும், அவர் நம்மை நேசித்து, பராமரித்து, போஷித்து, காத்து, வழிநடத்துகிற நம் தேவன். அவர் பட்சபாதமில்லாதவர்.

அவருடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளும் நாமும் அப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார்.

“அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”
(மத்தேயு 25:37–40)

என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார்.

நாம் மற்றவர்களுக்குச் செய்யும் ஒவ்வொரு நன்மையும் தேவனுக்கே செய்ததுபோலாகும்.

நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு உதவியாகச் செய்வோமா? “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற கற்பனையை நிறைவேற்றுவோமா?

நமக்கு உதவி செய்ய முடியும் போது, அதற்குத் தகுதியானவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கக்கூடாது. நிச்சயமாகச் செய்வோம். நம் பலன் பரலோகத்தில் சேர்த்து வைக்கப்படும்.

ஆமென்! அல்லேலூயா!

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோகத் தகப்பனே, இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது நன்மை செய்பவராய்ச் சுற்றித்திரிந்தார் என்று வேதத்தில் பார்க்கிறோமே. அதுபோல நாங்களும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய எங்களுக்கு உணர்த்தும்.

தேவையுள்ளவர்களுக்கு நாங்கள் செய்யும் உதவி உமக்கே செய்தது என்பதை உணர்ந்து, எங்களால் இயன்றதைச் செய்யத் தக்கவர்களுக்கு செய்ய கிருபை தாரும்.

எங்கள் ஜெபத்தைக் கேட்டு எங்களுக்குப் பதில் கொடுப்பவரே, உமக்கே நன்றி.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே. ஆமென்!

Post navigation

Previous: சத்தியத்திற்காக தங்கள் உயிரைப்பலி கொடுத்த வில்லியம் டின்டேல்
Next: ஆயிரம் ஆயிரம் பாடல்களை – பாடல் பிறந்த கதை

இதையும் படிக்கலாம்

painting
  • கதைகள்

உன் எல்லை அதுவல்ல… இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும்!

Editorial Team July 1, 2026
forgiveness
  • கதைகள்

கசப்பான வைராக்கியம் – மன்னிப்பால் வெல்லப்படும் வெறுப்பு

Editorial Team July 1, 2026
man_praying
  • கதைகள்

எங்கே நீயாகவே விழுந்துவிடுவாயோ என்று…”

Editorial Team July 1, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_48
  • தியான செய்திகள்

அறியாமையில் இழந்த ஆசீர்வாதம்

Editorial Team July 16, 2026
tn_45
  • தியான செய்திகள்

பொறுமை கடலினும் பெரிது

Editorial Team July 15, 2026
tn_44
  • தியான செய்திகள்

சிறிய கனவு

Editorial Team July 15, 2026
tn_49
  • தியான செய்திகள்

தேவையானது ஒரு தீர்மானம்

Editorial Team July 15, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.