- சிங்கம் கெம்பீரமாய் கெர்ச்சிக்கிறது (வெளிப்படுத்தல் 10:3)
தேவ ஜனங்களும் கர்த்தரைத் துதிப்பதில் கெம்பீர சத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு. (சங்கீதம் 118:15; 132:16)
- சிங்கம் பின்னடையாது (நீதிமொழிகள் 30:30)
தேவ பிள்ளைகளும் விசுவாச வாழ்க்கையில் பின்னடையக் கூடாது. பாடுகள், சோதனைகள், உபத்திரவங்கள் வந்தாலும் நிலைத்திருக்க வேண்டும். (எபிரெயர் 10:38)
- சிங்கம் தைரியமுள்ளது (நீதிமொழிகள் 28:1)
நாமும் தைரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். குற்றமற்ற இருதயமும் விசுவாசமும் தைரியத்தை உண்டாக்குகின்றன. (1 யோவான் 3:21; எபேசியர் 3:12)
- சிங்கம் பலமுள்ளது (நியாயாதிபதிகள் 14:18)
விசுவாசிகள் ஆவிக்குரிய பலமுள்ளவர்களாக வளர வேண்டும். பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் காணப்பட வேண்டும். (சங்கீதம் 84:7)
- சிங்கத்தின் கெபி ஆகாரத்தினால் நிரம்பியிருக்கும் (நாகூம் 2:12)
தேவ பிள்ளைகளின் ஆகாரம் வேத வசனம். தேவனுடைய வார்த்தையை உள்ளத்தில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். (உபாகமம் 8:3; யோபு 23:12)
- சிங்கம் தன் குட்டிகளின் தேவையை சந்திக்கும்
அதுபோல நமது பரமபிதாவும் நமது தேவைகளை அறிந்து சந்திக்கிறார். (மத்தேயு 7:11)
- சிங்கம் பயப்படாது
தேவ பிள்ளைகளும் பயப்படாமல் விசுவாசத்தோடு வாழ வேண்டும். பயத்திற்கு காரணம் விசுவாசக் குறைவு. (மாற்கு 4:40)
- சிங்கம் மறைவிடத்தில் தங்கும் (புலம்பல் 3:10)
மறைவிடம் தாழ்மையை நினைவூட்டுகிறது. நமது வாழ்க்கையில் தாழ்மை காணப்பட வேண்டும்.
- சிங்கம் போல பிசாசு சுற்றித் திரிகிறான்
பிசாசை எதிர்த்து ஜெயிக்க வேண்டும். தேவன் சிங்கங்களின் வாயை அடைக்கவும், தம்முடைய பிள்ளைகளை இரட்சிக்கவும் வல்லவர். (எபிரெயர் 11:33; 2 தீமோத்தேயு 4:17)
- சிங்கம் காட்டிற்கு ராஜா
தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவோடு ராஜாக்களாக ஆளும் நாளை எதிர்நோக்கி வாழ வேண்டும். (வெளிப்படுத்தல் 1:6)