Skip to content
September 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • நிராகரிப்பின் மறுபக்கம்
  • தியான செய்திகள்

நிராகரிப்பின் மறுபக்கம்

Editorial Team July 22, 2026 1 minute read
tn_65

வாழ்க்கையில் நாம் பல நேரங்களில் நிராகரிப்பைச் சந்திக்க நேரிடுகிறது. ஒருவரின் “இல்லை” என்ற ஒரு வார்த்தை கூட சில சமயங்களில் நம்மை மனதளவில் அதிர்ச்சியடையச் செய்யலாம். குறிப்பாக காதல், வேலை, நட்பு போன்ற முக்கியமான உறவுகள் மற்றும் வாய்ப்புகளில் ஏற்படும் நிராகரிப்புகள், உள்ளத்தை ஆழமாகப் புண்படுத்தக்கூடியவை. அந்த வலி சில நேரங்களில் நம்முடைய மதிப்பையே சந்தேகிக்கச் செய்கிறது. ஆனால், ஒவ்வொரு நிராகரிப்பிற்குப் பின்னாலும் ஒரு ஆழமான உண்மை மறைந்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

ஒரு துணிக்கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஆடைகளில், சிலவற்றே நம் கவனத்தை ஈர்க்கின்றன. மற்ற ஆடைகள் அழகாக இருந்தாலும், அவை நமக்கானதாக இருக்காது. அவை யாரோ மற்றொருவருக்காகத் தான் உருவாக்கப்பட்டவை. இதுபோலத்தான் வாழ்க்கையும். யாரோ ஒருவர் உங்களை நிராகரிக்கிறார் என்றால், அது நீங்கள் குறைவானவர் என்பதற்கான அடையாளமல்ல; மாறாக, நீங்கள் அவர்களுக்கு பொருத்தமானவர் அல்ல என்பதற்கான ஒரு எளிய உண்மை மட்டுமே.

அந்த நிராகரிப்பை ஒரு தோல்வியாகக் கருதாமல், ஒரு புதிய தொடக்கத்தின் வாய்ப்பாகக் காண வேண்டும். ஒதுக்கப்பட்ட ஒரு துணி யாருக்கோ சரியாக பொருந்துவது போல, உங்களையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிறார். உங்கள் தனித்துவத்தையும் திறமைகளையும் மதிக்கத் தெரியாதவர்களுக்காக துக்கப்பட வேண்டியதில்லை. உங்கள் மதிப்பு, பிறர் ஏற்றுக்கொள்ளும் அளவினால் நிர்ணயிக்கப்படுவதில்லை.

நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து முன்னேறுங்கள். வாழ்க் கையின் பாதையில் சில கதவுகள் மூடப்படுவது, மற்ற சிறந்த கதவுகள் திறக்கப்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். ஒரு நாள், உங்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் நபரோ அல்லது உங்களுக்கு உரிய வாய்ப்போ உங்களைத் தேடி வரும். எனவே நிராகரிப்புகளை தடைகளாக அல்ல, வழி காட்டும் அடையாளங்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

இறைமக்களே, நிராகரிப்பின் வலியை மிகவும் ஆழமாக அனுபவித்தவர் இயேசு கிறிஸ்து தான். இறைவேதம், “இயேசு தம்முடையவரிடத்தில் வந்தார்; ஆனால் அவருடையவர்கள் அவரை ஏற்கவில்லை” (யோவான் 1:11) என்று கூறுகிறது. உலகத்தை நேசித்தவரையே உலகம் நிராகரித்தது. ஆகையால் உங்கள் ஏமாற்றங்களையும், அவமானங்களையும், தோல்வி களையும் நீங்கள் சொல்லுவதற்குமுன்பே, அவற்றின் பாரத்தை இயேசு அறிந்திருக்கிறார்.

சில நேரங்களில் உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் உங்களுடன் இருந்தவர்கள், சோதனைக் காலத்தில் உங்களை மறந்துவிடலாம். சிலர் மறந்தது போல நடிக்கவும் கூடலாம். ஆனால் அதற்காக மனம் உடைய வேண்டாம். இறைவன் கொடுத்த வாக்குறுதி உறுதியானது:

“நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு
முன்பாக எதிர்த்து நிற்பதில்லை நான் உன்னைவிட்டு
விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை”
(யோசுவா 1:5).

மனிதர்கள் தங்கள் வாக்குறுதிகளை மறந்துவிடலாம். ஆனால் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இறைவன் இயேசு, உங்களை ஒருபோதும் மறப்பதில்லை; உங்களை விட்டுப் பிரிவதுமில்லை. ஆகையால் நிராகரிப்பின் மறுபக்கத்தில் இறைவனின் அன்பை காண கற்றுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் நிராகரிக்கப்பட்ட இடத்திலேயே, ஒருநாள் நீங்கள் மதிக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள்.

நினைவில் கொள்ளுங்கள் வலி என்பது வீழ்ச்சிக்கான காரணம் அல்ல; அது வலிமைக்கு வழிவகுக்கும் ஒரு பயிற்சி. காயப்படுத்தும் அனுபவங்களே, நம்மை உறுதியானவர்களாக மாற்றுகின்றன. ஆகவே தளராதீர்கள். உங்கள் பயணத்தை தொடருங்கள். தேவன் உங்களை சரியான நேரத்தில் சரியான இடத்தில் நிலைநிறுத்துவார்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: வேலி அடைத்து காத்துக்கொள்
Next: வார்த்தையின் ஞானம்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.