Skip to content
July 21, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • காலத்தின் மதிப்பு
  • தியான செய்திகள்

காலத்தின் மதிப்பு

Editorial Team July 20, 2026 1 minute read
tn_60

விஜயபுரி என்ற நாட்டை விவேகவர்மன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் அறிவும் ஆர்வமும் நிறைந்த அரசன். தனது நாட்டை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், பல துறைகளில் தேர்ந்த அறிஞர்களை தனது அரசவையில் வைத்திருந்தான். அவர்களுடன் விவாதிக் கவும், புதிய உண்மைகளை அறியவும் அவனுக்கு மிகவும் விருப்பம்.

ஒருநாள் அரசன் தனது அரசவையில் இருந்த அறிஞர் களை நோக்கி ஒரு முக்கியமான கேள்வியை முன் வைத்தான்: “வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டான். இந்தக் கேள்வி சாதாரணமாக தோன்றினாலும், அதன் உள்ளடக்கம் மிகவும் ஆழமானது.

முதல் அறிஞர் எழுந்து, “அரசே! வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தது உயிர்தான். உயிரில்லை என்றால் மனிதன் எதையும் அனுபவிக்க முடியாது. எல்லா அனுபவங்களுக்கும் அடிப்படை உயிரே. எனவே உயிரே மிக உயர்ந்தது” என்று கூறினார்.

அதற்கு அடுத்ததாக இரண்டாவது அறிஞர் எழுந்து, “மன்னா! உயிர் இருந்தாலும் அறிவு இல்லையெனில் மனிதன் வாழ்வதற்கு அர்த்தமில்லை. அறிவே மனிதனை மற்ற உயிர்க ளிலிருந்து வேறுபடுத்துகிறது. அறிவே முன்னேற்றத்தின் காரணம். எனவே அறிவே மிக முக்கியமானது” என்றார்.

மூன்றாவது அறிஞர் எழுந்து, “அரசே! பொறுமை இல்லாமல் மனிதன் ஒரு கணம் கூட அமைதியாக வாழ முடியாது. எந்த சாதனையும் ஒரே நாளில் கிடைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் பொறுமை அடிப்படை. எனவே பொறுமையே மிக உயர்ந்தது” என்று கூறினார்.

நான்காவது அறிஞர் எழுந்து, “அரசே! இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் சூரியனின் ஒளி மற்றும் ஆற்றலால் வாழ்கின்றன. சூரியன் இல்லையெனில் உயிரே இருக்காது. எனவே சூரியனே அனைத்திற்கும் அடிப்படை” என்று விளக்கினார்.

ஐந்தாவது அறிஞர் எழுந்து, “அரசே! வாழ்க்கையில் அன்பு இல்லையெனில், எதுவும் இருந்தாலும் அது வெறுமை -யாகிவிடும். அன்பே உறவுகளை உருவாக்குகிறது. அன்பே மனிதனை மனிதனாக்குகிறது. எனவே அன்பே மிக மதிப்பு வாய்ந்தது” என்று கூறினார்.

அனைவரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்த பிறகு, ஆறாவது அறிஞர் மெதுவாக எழுந்தார். அவர் அமைதியாக பேசத் தொடங்கினார்: “அரசே! இவர்கள் கூறிய அனைத்தும் உண்மையே. ஆனால் இவையனைத்தையும் விட மேலானது ஒன்று உள்ளது அது காலம்.”

அவர் தொடர்ந்தார்: “நமக்குக் காலம் இல்லையெனில், உயிர் இருந்தாலும் அதன் பயன் என்ன? அறிவை பயன்படுத்த எந்த நேரம் கிடைக்கும்? பொறுமையை கடைப் பிடிக்க அவகாசம் எது? சூரியனின் பலனை அனுபவிக்க எந்த வாய்ப்பு? அன்பை வெளிப்படுத்த எந்த நேரம்? எனவே இவையனைத்தையும் செயல்படுத்தும் அடிப்படை காலமே.”

இந்த ஆழமான விளக்கத்தை கேட்ட அரசன் மிகவும் மகிழ்ந்தான். ஆறாவது அறிஞரின் கருத்து தான் உண்மைக்கு மிக அருகில் உள்ளது என்பதை உணர்ந்தான். அவரது அறிவை பாராட்டி, அவர் விரும்பிய அளவிற்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தான்.

இறைமக்களே, நாம் பொதுவாக “காலம் பொன்னாகும்” என்று சொல்வோம். ஆனால் உண்மையில் காலம் பொன்னை விட மதிப்புமிக்கது. இழந்த பொன்னை நாம் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால் இழந்த காலத்தை எவ்வளவு செல்வம் கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாது.

ஒரு கணம் கடந்துவிட்டால், அது என்றென்றைக்கும் கடந்த காலமாகி விடுகிறது. அதை மீண்டும் வாங்கவும் முடியாது; திருப்பியும் கொண்டு வர முடியாது. அதனால்தான் காலம் வாழ்க்கையின் மிக உயர்ந்த சொத்து என்று கூறப்படுகிறது.

நாம் பல நேரங்களில் காலத்தின் மதிப்பை உணராமல், அதை வீணாக்கி விடுகிறோம். தேவையற்ற பேச்சுகள், பயனற்ற செயல்கள், அர்த்தமில்லாத சிந்தனைகள் இவற்றில் நமது நேரத்தை செலவழிக்கிறோம். பின்னர் “நேரம் போய் விட்டது” என்று வருந்துகிறோம்.

ஆனால் உண்மையில், நேரம் போகவில்லை; நாம் தான் அதை சரியாக பயன்படுத்தவில்லை.

தேவன் நமக்குக் கொடுத்துள்ள ஆயுள் காலம் ஒரு பெரிய பரிசு. அந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகி றோம் என்பதே நமது வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒரு மனிதன் தனது நேரத்தை மதிக்கத் தொடங்கினால், அவன் வாழ்க்கையும் மதிப்புமிக்கதாக மாறும்.

ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புதிய வாய்ப்பு. அந்த நாளை அர்த்தமுள்ளதாக மாற்றுவது நமது பொறுப்பு. நாம் பேசும் வார்த்தைகளிலும், செய்யும் செயல்களிலும், செலவிடும் நேரத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

இறைவேதம் இதை தெளிவாக அறிவுறுத்துகிறது: “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள்.” இந்த வசனம் நமக்கு ஒரு தெளிவான அழைப்பை அளிக்கிறது – நேரத்தை வீணாக்காமல், அதை நன்மைக்காக பயன்படுத்த வேண்டும்.

இறைமக்களே, நாம் நேரத்தை மதிக்கிறோமா? நாம் அதை பயனுள்ளதாக பயன்படுத்துகிறோமா? அல்லது அதை வீணாக்குகிறோமா? நாம் நம்மையே கேட்க வேண்டும்.

முடிவாக, நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான்: காலத்தை மதிப்பவன் வாழ்க்கையை மதிப்பான். காலத்தை வீணாக்குபவன் வாழ்க்கையையே இழக்கிறான்.

ஆகையால், ஒவ்வொரு நொடியையும் மதித்து வாழுங்கள்;
ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்; தேவன் கொடுத்த நேரத்தை ஆசீர்வாதமாக்குங்கள்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: காயப்பட்ட அழகான கரங்கள்
Next: உண்ட வீட்டுக்கே இரண்டகம்

இதையும் படிக்கலாம்

tn_61
  • தியான செய்திகள்

உண்ட வீட்டுக்கே இரண்டகம்

Editorial Team July 20, 2026
tn_59.1
  • தியான செய்திகள்

காயப்பட்ட அழகான கரங்கள்

Editorial Team July 20, 2026
tn_58
  • தியான செய்திகள்

அன்புச் செடியில் பூக்கும் மன்னிப்பு

Editorial Team July 19, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_61
  • தியான செய்திகள்

உண்ட வீட்டுக்கே இரண்டகம்

Editorial Team July 20, 2026
tn_60
  • தியான செய்திகள்

காலத்தின் மதிப்பு

Editorial Team July 20, 2026
tn_59.1
  • தியான செய்திகள்

காயப்பட்ட அழகான கரங்கள்

Editorial Team July 20, 2026
tn_58
  • தியான செய்திகள்

அன்புச் செடியில் பூக்கும் மன்னிப்பு

Editorial Team July 19, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.