Skip to content
November 10, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • உற்றுக் கவனிக்கும் தேவன்
  • தியான செய்திகள்

உற்றுக் கவனிக்கும் தேவன்

Editorial Team November 10, 2026 1 minute read
உற்றுக் கவனிக்கும் தேவன்

அழகிய ஆலயம் ஒன்று. அங்கே ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இனிமையான பாடல்கள் ஆலயம் முழுவதும் ஒலித்தன. வெண்ணிற ஆடைகளை அணிந்திருந்த பாடகர் குழுவினர், வானதூதர்களின் கூட்டத்தைப் போலக் காட்சியளித்தனர். போதகரும் சிறந்த கல்வியறிவும் வேத அறிவும் கொண்டவராக இருந்தார். அழகிய சொற்களையும் அடுக்குமொழிகளையும் பயன்படுத்தி மக்களைக் கவரும் வகையில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் ஆலயத்திற்குள் வந்தார். முதலில் வாசற்பகுதியில் நின்று அங்கிருந்த அனைத்தையும் அமைதியாகப் பார்வையிட்டார். பின்னர் ஆலயத்தின் உள்ளே சென்று ஆராதனையைக் கவனித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு ஆழ்ந்த பெருமூச்சுடன், மனவேதனையோடு அங்கிருந்து வெளியேறினார்.

இதைக் கவனித்த போதகர், ஆலயப் பணியாளரை அழைத்து, ‘‘சற்று முன்பு இங்கு வந்த அந்த மனிதர் யார்?’’ என்று கேட்டார். அதற்குப் பணியாளர், ‘‘ஐயா, அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா? அவர் வேறு யாருமல்ல, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துதான். நம்முடைய ஆராதனை எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்த்துவிட்டு, மிகுந்த மனவேதனையோடு பெருமூச்சு விட்டபடி வெளியே சென்றார்’’ என்று பதிலளித்தார்.

இந்தச் செய்தி அங்கிருந்த அனைவரின் காதுகளுக்கும் எட்டியது. தாங்கள் நடத்திக் கொண்டிருந்த ஆராதனையை நினைத்து அனைவரும் மனம் வருந்தினர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த ஆலயத்தின் ஆராதனையில் உண்மையான மாற்றம் ஏற்பட்டது. பாடல்கள் வெறும் குரல்களின் வெளிப்பாடாக இல்லாமல், உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்தன. ஜெபங்கள் உதடுகளின் வார்த்தைகளாக இல்லாமல், இருதயத்தின் உணர்வுகளாக மாறின.

செய்திகளைப் படி

பிரசங்கங்கள் மனித ஞானத்தையும் சொல்வன்மையையும் சார்ந்திராமல், பரிசுத்த ஆவியின் வல்லமையோடு ஒலிக்கத் தொடங்கின. அந்தச் சபையின் மூலம் மக்களின் வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் நல்ல மாற்றங்கள் உருவாகின. அன்பும் ஐக்கியமும் பெருகின. மக்களின் வாழ்வில் நம்பிக்கையும் புதிய வெளிச்சமும் தோன்றின.

இறைமக்களே! இயேசு கிறிஸ்து நம்முடைய ஆலயத்திற்கு மட்டுமல்ல, நம்முடைய வீடுகளுக்கும் வருகை தருகிறவராக இருக்கிறார். நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும், நமது ஒவ்வொரு நினைவுகளையும் அவர் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். மனிதர்களுடைய பாராட்டைப் பெறுவதற்காக அல்ல, தேவனுடைய பிரியத்தைப் பெறுவதற்காக நமது ஆராதனையும் வாழ்க்கையும் அமைய வேண்டும். வெளிப்புற அலங்காரங்களைவிட உள்ளத்தின் உண்மையும் அர்ப்பணிப்புமே தேவனுக்கு முக்கியமானவை.

“என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் வல்லமையினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.” (1 கொரிந்தியர் 2:5) என அப். பவுல் இறைவேதாகமத்தில் குறிப்பிடுகிறார். எனவே நயவசனிப்பை தூக்கியெறிந்துவிட்டு, மெய்வாழ்க்கை வாழப் பழகுவோம்.

– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்

Post navigation

Previous: PASTOR: THE BIBLICAL DUTIES OF A FAITHFUL SHEPHERD
Next: நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

இதையும் படிக்கலாம்

unexpected_time
  • தியான செய்திகள்

நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

Editorial Team November 10, 2026
a caring mind
  • தியான செய்திகள்

அக்கறையுள்ள மனம்

Editorial Team November 2, 2026
Oviyam
  • தியான செய்திகள்

இருப்பதைக் கொண்டு முயற்சி செய்யுங்கள்!

Editorial Team November 2, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Mary of bethaney
  • வேதாகம மனிதர்கள்

மரியாள் – இயேசுவின் பாதத்தில் அமர்ந்த பெண்

Editorial Team October 26, 2026
யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன் job
  • வேதாகம மனிதர்கள்

யோபு – எல்லாவற்றையும் இழந்தும் தேவனை நம்பிய மனிதன்

October 26, 2026
எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? Ethiopian eunuch
  • வேதாகம மனிதர்கள்

எத்தியோப்பிய மந்திரி யார்? அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?

October 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

unexpected_time
  • தியான செய்திகள்

நேரத்தின் அருமை அறிந்து செயல்படுங்கள்

Editorial Team November 10, 2026
உற்றுக் கவனிக்கும் தேவன்
  • தியான செய்திகள்

உற்றுக் கவனிக்கும் தேவன்

Editorial Team November 10, 2026
pastor
  • தகவல்கள்

PASTOR: THE BIBLICAL DUTIES OF A FAITHFUL SHEPHERD

Editorial Team November 10, 2026
Arunachal
  • இந்தியா

பழங்குடியினர் கிறிஸ்தவர்களின் வகைப்பாடு: எஸ்பிஐ வங்கியிடம் அருணாச்சல கிறிஸ்தவ அமைப்பு முறையீடு

Editorial Team November 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.