Skip to content
October 8, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • இயலாமையை வென்ற வீரன்
  • தியான செய்திகள்

இயலாமையை வென்ற வீரன்

Editorial Team July 8, 2026 1 minute read
tn_6

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த ஒரு தம்பதியருக்கு, 1982-ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்தப் பிறப்பு மகிழ்ச்சியை விட வேதனையையே அதிகமாகக் கொண்டு வந்தது. காரணம், அந்தக் குழந்தை இரண்டு கைகளும், இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்திருந்தது. இவ்வாறான நிலையைப் பார்த்த பெற்றோர் மனமுடைந்து கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

ஆனால் காலப்போக்கில் அவர்கள் தங்கள் மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு, இறைநம்பிக்கையுடன் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொண்டனர். “இவனது வாழ்க்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது” என்ற நம்பிக்கையுடன், அந்தக் குழந்தைக்கு “நிக் உஜிசிக்” என்று பெயர் வைத்தனர். நிக் உஜிசிக்கிற்கு கைகளோ கால்களோ இல்லாத நிலையில், இடுப்புப் பகுதியில் சிறிய இரு விரல்கள் போன்ற அமைப்பு மட்டுமே இருந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த இரண்டு விரல்களையும் பிரித்து, அவனுக்குச் சிறிதளவு இயங்கும் திறனை வழங்கினர்.

பிற குழந்தைகள் ஓடி விளையாடும் வயதில், நிக் வீட்டின் ஒரு மூலையில் அசைவற்ற நிலையில் இருந்தான். வளர வளர, “ஏன் நான் இப்படி பிறந்தேன்?” என்ற கேள்வி அவனது மனதை அடிக்கடி வாட்டியது. உடல் வலியைவிட மன வேதனையே அதிகமாக இருந்தது.

அவனை பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்றபோது, பல பள்ளிகள் அவனை ஏற்க மறுத்தன. இறுதியில் நீதிமன்றத் தின் உதவியால் தான் அவனுக்கு கல்வி கிடைத்தது. ஆனால் பள்ளி வாழ்க்கையும் எளிதானதாக இருக்கவில்லை. நண்பர்கள் அவனுடன் பழகத்தயங்கினர். சில மாணவர்கள் அவனது தோற்றத்தை கேலி செய்தனர். இகழ்ச்சியும் அவமானமும் அவனை ஆழமாக காயப்படுத்தின.

ஒரு கட்டத்தில், அவன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தான். குளிக்கும் தண்ணீர் தொட்டியில் தற்கொலை செய்ய முயன்றான். ஆனால் அவன் பெற்றோர் அவனை காப்பாற்றினர். அப்போது அவர்கள் கூறிய வார்த்தைகள் அவனது வாழ்க்கையை மாற்றின.

“மகனே, நீ பிறந்ததற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்ற இறைவனை நம்பி ஜெபிக்க வேண்டும்.” இந்த வார்த்தைகள் நிக் உஜிசிக்கின் மனதில் நம்பிக்கையின் விதையை விதைத்தன.

நிக் உஜிசிக், இயேசு கிறிஸ்துவின் மேல் ஆழமான விசுவாசத்தை வைத்திருந்தார். அந்த விசுவாசமும், உறுதியான மனவலிமையும் அவருடைய வாழ்க்கையை மாற்றியமைத்தன. அவர் தன்னை இரக்கத்துக்குரியவராக அல்ல, திறமையுள்ள வராகக் காணத் தொடங்கினார்.

அவரது நடையில் நம்பிக்கை தோன்றியது. பேச்சில் தைரியம் வந்தது. ஒருகாலத்தில் அவமானம் சந்தித்த அதே பள்ளியில் அவர் மாணவர் தலைவராக உயர்ந்தார். பின்னர் கல்லூரியில் சேர்ந்தபோது அங்கும் திறமையுடன் விளங்கி, கணக்கியல் துறையில் பட்டம் பெற்றார். உடலில் கைகள், கால்கள் இல்லாவிட்டாலும், அவர் வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, பல சாதனைகளை நிகழ்த்தினார்:

· நீச்சல் போட்டிகளில் பங்கேற்றார்
· ஸ்கேட்டிங் கற்றார்
· செயற்கை கை உதவியுடன் வாகனம் ஓட்டினார்.
· தனது சிறிய விரல்களுக்கிடையில் பேனா வைத்து எழுதவும் ஓவியம் வரையவும் கற்றார்.
· கணினியில் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் தட்டச்சு செய்தார்.
· இசைக்கருவிகளை வாசித்தார்.
· உலகம் முழுவதும் பயணம் செய்து, உரைகள் வழங்கினார்.

ஒருகாலத்தில் “இவரால் என்ன செய்ய முடியும்?” என்று கேலி செய்த உலகமே, பின்னர் “இவரைப் போல எப்படி வாழலாம்?” என்று கற்றுக்கொள்ளத் தொடங்கியது.

திருமணம் செய்யத் தகுதியே இல்லை என்று பலர் நினைத்த நிக் உஜிசிக், பின்னர் கானே மியாகரா என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இன்று அவர் நான்கு குழந்தைகளின் தந்தையாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
ஒருகாலத்தில் விரக்தியின் எல்லையில் நின்றவர், இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் மனிதராக உயர்ந்துள்ளார். பல நாடுகளுக்கு பயணம் செய்து, லட்சக்கணக்கான மக்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சிகளை வழங்கியுள்ளார்.

அவர் எங்குச் சென்றாலும் ஒரு சவாலை முன்வைக் கிறார்: “என்னால் முடிந்தால், உங்களால் ஏன் முடியாது?”

இறைமக்களே, நீங்கள் உங்கள் தோற்றத்தைப் பற்றியோ, உங்கள் இயலாமைகளைப் பற்றியோ, உங்கள் குடும்ப சூழ்நிலையைப் பற்றியோ கவலைப்படுகிறீர்களா? “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத்தேயு 6:27)

கவலைப்படுவது எந்த மாற்றத்தையும் உருவாக்காது. ஆனால் நம்பிக்கையும் முயற்சியும் வாழ்க்கையை மாற்றும். உங்களிடம் இல்லாதவற்றை எண்ணி துவள வேண்டாம். உங்களிடம் உள்ளவற்றை அறிந்து வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பலவீனங்களை பலமாக மாற்றும் வழிகளைத் தேடுங்கள்.

“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்துக் கொண்டு, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்” (1 சாமுவேல் 2:8)

ஆகையால், தேவனை நம்புங்கள், சோர்ந்து போகாமல் தொடர்ந்து செயல்படுங்கள். நிச்சயம், நீங்கள் சாதிப்பீர்கள். இயலாமை ஒரு முடிவு அல்ல, அது ஒரு தொடக்கம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தியாகத்தின் உயர்வு
Next: பெற்றோரின் மதிப்பு

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.