Skip to content
August 24, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • அரை அறிவின் அபாயம்
  • தியான செய்திகள்

அரை அறிவின் அபாயம்

Editorial Team July 9, 2026 1 minute read
tn_22

ஒரு விமான நிலையத்தில் துப்பரவுப் பணியில் இருந்த ஒருவர், ஒரு நாள் வழக்கம்போல் தனது பணியைச் செய்து கொண்டிருந்தார். அந்த நாள் அவர் சுத்தம் செய்ய வேண்டிய இடம் ஒரு பெரிய விமானம். வேலை செய்து கொண்டிருந்த போது, விமானியின் அறையில் கிடந்த ஒரு புத்தகம் அவரது கவனத்தை ஈர்த்தது. ஆர்வம் கொண்ட அவர் அதை எடுத்து பார்த்தார். அந்த புத்தகத்தின் தலைப்பு அவரை மிகவும் ஆச்சரியப்படுத்தியது: “விமானம் ஓட்டுவது எப்படி? ஆரம்பநிலை மாணவர்களுக்கானது.”

“இதை கொஞ்சம் பார்த்தால் என்ன ஆகும்?” என்ற சின்ன ஆர்வம், அவரை அந்த புத்தகத்தைத் திறக்கத் தூண்டியது. முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது: “விமானத்தை இயக்க சிவப்பு பொத்தானை அழுத்தவும்.” அவர் யோசிக்காமல் அந்த பொத்தானை அழுத்தினார். உடனே விமானத்தின் இயந்திரம் இயங்கத் தொடங்கியது. அது அவருக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. “இது ரொம்ப எளிது போல இருக்கே!” என்ற எண்ணம் அவருள் எழுந்தது.

அவர் அடுத்த பக்கத்தைத் திறந்தார். அதில்:

“விமானத்தை நகர்த்த நீல பொத்தானை அழுத்தவும்” என்று இருந்தது. அதையும் அவர் தயக்கமின்றி அழுத்தினார். விமானம் மெதுவாக நகரத்தொடங்கியது. இப்போது அவருக்கு தன்னம் பிக்கை அதிகரித்தது. “நான் இதையும் செய்ய முடிகிறதே!” என்று பெருமை கொண்டார்.

மூன்றாவது பக்கத்தைத் திறந்தார். அதில்: “விமானத்தை பறக்கச் செய்ய பச்சை பொத்தானை அழுத்தவும்” என்று இருந்தது. சிறிதும் சிந்திக்காமல் அவர் அந்த பொத்தானை யும் அழுத்தினார். சில நொடிகளில் விமானம் தரையை விட்டு மேலெழுந்து வானில் பறக்கத் தொடங்கியது. அந்த தருணத்தில் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் மூழ்கினார். “விமானம் ஓட்டுவது இவ்வளவு சுலபமா?” என்று எண்ணினார்.

ஆனால் சில நேரம் கழித்து, ஒரு முக்கியமான உண்மை அவருக்கு நினைவுக்கு வந்தது. “இப்போது இந்த விமானத்தை தரையிறக்க வேண்டும்!” என்று எண்ணினார். அதற்காக அவர் புத்தகத்தின் அடுத்த பக்கத்தைத் திறந்தார். அதில் எழுதப்பட்டிருந்தது: “விமானத்தை எவ்வாறு தரையிறக்கு வது என்பதை அறிய, பகுதி 2 புத்தகத்தைப் படிக்கவும்.”

அந்த ஒரு வரி அவரை அதிர்ச்சியடையச் செய்தது. இப்போது அவர் வானில் பறந்து கொண்டிருக்கிறார்; ஆனால் அதை கீழே இறக்குவது எப்படி என்று தெரியவில்லை! சில நொடிகளில் அவரது மகிழ்ச்சி பயமாக மாறியது. அவர் திகைத்துப் போனார். ஒரு சின்ன ஆர்வம், ஒரு சிறிய முயற்சி இப்போது ஒரு பெரிய ஆபத்தாக மாறிவிட்டது.

இறைமக்களே, இந்தச் சம்பவம் சிரிப்புக்குரியதாகத் தோன்றலாம். ஆனால் அதில் மறைந்திருக்கும் உண்மை மிகவும் ஆழமானது. “அரை அறிவு அபாயகரமானது.” ஒரு காரியத்தை முழுமையாக அறியாமல் தொடங்குவது, ஆரம்பத் தில் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் தோன்றலாம். ஆனால் அதன் முடிவில் அது நம்மை சிக்கலில் தள்ளிவிடும்.

இன்றைய உலகில், பலர் சிறிதளவு அறிவைப் பெற்ற வுடன் அதை முழுமையான அறிவாக நினைத்து செயல்படு கின்றனர். இணையம், சமூக ஊடகங்கள், விரைவான தகவல்கள் இவை எல்லாம் நமக்கு ஒரு பகுதி அறிவை மட்டும் தருகின்றன. ஆனால் அந்த அறிவை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டால், அது தவறான முடிவுகளுக்கும் தோல்விகளுக்கும் வழிவகுக்கும்.

`இதனால் தான் வாழ்க்கையில் விவேகமும் நிதானமும் மிகவும் அவசியம். நாம் எந்த முடிவையும் எடுக்கும் முன், அதன் தொடக்கத்தை மட்டும் அல்ல, அதன் முடிவையும் சிந்திக்க வேண்டும். இதைத்தான் இறைவேதம் கூறுகிறது: “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது” (பிரசங்கி.7:8). மேலும், “விவேகம், நியாயம், நிதானம் ஆகியவற்றை அறிய” (நீதி. 1:3) என்று அறிவுறுத்துகிறது.

இந்த வசனங்கள் நமக்கு ஒரு தெளிவான வழிகாட்டு தலை தருகின்றன. அவசரமாக முடிவு எடுக்க வேண்டாம். முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். அனுபவமுள்ளவர் களிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒரு காரியத்தின் எல்லா பரிமாணங்களையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

வாழ்க்கையில் நாம் இதை எப்படி பயன்படுத்தலாம்? நாம் எந்த செயலும் செய்யும் முன், அதைப் பற்றி முழுமை யாக கற்றுக்கொள்ள வேண்டும். அதன் விளைவுகளை முன்கூட்டியே சிந்திக்க வேண்டும். தேவையானால் அனுபவ முள்ளவர்களிடம் கேட்க வேண்டும். முக்கியமாக, தேவனின் ஞானத்தை நாட வேண்டும்.

முடிவாக, அரை அறிவு ஒருவரை உயரத்திற்கு கொண்டு செல்லலாம்; ஆனால் பாதுகாப்பாக இறக்க முடியாது. முழுமையான அறிவும், நிதானமான சிந்தனையும், தேவனின் வழிகாட்டுதலும் இருந்தால் தான் வாழ்க்கை பாதுகாப்பாக முன்னேறும்.

ஆகையால், தொடங்குவதற்கு முன் சிந்திப்போம். செய்வதற்கு முன் அறிந்துகொள்வோம். அப்பொழுது தான் நம்முடைய பயணம் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நிறைவடையும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: நடப்பதெல்லாம் நன்மைக்கே!
Next: அன்பு கொடுக்கும் மரம்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?
  • கேள்வி பதில்கள்

யூதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் இயேசு மன்னித்திருப்பாரா?

Editorial Team August 24, 2026
அந்நிய பாஷை உண்மையா?
  • கேள்வி பதில்கள்

அந்நிய பாஷை உண்மையா?

Editorial Team August 24, 2026
Jonah
  • தலைப்பு பிரசங்கங்கள்

யோனா புத்தகத்தில் தேவன் பயன்படுத்திய காரியங்கள் (சூழ்நிலை)

Editorial Team August 24, 2026
true-worship
  • வேதபகுதி பிரசங்கங்கள்

ஆகூரின் இரண்டு மனுக்கள்

Editorial Team August 24, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.