Skip to content
October 9, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • விமர்சனத்தை வெல்வதுஒரு கலை
  • தியான செய்திகள்

விமர்சனத்தை வெல்வதுஒரு கலை

Editorial Team July 10, 2026 1 minute read
tn_24

ஒரு பொதுக்கூட்டத்தில், ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் உரையாற்றிக் கொண்டிருந்தார். தனது நாட்டின் நலனுக்காக தீவிரமாகவும் உற்சாகமாகவும் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், எதிர்க் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எழுந்து, அவரை அவமானப்படுத் தும் நோக்கத்துடன் பேசத் தொடங்கினார். அவர் நையாண்டி யுடன் கூறினார்.

“மிஸ்டர் லிங்கன், உங்கள் தந்தை தைத்துச் கொடுத்த செருப்பு தான் இன்னும் என் காலில் இருக்கிறது!” அந்த வார்த்தைகள் கேட்க, அங்கிருந்த பலரும் சிரித்தனர். அந்த சூழ்நிலையில், யாரும் திகைத்தோ, கோபப்பட்டோ பதிலளித்திருப்பார்கள். ஆனால் லிங்கன் அமைதியாக எழுந்து நிதானமாக பேசத் தொடங்கினார்.

அவர் மெதுவாகச் சொன்னார்: “அன்பு நண்பரே, என் தந்தை இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் தைத்துச் கொடுத்த செருப்பு இன்னும் உங்கள் காலில் இருக்கிறது என்றால், அது எவ்வளவு திறமையுடனும் நேர்த்தியுடனும் தைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள். அது அவரது உழைப்பின் சிறப்பை வெளிப்படுத்துகிறது.” பின்னர் சிறிது இடைவெளி வைத்து, “ஒருவேளை அந்தச் செருப்பில் ஏதாவது குறை இருந்தால், தயவுசெய்து என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதைச் சரி செய்து தருகிறேன். ஏனெனில், எனக்கு நாட்டை ஆளவும் தெரியும்; செருப்புத் தைக்கவும் தெரியும்” என்று கூறினார். இந்த பதிலை கேட்ட அனைவரும் மௌனமடைந்தனர். ஒரு அவமானமாக இருந்த சூழ்நிலை, ஒரு கௌரவமான தருணமாக மாறியது. லிங்கன் விமர்சனத்தை எதிர்த்து சண்டையிடவில்லை; அதை அறிவால் வென்றார்.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கிய மான உண்மையை உணர்த்துகிறது: விமர்சனங்களை சமாளிப்பது ஒரு கலை. வாழ்க்கையில் பாராட்டுகளை ஏற்க கற்றுக்கொள்வது எளிது; ஆனால் விமர்சனங்களை தாங்கிக் கொண்டு, அதை சரியாக எதிர்கொள்வது சுலபமல்ல. பலர் விமர்சனங்களால் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். சிலர் தாழ்வு மனப்பான்மையில் விழுந்துவிடுகிறார்கள். சில நேரங்க ளில் அது உறவுகளை பாதிக்கவும், வாழ்க்கை முன்னேற்றத் தை தடுக்கவும் காரணமாகிறது.

ஆனால் உண்மையில், விமர்சனம் என்பது எப்போதும் தீமையானது அல்ல. சில நேரங்களில் அது நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு கருவியாக இருக்கும். அது நம்முடைய குறைகளை காட்டும் கண்ணாடியாக இருக்கும். மேலும், நாம் ஏதோ முக்கியமான ஒன்றைச் செய்கிறோம் என்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். ஏனெனில், எதையும் செய்யாதவர்களை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். செயலில் இருப்பவர்களே விமர்சனத்திற்குள்ளாகிறார்கள். அதே நேரத்தில், எல்லா விமர்சனங்களும் உண்மையில்லை. சில விமர்சனங் கள் பிறரின் பொறாமை, இயலாமை அல்லது எதிர்ப்பு மனநிலையிலிருந்து வருகிறது. ஒருவர் செய்ய முடியாததை மற்றொருவர் சாதித்தால், அந்த சாதனையை ஏற்றுக்கொள்ள முடியாமல், அது விமர்சனமாக வெளிப்படும். எனவே, விமர்சனத்தின் பின்னால் உள்ள உண்மையை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

வாழ்க்கையில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? முதலில், விமர்சனங்களை பயப்படக் கூடாது. அதை அமைதி யாகக் கேட்க கற்றுக்கொள்ள வேண்டும். அதில் உண்மை இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். தேவையற்ற விமர்சனங்களை மனதில் வைத்துக் கொள்ளா மல் விடுத்துவிட வேண்டும். முக்கியமாக, எப்போது பதிலளிக்க வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

இறைவேதமும் இதே சமநிலையை நமக்கு கற்றுக்கொடுக்கிறது: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து கேட்கிறவர்களுக்கு சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல ஆயத்தமாயிருங்கள்” (1 பேது. 3:15). அதே நேரத்தில், “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே” (நீதிமொழிகள் 26:4) என்று எச்சரிக்கிறது.

இந்த இரண்டு வசனங்களும் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை சொல்லுகின்றன: எல்லா சூழ்நிலைகளிலும் ஒரே மாதிரியான பதில் தேவையில்லை. சில நேரங்களில் பேசுவது ஞானம்; சில நேரங்களில் மௌனம் தான் ஞானம்.

இன்றைய உலகில், குறிப்பாக சமூக வலைத்தளங்க ளில், விமர்சனங்கள் அதிகமாகிவிட்டன. யாரும் யாரையும் எளிதில் குறை சொல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, நிதானமாக பதிலளிப்பது மிகவும் அவசியம். உணர்ச்சியில் கொடுக்கப்படும் பதில்கள் பெரும்பாலும் பிரச்சினையை அதிகரிக்கும்; ஆனால் ஞானத்துடன் கொடுக்கப்படும் பதில் பிரச்சினையை தீர்க்கும்.

முடிவாக, விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது; ஆனால் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதே முக்கியம். விமர்சனத்தை சண்டையாக மாற்றலாம்; அல்லது அதை ஒரு வாய்ப்பாக மாற்றலாம். கிதீக்ஷீணீலீணீனீ லிவீஸீநீஷீறீஸீ அதை ஒரு வாய்ப்பாக மாற்றி, தனது உயர்ந்த மனநிலையை வெளிப்படுத்தினார். நாமும் அதைப் போல வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

எங்கே பேச வேண்டும், எங்கே மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் வாழ்க்கையை வெல்லக் கற்றவன்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: நாவு என்னும் ஆயுதம்
Next: மனவியாதிக்கு தீர்வு வேண்டும்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

king
  • வேதாகம மனிதர்கள்

சவுல் – இஸ்ரவேலின் முதல் ராஜா

Editorial Team October 5, 2026
சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன் samson
  • வேதாகம மனிதர்கள்

சிம்சோன் – பலம் இருந்தும் பலவீனத்தில் விழுந்தவன்

September 28, 2026
கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன் Gideon
  • வேதாகம மனிதர்கள்

கிதியோன் – பயந்த மனிதனைப் பயன்படுத்திய தேவன்

September 28, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

Watchman Nee
  • கவிதைகள்

ஜெபமும் ஆவிக்குரிய போராட்டமும் குறித்து 10 ஆழமான கருத்துகள்

Editorial Team October 8, 2026
women touch jesus
  • வேதபகுதி பிரசங்கங்கள்

தொட்டால் போதும் — விசுவாசம் விடுதலையைப் பெற்றது!

Editorial Team October 7, 2026
caananite women
  • வேதபகுதி பிரசங்கங்கள்

விடாமல் மன்றாடு — விசுவாசம் விடை பெறும்!

Editorial Team October 7, 2026
forgiveness
  • தலைப்பு பிரசங்கங்கள்

மன்னியுங்கள்; விடுதலை பெறுங்கள்!

Editorial Team October 7, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.