Skip to content
July 10, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • நாவு என்னும் ஆயுதம்
  • தியான செய்திகள்

நாவு என்னும் ஆயுதம்

Editorial Team July 10, 2026 1 minute read
tn_23

ஒரு குருவுக்கு பேரழகும் நற்குணமும் கொண்ட ஒரு மகள் இருந்தாள். அவளுக்குத் திருமணம் செய்ய பலரும் விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் தங்களது திறமை, செல்வம், அறிவு ஆகியவற்றைக் காட்டி, அந்த மகளை மணக்க வேண்டும் என்று போட்டியிட்டனர். யாரைத் தேர்ந்தெ டுப்பது என்ற குழப்பத்தில் இருந்த குரு, ஒரு சிந்தனைக் குரிய சவாலை முன்வைத்தார். “நான் இரண்டு கேள்விகள் கேட்பேன்; அதற்கு சரியான பதில் கூறுபவருக்கே என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பேன்” என்று அறிவித் தார். இந்த சவாலை கேட்ட அனைவரும் ஆர்வத்துடன் சம்மதித்தனர்.

மறுநாள் அனைவரும் குருவின் வீட்டில் கூடியிருந்த னர். குரு முதல் கேள்வியை முன்வைத்தார்: “உலகிலேயே இனிமையான பொருளை கொண்டு வாருங்கள்.” அடுத்த நாள், ஒவ்வொருவரும் தங்கள் எண்ணத்தில் இனிமையான தாக கருதிய பொருட்களை கொண்டு வந்தனர். ஒருவர் தேனை கொண்டு வந்தார்; இன்னொருவர் கரும்பைக் கொண்டு வந்தார்; சிலர் பலவிதமான பழங்களையும் இனிப்புகளையும் கொண்டு வந்தனர். ஒவ்வொருவரும் தங்களது தேர்வு தான் சிறந்தது என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

அந்த நேரத்தில், குருவின் ஏழை சீடன் அமைதியாக நின்றிருந்தான். அவனைப் பார்த்த குரு ஆச்சரியத்துடன், “நீயும் இந்தப் போட்டியில் கலந்து கொண்டாயா?” என்று கேட்டார். அதற்கு அவன் பணிவுடன், “ஆமாம் குருவே, நான் உங்கள் மகளை நேசிக்கிறேன்” என்று பதிலளித்தான். குரு அவனை நோக்கி, “சரி, நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்?” என்று கேட்டார். சீடன் மெதுவாக ஒரு சிறிய பெட்டியைத் திறந்தான். அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.

அதைப் பார்த்த குரு குழப்பமடைந்தார். “இது என்ன? ஏன் இதை கொண்டு வந்தாய்?” என்று கேட்டார். சீடன் அமைதியாகப் பதிலளித்தான்: “குருவே, உலகிலேயே இனிமை யானது நாவே. நாவிலிருந்து வரும் இனிய வார்த்தைகள் மனிதர்களின் மனதை குணப்படுத்துகின்றன. துயரத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாகின்றன; உடைந்த உறவுகளை இணைக்கின்றன; நம்பிக்கையை உருவாக்குகின்றன. மனித னுடைய நாவை கொண்டு வர முடியாததால், அதன் அடையா ளமாக இந்த ஆட்டின் நாவை கொண்டு வந்தேன்.” இந்த ஆழமான பதிலை கேட்ட குரு மிகவும் மகிழ்ந்து, “நீ உண்மையிலேயே சரியான பதிலை அளித்துள்ளாய்” என்று பாராட்டினார்.

பின்னர் குரு இரண்டாவது சோதனையை அறிவித்தார்: “உலகிலேயே மிகவும் கசப்பான பொருளை கொண்டு வாருங் கள்.” மறுநாள் அனைவரும் மீண்டும் தங்கள் பதில்களுடன் வந்தனர். ஒருவர் வேப்பங்காயை கொண்டு வந்தார்; மற்றொரு வர் கசப்பான காய்களை கொண்டு வந்தார்; ஒவ்வொருவரும் தங்கள் தேர்வை முன்வைத்தனர். கடைசியாக அந்த சீடன் மீண்டும் வந்தான். அவன் கையில் இருந்த பெட்டியைத் திறந்தான். அதனுள் மீண்டும் அதே ஆட்டின் நாக்கு இருந்தது.

இதைக் கண்ட குரு சற்று கோபமடைந்து, “இது என்ன? இனிமையானதற்கும் இதையே கொண்டு வந்தாய். இப்போது கசப்பானதற்கும் இதையே கொண்டு வந்திருக்கி றாயே? இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டார். அதற்கு சீடன் அமைதியாகப் பதிலளித்தான்: “குருவே, தீய வார்த்தை களைப் பேசும் நாவை விட உலகில் கசப்பானது எதுவும் இல்லை. அதிலிருந்து வரும் வார்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் துயரப்படுத்துகின்றன; நண்பர்களை பகைவர்களாக மாற்றுகின்றன; உறவுகளை உடைக்கின்றன; மனங்களை காயப்படுத்துகின்றன. ஆகவே நாவே உலகிலேயே மிகவும் கசப்பானதும் ஆகும்.”

இந்த பதிலை கேட்ட குரு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். சீடனின் ஞானத்தையும் வாழ்க்கைப் புரிதலையும் கண்டு அவர் மகிழ்ந்து, தனது மகளை அவனுக்கே திருமணம் செய்து வைத்தார்.

இறைமக்களே, இந்தக் கதை நமக்கு ஒரு மிகப் பெரிய உண்மையை உணர்த்துகிறது. நாவு என்பது சிறிய உறுப்பாக இருந்தாலும், அதன் தாக்கம் அளவிட முடியாதது. அது ஆசீர்வாதங்களையும் தர முடியும்; அதே நேரத்தில் அழிவையும் ஏற்படுத்த முடியும். ஒரு இனிய வார்த்தை உடைந்த மனதை குணப்படுத்தும்; ஒரு கடுமையான வார்த் தை உறவுகளை முறித்துவிடும். மனிதர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கும் சக்தி நாவுக்கு உண்டு.

இறைவேதமும் இதையே வலியுறுத்துகிறது: “தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்” (நீதி 21:23).

நாம் பேசும் வார்த்தைகள் நமது வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கின்றன. ஆகையால், பேசுவதற்கு முன் சிந்திக்க வேண்டும்; நமது வார்த்தைகளில் இனிமையை வளர்க்க வேண்டும்; பிறரை காயப்படுத்தும் சொற்களை தவிர்க்க வேண்டும்; நமது நாவை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.

முடிவாக, நாவு ஒரு அற்புதமான வரம். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதே நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. நாவை காக்கிறவன் தனது வாழ்க்கையையும் உறவுகளையும் காக்கிறான். ஆகையால், இனிமையான வார்த்தைகளை விதைத்து, நல்ல உறவுகளை அறுப்போம்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: இலவசமான சொர்க்கம்
Next: விமர்சனத்தை வெல்வதுஒரு கலை

இதையும் படிக்கலாம்

tn_31
  • தியான செய்திகள்

ஆழமே உயரத்தின் அடித்தளம்

Editorial Team July 10, 2026
tn_30
  • தியான செய்திகள்

காணாத கயிறுகள்

Editorial Team July 10, 2026
tn_29
  • தியான செய்திகள்

உறவுகளை காக்கும் ஆற்றல்

Editorial Team July 10, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_31
  • தியான செய்திகள்

ஆழமே உயரத்தின் அடித்தளம்

Editorial Team July 10, 2026
tn_30
  • தியான செய்திகள்

காணாத கயிறுகள்

Editorial Team July 10, 2026
tn_29
  • தியான செய்திகள்

உறவுகளை காக்கும் ஆற்றல்

Editorial Team July 10, 2026
tn_28
  • தியான செய்திகள்

அடையாளத்தை அறியாத கழுகு

Editorial Team July 10, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.