Skip to content
August 26, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • கிறிஸ்துமஸ் உணர்த்தும் பாடம்
  • தியான செய்திகள்

கிறிஸ்துமஸ் உணர்த்தும் பாடம்

Editorial Team July 13, 2026 1 minute read
tn_41

ஒரு சிறிய நகரத்தில், ஒரு இளம் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய வாழ்க்கை மிக எளிமையானது. அவர்கள் வசதியாக வாழவில்லை; ஆனால் அவர்கள் கொண்டி ருந்த அன்பு எந்தச் செல்வத்தையும் விட உயர்ந்தது. அவர்களிடம் அதிக பணம் இல்லை. சில நேரங்களில் தேவை களை கூட பூர்த்தி செய்ய சிரமப்பட்டனர். இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த அக்கறையுட னும், உண்மையான பாசத்துடனும் வாழ்ந்தனர். அவர்களுடைய வாழ்க்கையில் செல்வம் குறைந்திருந்தாலும், அன்பு மிகுந்தி ருந்தது.

கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பண்டிகை காலம் அவர்களுடைய இதயத்தில் ஒரு இனிய உணர்வை உருவாக்கியது. அவர்கள் இருவரும் ஒரே எண்ண த்தில் இருந்தனர் “நான் என் வாழ்க்கைத் துணைக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?” பணம் இல்லாததால் அவர்கள் தளர வில்லை. மாறாக, அவர்களுடைய அன்பு இன்னும் ஆழமான சிந்தனையை உருவாக்கியது. அவர்கள் கொடுக்க விரும்பிய பரிசு, ஒரு சாதாரண பொருள் அல்ல; அது அவர்களின் அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை நிரப்பியது.

டெல்லா தனது கணவன் ஜிம் மீது கொண்டிருந்த அன்பை நினைத்து, ஒரு கடினமான முடிவை எடுத்தாள். அவளுடைய நீளமான, அழகான கூந்தல் அவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. அது அவளுடைய அழகின் அடையாளமாகவும், அவளுடைய தனிப்பட்ட செல்வமாகவும் இருந்தது. ஆனால் அன்பிற்காக, அவள் அதை விட்டுக் கொடுக்கத் தயங்கவில்லை. அவள் தனது கூந்தலை விற்றாள். அந்தத் தொகையைப் பயன்படுத்தி, ஜிம் மிகவும் விரும்பி பயன்படுத்தும் தனது குடும்ப பாரம்பரியமான கைக்கடிகாரத்திற்கு ஒரு அழகான பிளாட்டினம் சங்கிலியை வாங்கினாள். அது அவளுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பரிசாக இருந்தது.

அதே நேரத்தில், ஜிம் தனது மனைவி டெல்லாவுக்காக என்ன செய்தான்? அவனும் ஒரு தியாக முடிவை எடுத்தான். அவனுடைய கைக்கடிகாரம் அவனுக்கு மிகவும் முக்கிய மானது. அது அவனுடைய தாத்தாவும் தந்தையும் பயன் படுத்திய நினைவுச் சின்னம். அந்தக் கடிகாரம் அவனுடைய பெருமையும் பாரம்பரியமும் ஆகும். இருந்தாலும், அவன் அதை விற்றுவிட்டான். அந்தப் பணத்தில், டெல்லாவின் அழகான கூந்தலுக்காக அவள் எப்போதும் விரும்பியிருந்த அழகான கிளிப்புகளை வாங்கினான்.

கிறிஸ்துமஸ் காலையில் அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் பரிசுகளை வழங்கினர். அந்த தருணம் மகிழ்ச்சி யால் நிரம்பியிருந்தது. ஆனால் சில நொடிகளில், ஒரு விசித்திரமான உண்மை வெளிப்பட்டது. டெல்லாவுக்கு கூந்தல் இல்லை. ஜிம் கைக்கடிகாரம் இல்லை. அவர்கள் வாங்கிய பரிசுகள், நடைமுறையில் பயனற்றதாகிவிட்டன. ஒரு சங்கிலி இருந்தது ஆனால் அதற்கு கடிகாரம் இல்லை. அழகான கிளிப்புகள் இருந்தன ஆனால் அவற்றைப் பயன்படுத்த கூந்தல் இல்லை.

இந்த நிலைமை வெளிப்படையாக பார்த்தால் ஒரு இழப்பைப் போல தோன்றலாம். ஆனால் உண்மையில் அது ஒரு இழப்பு அல்ல. அது ஒரு பெரிய வெற்றி. ஏனெனில், அவர்கள் கொடுத்த பரிசுகள் பொருளில் அல்ல, அன்பில் அளவிடப்பட வேண்டும். அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய தியாகம், அவர்களின் உறவை இன்னும் உயர்த்தியது. அவர்கள் பொருள்களை இழந்தார்கள்; ஆனால் அவர்கள் அன்பை பெற்றார்கள்.

இந்தக் கதையை எழுத்தாளர் ஓ. ஹென்றி “ஞானிகளின் பரிசு” என்று அழைக்கிறார். ஏன் என்றால், உண்மையான ஞானம் பொருள்களை சேகரிப்பதில் இல்லை; அன்பை பகிர் வதில் உள்ளது. அவர்கள் கொடுத்த பரிசுகள் வெளிப்படை யாக பயனற்றதாக இருந்தாலும், அந்தத் தியாகத்தின் ஆழம் அவர்களை உண்மையான ஞானிகளாக மாற்றியது.

இது நமக்கு ஒரு முக்கியமான உண்மையை கற்றுக் கொடுக்கிறது. தியாகம் என்பது நமக்குக் கிடைத்தவற்றில் சிறிது கொடுப்பது அல்ல. அது நமக்கு தேவையில்லாததைப் பகிர்வதும் அல்ல. மாறாக, நமக்கு மிகவும் மதிப்புமிக்கதை, பிறரின் நலனுக்காக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுப் பதே உண்மையான தியாகம். அன்பு என்பது வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும்.

கிறிஸ்துமஸ் இந்தத்தியாக அன்பை நினைவூட்டும் நாள். தேவன் உலகத்தை இவ்வளவு அன்புகூர்ந்து, தம்முடைய ஒரே குமாரனை அருளினார் என்று வேதாகமம் சொல்லுகிறது. அது உலகில் நடந்த மிகப்பெரிய தியாகம். மனிதர்களுக்காக, அவர்களுடைய பாவங்களுக்காக, இயேசு கிறிஸ்து தம்மையே அர்ப்பணித்தார். உலகில் பிறக்கும் மற்ற குழந்தைகள் வாழ்வதற்காக பிறக்கின்றன. ஆனால் இயேசு கிறிஸ்து மட்டும், பிறருக்காக தன் உயிரை அர்ப்பணிக்கவே பிறந்தார்.

இந்த உண்மையை நாம் சிந்திக்க வேண்டும். நாம் கிறிஸ்துமஸை கொண்டாடுகிறோம். ஆனால் அதன் உண்மை யான அர்த்தத்தை புரிந்துகொள்கிறோமா? உணவு, வெளிப்புற அலங்காரம், பரிசுகள் இவை எல்லாம் நல்லவை. ஆனால் அவை கிறிஸ்துமஸின் மையம் அல்ல. அதன் மையம் அன்பு. அதன் அடித்தளம் தியாகம்.

நாம் நம் வாழ்க்கையில் இந்தத் தியாக அன்பை பிரதிபலிக்க வேண்டும். பிறருக்காக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அன்பை பகிர வேண்டும். உதவி செய்ய வேண்டும். மன்னிக்க வேண்டும். இதுவே கிறிஸ்துமஸின் உண்மையான கொண்டாட்டம்.

முடிவாக, கிறிஸ்துமஸ் என்பது ஒரு பண்டிகை மட்டும் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. அது தியாக அன்பின் வெளிப்பாடு. டெல்லா மற்றும் ஜிம் காட்டிய அன்பு போல, இயேசு கிறிஸ்து காட்டிய அன்பு போல, நாமும் அன்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை உண்மையான அர்த்தத்தை பெறும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: தூய்மை மனதில் வேண்டும்
Next: தீர விசாரிப்பதே மெய்

இதையும் படிக்கலாம்

tn_100
  • தியான செய்திகள்

வெறுமையான வாழ்க்கை

Editorial Team August 6, 2026
tn_99
  • தியான செய்திகள்

மாறும் மனமும், மாறாத தேவனும்

Editorial Team August 5, 2026
tn_98
  • தியான செய்திகள்

நாவைக் காக்க வேண்டும்

Editorial Team August 4, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

joseph
  • வேதாகம மனிதர்கள்

யோசேப்பு — குழியில் தள்ளப்பட்டவன் அரண்மனையில் உயர்ந்த கதை

Editorial Team August 24, 2026
தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன் david
  • வேதாகம மனிதர்கள்

தாவீது — ஆடுகளை மேய்த்த சிறுவனிலிருந்து ராஜாவான மனிதன்

August 24, 2026
ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை tcn_abraham
  • வேதாகம மனிதர்கள்

ஆபிரகாம் – விசுவாசத்தின் தந்தை

August 21, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”
  • சாட்சிகள்

டோனி வால்பெர்க் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்: “எல்லா மகிமையும் அவருக்கே”

Editorial Team August 25, 2026
101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி
  • உலகம்

101 போட்டிகளில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி: “எல்லா மகிமையும் தேவனுக்கே” என தலைமை பயிற்சியாளர் நெகிழ்ச்சி

Editorial Team August 25, 2026
விசித்திரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இங்கிலாந்து போதகர் மீது வழக்குப்பதிவு
  • இந்தியா

விசித்திரமான குற்றச்சாட்டுகளின் கீழ் இங்கிலாந்து போதகர் மீது வழக்குப்பதிவு

Editorial Team August 25, 2026
வெளிநாட்டு நிதி முறைகேடு புகார்: ராஜஸ்தான் போதகருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
  • இந்தியா

வெளிநாட்டு நிதி முறைகேடு புகார்: ராஜஸ்தான் போதகருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Editorial Team August 25, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.