Skip to content
September 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • மனக்காயங்களின் மறுபக்கம்
  • தியான செய்திகள்

மனக்காயங்களின் மறுபக்கம்

Editorial Team July 22, 2026 1 minute read
tn_67

முதுகில் குத்தப்பட்ட முதல் கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். அதில் “நட்பு” என்ற பெயரில் நாடகமாடியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை நான் ஓரளவு முன்கூட்டியே உணர்ந்திருந்தேன். ஆகையால் அந்த வலியை அமைதியாக ஏற்றுக்கொண்டு, மனதை சற்றே அடக்கிக் கொண்டேன்.

இரண்டாவது கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். ஆபத்திலும் அவசரத்திலும் நான் உதவி செய்தவர்களின் பெயர்கள் அதில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. இது எனக்கு முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் என் இதயத் துடிப்பை கட்டுப்படுத்தி, என் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்த முயன்றேன்.

மூன்றாவது கத்தியை பிடுங்கிப் பார்த்தேன். நான் உயர்த்தி வைத்தவர்களும், நேசித்து மதித்தவர்களும் சிரித்த முகத்தோடு என்னை நோக்கிக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சி என் உள்ளத்தை நொறுக்கிவிட்டது. இதயம் உடைந்ததுபோல ஒரு ஆழ்ந்த வலி என்னுள் எழுந்தது.

இறைமக்களே, வாழ்க்கையில் நம்மை காயப்படுத்தும் இத்தகைய மூன்று வகையான அனுபவங்கள் நிச்சயமாக வரும். நட்பின் பெயரில் வரும் துரோகம், நம் நன்மையை மறக்கும் மனிதர்கள், நாம் உயர்த்தியவர்களிடமிருந்து வரும் ஏமாற்றம் இவையனைத்தும் மனதை ஆழமாக காயப்படுத்தக் கூடியவை. ஆகையால் இத்தகைய மனக்காயங்களைப் பற்றி விழிப்புணர்வும் எச்சரிக்கையும் நமக்குத் தேவை.

சொல்லாலும் செயலாலும் காயப்படுத்தப்பட்டவர்கள், தங்கள் மனக்காயங்களை மறைத்து வைக்காமல் அதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த காயங்களுக்கு காரணமான சூழ்நிலைகளையும், அதன் விளைவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். தேவனுடைய உதவியோடும், இறைவேதத்தின் ஆலோசனைகளோடும் அந்த மனக் காயங்களைச் சுகப்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது.

பலரால் ஏமாற்றப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும், அவமானப் படுத்தப்பட்டும், துரோகம் அனுபவித்தும், இழப்புகளாலும் தோல்விகளாலும் மனம் உடைந்திருக்கும் இறைமக்களே, இறைவேதம் நமக்கு ஒரு ஆறுதலான வாக்குறுதியைக் கொடுக்கிறது: “நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 30:17).

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும். அவரோடு நெருக்கமாக இருந்த பன்னிரண்டு சீடர்களில் சீமோன் பேதுருவும் யூதாஸ் காரியோத்தும் முக்கியமானவர்கள். அவர்கள் இயேசு செய்த அற்புதங்களைக் கண்ணாற கண்டவர்கள். அவரோடு உணவு உண்டவர்கள். ஆனால் ஒரு தருணத்தில், யூதாஸ் தனது சுயலாபத்திற்காக இயேசுவைத் துரோகம் செய்தான். பேதுரு பயந்த காரணத்தால் அவரை மறுத்தான்.

ஆனால் அந்த தருணங்களில் இயேசுவின் மனப்பாங்கை கவனித்துப் பாருங்கள். தன்னை விற்றுக் கொடுத்த யூதாஸை அவர் “சிநேகிதனே” என்று அழைத்தார். தன்னை மறுத்த பேதுரு மனந்திரும்பி வந்தபோது, அவரை நிராகரிக்காமல் மீண்டும் ஏற்றுக்கொண்டார். இது தான் ஒரு பக்குவமான மனத்தின் அடையாளம்.

வாழ்க்கை சாலையைப் போன்றது, அதில் பள்ளமும் மேடும் இருக்கும். அதுபோலவே நம் வாழ்க்கையிலும் உயர்வும் தாழ்வும், சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வரும். இந்த எல்லா சூழ்நிலைகளிலும் நமது மனதை சமநிலையுடன் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகையால் இறைமக்களே, மனக்காயங்களை மனதில் வைத்துக்கொண்டு துன்பத்தில் மூழ்காதீர்கள். அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். அவர் மட்டுமே காயங்களை ஆற்றக்கூடியவர். விழிப்புணர்வோடும், ஆன்மீக ஞானத்தோடும், சமநிலையான மனநிலையோடும் வாழ்க்கையை முன்னெடுத்து செல்லுங்கள். அப்போது காயங்கள் கூட உங்களை பலப்படுத்தும் அனுபவங்களாக மாறும்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: வார்த்தையின் ஞானம்
Next: கீழ்ப்படிதலின் பலன்

இதையும் படிக்கலாம்

office plant
  • தியான செய்திகள்

உணர்ச்சிகளில் உயிர் இருக்கிறது

Editorial Team September 14, 2026
Depression
  • தியான செய்திகள்

உண்மை உங்களை காக்கும்

Editorial Team September 8, 2026
அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!
  • தியான செய்திகள்

அன்பான பராமரிப்பும் மனதுக்கு மருந்துதான்!

Editorial Team September 8, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

ruth boaz
  • வேதாகம மனிதர்கள்

போவாஸ் – ஒரு விதவையின் வாழ்க்கையை மாற்றிய உறவினர்!

Editorial Team September 9, 2026
ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை! Rahab
  • வேதாகம மனிதர்கள்

ராகாப் — ஒரு சிவப்பு கயிறு மாற்றிய வாழ்க்கை!

September 9, 2026
யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு Johnathan
  • வேதாகம மனிதர்கள்

யோனத்தான் – தாவீதின் நண்பன்: விசுவாசம், நட்பு மற்றும் தியாகத்தின் வேதாகம வரலாறு

September 1, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

bible
  • உலகம்

ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை: பைபிளை இசையாக மாற்றும் AI-யின் புதிய முயற்சி

Editorial Team September 22, 2026
C.S.Lewis
  • கவிதைகள்

சி.எஸ். லூயிஸ் – கிறிஸ்தவ விசுவாசத்தை ஆழப்படுத்தும் 10 சிந்தனைகள்

Editorial Team September 21, 2026
mother terasa
  • கவிதைகள்

அன்னை தெரசா – அன்பால் உலகைத் தொட்ட கருணையின் தாய்!

Editorial Team September 21, 2026
jim eliot
  • கவிதைகள்

ஜிம் எலியட் – தேவனுக்காக வாழ்ந்த அர்ப்பணிப்பின் வாழ்க்கை!

Editorial Team September 21, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.