Skip to content
July 22, 2026
  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
Tamil Christian Network

Tamil Christian Network

Primary Menu
  • கிறிஸ்தவ செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
  • பிரசங்க குறிப்புகள்
    • தலைப்பு பிரசங்கங்கள்
    • வேதபகுதி பிரசங்கங்கள்
    • வியாக்கியான பிரசங்கங்கள்
    • வேதாகம மனிதர்கள்
    • பிரசங்க கதைகள்
  • தகவல் களஞ்சியம்
    • பாடல் பிறந்த கதை
    • கதைகள்
    • கவிதைகள்
    • கட்டுரைகள்
    • வரலாறுகள்
    • தகவல்கள்
    • சாட்சிகள்
  • தியான செய்திகள்
  • கேள்வி பதில்கள்
Light/Dark Button
Live news
  • Home
  • தியான செய்திகள்
  • கீழ்ப்படிதலின் பலன்
  • தியான செய்திகள்

கீழ்ப்படிதலின் பலன்

Editorial Team July 22, 2026 1 minute read
tn_69

ஒரு காலத்தில் இரண்டு நண்பர்கள் வேலை தேடி ஒரு பெரிய நகரத்துக்கு வந்தார்கள். அவர்களிடம் பணம் இல்லை; எதிர்காலம் பற்றிய எந்த உறுதியும் இல்லை. இருந்தாலும் “ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடும்” என்ற நம்பிக்கையுடன் அவர்கள் நகரத்தின் பல இடங்களில் சுற்றித் திரிந்தனர்.

ஒருநாள் அவர்கள் ஒரு முதலாளியை சந்தித்து வேலை கேட்டார்கள். அந்த முதலாளி இருவரையும் கவனமாகப் பார்த்த பின், அருகிலிருந்த ஒரு கிணற்றைக் காட்டி, “இருவருக்கும் ஆளுக்கொரு வாளி தருகிறேன். இந்தக் கிணற்றிலுள்ள தண்ணீரை முழுவதும் இரைத்து, அடித்தளம் தெரியும் வரை சுத்தமாக்குங்கள்” என்றார்.

அந்த வேலையை கேட்டவுடன் முதல் நண்பனுக்கு சலிப்பு வந்தது. “இதெல்லாம் தேவையில்லாத வேலை. கிணற்றில் எவ்வளவு தண்ணீர் இருக்கும்? இதை இரைத்து என்ன பயன்?” என்று மனதில் நினைத்தான். உடனே அவன் வாளியை ஓரமாக வைத்துவிட்டு, அருகில் இருந்த மரத்தின் கீழ் படுத்து தூங்கிவிட்டான்.

ஆனால் இரண்டாவது நண்பன் வேறுபட்டவன். முதலாளி சொன்னதை அதிகமாக ஆராயவில்லை. “சொன்னதைச் செய்வதே என் கடமை” என்று தீர்மானித்தான். காலை முதல் மாலை வரை சோர்வை பொருட்படுத்தாமல் அவன் தண்ணீரை இரைத்து கொண்டிருந்தான். கைகள் வலித்தன, உடல் களைத்தது; இருந்தாலும் அவன் வேலை நிறுத்தவில்லை.

மாலை நேரத்தில், கிணற்றின் அடிப்பகுதி தென்படத் தொடங்கியது. அப்போது அவன் கண்களில் ஒரு அதிசயம் விழுந்தது. கிணற்றின் அடியில் சில தங்கக் கட்டிகள் மின்னிக் கொண்டிருந்தன. அதை பார்த்தவன் அதிர்ச்சி யடைந்தான். இருந்தாலும் அவன் நேர்மையைத் தழுவி, அந்த தங்கக் கட்டிகளை எடுத்து முதலாளியிடம் கொண்டு சென்று ஒப்படைத்தான்.

அவனுடைய உழைப்பையும் உண்மையையும் கண்டு முதலாளி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவனுக்கு அன்று மட்டும் கூலி கொடுத்ததல்ல; அவனை நிரந்தர வேலையில் அமர்த்தினார். அதோடு, வெகுமதிகளையும் வழங்கி அனைவரின் முன்னிலும் அவனைப் பாராட்டினார்.

இறைமக்களே, இந்தச் சம்பவம் நமக்கு ஒரு முக்கியமான ஆன்மீக உண்மையை கற்பிக்கிறது. தேவன் நமக்கு ஒப்படைக்கும் காரியங்களை நம்பிக்கையுடன் செய்து கொள்வதே கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை. அதில் என்ன பயன் கிடைக்கும், எப்போது ஆசீர்வாதம் வரும் என்று நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கீழ்ப்படிதலுடன் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலையும் தேவன் கவனித்து வருகிறார்.
நாம் பல நேரங்களில் “இதில் என்ன பயன்?” “இதனால் என்ன கிடைக்கும்?” என்று எண்ணி, தேவன் கொடுத்த பொறுப்புகளை அலட்சியப்படுத்துகிறோம். ஆனால் விசுவாச வாழ்க்கையில் கீழ்ப்படிதலே வெற்றிக்கான முதல் படி என்பதை மறந்துவிடக்கூடாது. நமது பொறுப்பு செயலைச் செய்வது; அதன் பலனை அளிப்பது தேவனுடைய பொறுப்பு.

எனவே இறைமக்களே, நமக்குக் கொடுக்கப்பட்ட காரியங்களை சிறியது, பெரியது என்று பிரிக்காமல், உண்மையுடன் செய்ய கற்றுக்கொள்வோம். நாம் விதைக்கும் உழைப்பும் கீழ்ப்படிதலும் ஒருநாளில் பலனாக மாறும். தேவன் சரியான காலத்தில், நாம் எதிர்பார்க்காத விதத்தில் நம்மை உயர்த்துவார்.

– போதகர். பெ. பெவிஸ்டன்

Post navigation

Previous: மனக்காயங்களின் மறுபக்கம்

இதையும் படிக்கலாம்

tn_67
  • தியான செய்திகள்

மனக்காயங்களின் மறுபக்கம்

Editorial Team July 22, 2026
tn_66
  • தியான செய்திகள்

வார்த்தையின் ஞானம்

Editorial Team July 22, 2026
tn_65
  • தியான செய்திகள்

நிராகரிப்பின் மறுபக்கம்

Editorial Team July 22, 2026

பாடல் பிறந்த கதை

tn_halle
  • பாடல் பிறந்த கதை

அல்லேலூயா ஆனந்தமே | பாடல் பிறந்த கதை

Editorial Team July 2, 2026
எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன் blessings
  • பாடல் பிறந்த கதை

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள் – பாடல் பிறந்த கதை | ஆசிரியர் ஜான்சன் ஓட்மன்

July 2, 2026
சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல் tn_sathisam
  • பாடல் பிறந்த கதை

சந்தோஷம் பொங்குதே – பாடல் பிறந்த கதை | ஆசிரியர்: மைக்கேல்

July 2, 2026

வேதாகம மனிதர்கள்

Daniel_prayer
  • வேதாகம மனிதர்கள்

தானியேலின் ஜெப வாழ்க்கை: கிறிஸ்தவர்களுக்கு 10 பாடங்கள்

Editorial Team June 23, 2026
தேவன் பயன்படுத்தின முதியவர்கள் தேவன் பயன்படுத்தின முதியவர்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவன் பயன்படுத்தின முதியவர்கள்

June 23, 2026
தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள் தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்
  • வேதாகம மனிதர்கள்

தேவ சமூகத்தை நேசித்த உன்னத பரிசுத்தவான்கள்

June 23, 2026

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்

tn_69
  • தியான செய்திகள்

கீழ்ப்படிதலின் பலன்

Editorial Team July 22, 2026
tn_67
  • தியான செய்திகள்

மனக்காயங்களின் மறுபக்கம்

Editorial Team July 22, 2026
tn_66
  • தியான செய்திகள்

வார்த்தையின் ஞானம்

Editorial Team July 22, 2026
tn_65
  • தியான செய்திகள்

நிராகரிப்பின் மறுபக்கம்

Editorial Team July 22, 2026

Tamil Christian Network (TCN Media) is an independent Christian digital media platform committed to sharing the Gospel of Jesus Christ through trustworthy Christian news, biblical teachings, Bible studies, sermons, testimonies, church history, inspirational articles, and other faith-based resources.

  • பிரசங்க குறிப்புகள்
  • கதைகள்
  • வரலாறுகள்
  • கட்டுரைகள்
  • கேள்வி பதில்கள்
  • சாட்சிகள்
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms & Conditions
  • Advertise With Us
  • Contact Us
Copyright © TCN Media All rights reserved. | MoreNews by AF themes.